யோகிக்கு பயங்கரவாத அச்சுறுத்தல்: உளவுத்துறை எச்சரிக்கை


உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்க்கு பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மீது கோரக்பூரிலுள்ள கோரக்நாத கோயிலில் பயங்கரவாத தக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக உளவுத்துறையினர் மாநில காவல்துறையினருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

உளவுத்துறையின் தகவலின் படி சிலர் பாத்திரிகையாளர் போர்வையில் கோயிலுக்குள் நுழைந்து யோகி ஆதித்யநாத் மீது தாக்குதல் நடத்தக்கூடும் என்றும், கோயில் மற்றும் முதல்வருக்கு பாதுகாப்பை பலப்படுத்துமாறு அறிவுறுத்தியது.

இதனை தொடர்ந்து கோரக்நாத் கோயிலில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து லக்னோவில் பாதுகாப்பு நலன் கருதி பத்திரிகையாளரிடமிருந்து யோகி விலகி இருப்பார் எனவும், ஆனால் கோராக்பூரில் உள்ள ஊடகங்கள் அவரை எளிதில் அனுக முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கோரக்பூர் பயணத்தில் கோயிலில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் ஜனதா தர்பாரில் உள்ளூர் மக்களையும் அவர் சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

 • உண்மைதான்
  58.45%
 • தவறானது
  19.67%
 • வழக்கமான விமர்சனம் தான்
  17.31%
 • கருத்துக் கூற விரும்பவில்லை
  4.57%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்