அதிக இரைச்சல் உள்ள மெட்ரோ நகரம் இதுதான்…

அதிக இரைச்சல் உள்ள மெட்ரோ நகரம் இதுதான்…

நான்கு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாலும், தேவையற்ற முறையில் வாகனத்தின் ஒலி எழுப்புதல் போன்ற காரணங்களினாலும் ஒலி மாசுபாடு அதிகரித்து வருகிறது. 

சிக்னலில் நிற்கும் போது ஹார்ன் அடிப்பவர்களை கட்டுப்படுத்தும் விதமாக மும்பையில் புதுமுயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. சிக்னலில் நிற்பவர்கள் ஹார்ன் அடிக்கும் போது அந்த ஒலியின் அளவை கணக்கிட ஒரு கருவி பொருத்தப்பட்டிருக்கும். ஒலி அளவு அதிகரிக்கும் போது சிக்னலில் காத்திருப்பதற்கான நேரமும் அதிகரிக்கும். இவ்வாறு பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்தியாவின் முக்கிய 6 மெட்ரோ நகரங்களில் சென்னையில் தான் அதிக இரைச்சல் காணப்படுவதாக தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து ஹைதராபாத், கொல்கத்தா, பெங்களூரு, மும்பை, டெல்லி ஆகிய நகரங்கள் இடம்பிடித்துள்ளன. 2018ம் ஆண்டு கணக்கின்படி, சென்னையின் 10 கண்காணிப்பு நிலையங்களில் 67.8 டெசிபல் அளவு இரைச்சல் பதிவாகியுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

கர்நாடக முதலமைச்சராக பசவராஜ் பொம்மை பதவியேற்பு; தமிழ்நாட்டுக்கு நன்மையாக இருக்குமா?

  • நட்புறவு ஏற்படலாம்
  • காவிரி பிரச்னை முடிவுக்கு வரும்
  • காவிரி பிரச்னை தீவீரமடையும்
  • மாற்றம் எதுவும் இருக்காது

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்