மூன்று விஷயங்களுக்காக மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்.. ராகுல்காந்தி ட்வீட்!

மூன்று விஷயங்களுக்காக மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்.. ராகுல்காந்தி ட்வீட்!

ஜார்கண்டில் தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, மேக் இன் இந்தியா என முழக்கமிட்ட பாஜக ஆட்சியில் ரேப் இன் இந்தியா ஆகிவிட்டதாக விமர்சனம் செய்தார். பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் நாட்டில் அதிகரித்து வருவதாக குற்றஞ்சாட்டினார். மேலும் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

இந்நிலையில் நாடாளுன்மன்றத்தில் பாஜக உறுப்பினர்கள் ராகுல்காந்தியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தனர். அவர் மன்னிப்பு கோர வேண்டும் என மக்களவை, மாநிலங்களவைகளில் முழக்கங்களை எழுப்பினர். பதிலுக்கு காங்கிரஸ் கட்சியினரும் முழக்கமிட்டதால் அமளி ஏற்பட்டது. எனினும் தான் கூறிய கருத்துகளுக்கு மன்னிப்பு கேட்க முடியாது என ராகுல்காந்தி கூறியுள்ளார்.

இந்நிலையில் அவர் ட்விட்டரில் மூன்று விஷயங்களை குறிப்பிட்டு மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறியுள்ளார். குடியுரிமை சட்ட விவகாரத்தால் வடமாநிலங்களில் பற்றி எரியும் போராட்டம், இந்திய பொருளாதாரத்தை சீர்குலைத்தது, டெல்லி பாலியல் வன்கொடுமைகளின் தலைநகராக இருப்பது ஆகியவற்றை குறிப்பிட்டு மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என தெரிவித்துள்ளார். 2014ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது மோடி பேசிய வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

 • ஆம்
  63.9%
 • இல்லை
  27.9%
 • யோசிக்கலாம்
  4.71%
 • கருத்து கூற விரும்பவில்லை
  3.49%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்