கொரோனா வைரஸ் பாதிப்பு.. சீன கர்ப்பிணிப் பெண்ணுக்கு அவசர ஆப்ரேஷன்!

சீனாவின் வுஹான் நகரில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் கர்ப்பிணியான சீனப் பெண்ணுக்கு அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தையை சீன மருத்துவர்கள் பாதுகாப்பாக வெளியே எடுத்துள்ளனர்.  

கொரோனா வைரஸ் பாதிப்பால், சீனா முழுவதும் 131 பேர் உயிரிழந்துள்ளனர். 6000க்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 27 வயதான கர்ப்பிணிப் பெண், கொரோனா வைரஸ் பாதிப்பால் கஷ்டப்படுவதாகவும், குழந்தை தனக்கு அதிக அழுத்தம் கொடுப்பதாகவும் கூறியுள்ளார். 

இது தொடர்பாக மருத்துவர் ஒருவர் கூறும்போது, குழந்தையை சுமந்த கர்ப்பிணி பெண், தனது நோய்க்கு சரியான சிகிச்சை பெற முடியவில்லை. தாய்க்கு காய்ச்சல் இருந்தது. இடைவிடாமல் இருமல் அவருக்கு இருந்தது என்றார். இருப்பினும் அவரது குழந்தையை காப்பாற்ற அறுவை சிகிச்சை செய்து குழந்தையை வெளியே எடுக்க முடிவு எடுக்கப்பட்டது என்றார்.

இதையடுத்து, கர்ப்பிணி பெண்ணின் குழந்தையை காப்பாற்றுவதற்காக, வுஹானில் உள்ள  மருத்துவமனை ஒன்றில் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தையை பாதுகாப்பாக வெளியே எடுத்துள்ளனர். ஒரு மணி நேரத்தில் ஆப்ரேஷன் மூலம் குழந்தை வெளியே எடுக்கப்பட்டுள்ளது. அங்குள்ள அரசு தொலைக்காட்சி இந்த தகவலை தெரிவித்துள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

 • உண்மைதான்
  58.45%
 • தவறானது
  19.67%
 • வழக்கமான விமர்சனம் தான்
  17.31%
 • கருத்துக் கூற விரும்பவில்லை
  4.57%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்