ஆதார் எண்ணை மார்ச் 31-க்குள் இணைக்காவிட்டால் பான் எண் செயலிழந்து விடும்..

பான் எண்ணை வரும் 2020 ஆண்டு மார்ச் 31-க்குள் ஆதாருடன் இணைக்காவிட்டால் பான் எண் செயலிழந்து விடும் என வருமான வரித்துறை அறிவித்துள்ளது. 

பான் எண்ணை ஆதாருடன் இணைக்க பலமுறை கெடு விதிக்கப்பட்டு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், வரும் மார்ச் 31-ம் தேதி இறுதி கெடுவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

கடந்த  ஜனவரி 27 வரை கிட்டத்தட்ட 30.75 கோடிக்கும் அதிகமான பாண் எண்கள், ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், பான் எண்ணை வரும் மார்ச் 31-ம் தேதிக்குள் ஆதாருடன் இணைக்காதபட்சத்தில் பான் எண் செயலிழந்து விடும் என வருமான வரித்துறை அறிவித்துள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

 • உண்மைதான்
  58.45%
 • தவறானது
  19.67%
 • வழக்கமான விமர்சனம் தான்
  17.31%
 • கருத்துக் கூற விரும்பவில்லை
  4.57%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்