பியர் கிரில்ஸ் உடன் பயணம்… ரஜினிகாந்த் ட்வீட்!

டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகும் மேன் vs வைல்ட் நிகழ்ச்சி புகழ்பெற்றது. இதன் மூலம் பிரபலமானவர் பியர் கிரில்ஸ். இந்த நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. அவ்வப்போது பிரபலங்களையும் தன்னுடன் அழைத்து செல்வார்.

அந்த வகையில் பியர் கிரில்ஸ் உடன் பிரதமர் மோடி கலந்து கொண்ட நிகழ்ச்சி கோடிக்கணக்கானவர்களால் பார்க்கப்பட்டது. இதனை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் பியர் கிரில்ஸின் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். இதற்காக இருவரும் கர்நாடகாவில் உள்ள காட்டுக்கு சென்றனர். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.

இதுகுறித்து ட்வீட் செய்த பியர் கிரில்ஸ், ‘பிரதமர் மோடியை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் Into the wild with Beargrylls என்ற நிகழ்ச்சியில் இணைந்துள்ளார்’ என்றார். இந்நிலையில் இதுதொடர்பாக ட்வீட் செய்துள்ள ரஜினிகாந்த், ‘டிஸ்கவரி சேனலுக்கும், பியர் கிரில்ஸுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இது மறக்க முடியாத அனுபவம்’ என கூறியுள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

  • உண்மைதான்
  • தவறானது
  • வழக்கமான விமர்சனம் தான்
  • கருத்துக் கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்