இப்படி செய்வது சரியா? அஸ்வின் ரவிசந்திரன் ட்வீட்!

இப்படி செய்வது சரியா? அஸ்வின் ரவிசந்திரன் ட்வீட்!

தமிழகம் முழுவதும் இன்று போகிப் பண்டிகை கொண்டாடப்பட்டது. மேலும் கடும் பனி காரணமாக புகை மண்டலம் சூழ்ந்தது. காற்று மாசு இயல்பை விடவும் அதிக அளவில் இருந்ததால் மக்கள் பாதிக்கப்பட்டனர். இதனால் விமானம் தரையிறங்குவதும் பாதிக்கப்பட்டது.

சென்னையில் இன்று புகைமூட்டமும், காற்று மாசும் அதிகரித்ததாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் காற்று மாசு குறித்து அஸ்வின் ரவிசந்திரன் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ட்வீட் செய்துள்ள அவர், ‘போகி பண்டிகை கொண்டாட்டத்தால் சென்னையில் இன்று அதிக பனிப்புகை நிலவியது. இதனால் மூக்கு அடைத்துக் கொண்டு சுவாச பிரச்சனை ஏற்பட்டது. பாரம்பரியம் என்ற பெயரில் பூமியில் பாதிப்பு ஏற்படுத்துவது சரியா என எனக்கு தெரியவில்லை.

இதுகுறித்து அனைவருக்கும் கற்றுக் கொடுத்து புரியவைக்க வேண்டும்’ என கூறியுள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்