நட்சத்திர பேச்சாளர்கள் அனுராக் தாக்கூர், பர்வேஷ் வர்மா.. பட்டியலில் இருந்து நீக்க உத்தரவு..

டெல்லி சட்ட சபை தேர்தலுக்கான நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியில் இருந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அனுராக் தாகூர் மற்றும் பர்வேஷ் சாஹப் வர்மாவின் பெயர்களை நீக்க பாஜகவுக்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

டெல்லி சட்ட சபை தேர்தல் பிப்ரவரி 8ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் பாஜக சார்பில் வெளியிடப்பட்ட நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் மத்திய இணை அமைச்சர் அனுராக் தாகூர் மற்றும் பாஜக எம்.பி., பர்வேஷ் சாஹிப் சிங் வர்மா ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. இவர்கள் இருவரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், தங்களது கட்சி வேட்பாளர்களை ஆதரித்தும், எதிர்க்கட்சிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையிலும் பேசியுள்ளனர். மத மற்றும் சாதி ரீதியாக இவர்கள் பேசியதற்கு பல்வேறு கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில், இவர்கள் இருவரும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியது தொடர்பாக டெல்லி தேர்தல் நடத்தும் அதிகாரி, இந்திய தலைமை தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை அளித்தார். இதையடுத்து, இந்த அறிக்கையின் அடிப்படையில் அனுராக் தாகூர் மற்றும் பர்வேஷ் வர்மாவின் பெயர்களை வரும் 30ஆம் தேதி பிற்பகல் 12 மணிக்குள் நீக்க வேண்டும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

  • உண்மைதான்
  • தவறானது
  • வழக்கமான விமர்சனம் தான்
  • கருத்துக் கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்