ஓ.பி.எஸ் உள்பட 11 எல்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு முடித்து வைப்பு..

தமிழக சபாநாயகர் நல்ல முடிவை எடுப்பார் என நம்பிக்கை தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம், ஓ.பன்னீர் செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்கம் கோரும் வழக்கை முடித்து வைத்துள்ளது. 

ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்கம் செய்யக் கோரும் வழக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்தது. 

இந்த வழக்கில், சபாநாயகரை நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட முடியாது என்றும், இந்த விஷயத்தில் சபாநாயகரே நல்ல முடிவை எடுப்பார் என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 

11 எல்.எல்.ஏக்களின் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கில் சபாநாயகரை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட முடியாது என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. இதையடுத்து உச்ச நீதிமன்றம் 11 எல்.எல்.ஏக்களின் தகுதி நீக்க வழக்கை முடித்து வைத்துள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

  • உண்மைதான்
  • தவறானது
  • வழக்கமான விமர்சனம் தான்
  • கருத்துக் கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்