டிசம்பர் - 16 நிர்பயா வழக்கு ... குற்றவாளிகள் நால்வரும் தூக்கிலிடப்படலாம்?

டிசம்பர் - 16 நிர்பயா வழக்கு ... குற்றவாளிகள் நால்வரும் தூக்கிலிடப்படலாம்?

டிசம்பர் 16, 2012 அன்று 23 வயது டெல்லி மருத்துவ மாணவி ஓடும் பேருந்தில் 6 பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இந்த கொடூர சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 

இது சம்பந்தப்பட்ட 6 பேரும் கைது செய்யப்பட்டனர். குற்றவாளிகளில் ஒருவர் சிறுவன். மற்றொருவர் ராம் சிங் என்பவர் விசாரணையின் போது, திஹார் சிறையில் தற்கொலை செய்து கொண்டார். சிறுவன் தண்டனையில் இருந்து தப்பினான்.

இந்நிலையில்,  முகேஷ்சிங், வினய்சர்மா, அக்சய், பவன்குமார் குப்தா ஆகிய 4 பேரும் குற்றவாளிகள் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. குற்றவாளிகளில் ஒருவரான வினய் சர்மா அளித்த கருணை மனு நிராகரிக்கப்பட்டது. 

இதையடுத்து, ஏற்கனவே முகேஷ் சிங், வினய் சர்மா, அக்சய் ஆகிய 3 பேரும் திஹார் சிறையில் அமைக்கப்பட்டுள்ளனர். ஆனால், பவன்குமார் குப்தா டெல்லி மண்டோலி சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், அவர் தற்போது திஹார் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார். 

இந்நிலையில், நிர்பயா மாணவி பலாத்காரம் சம்பவம் நடந்த டிசம்பர் 16ஆம் தேதி அன்று குற்றவாளிகள் 4 பேரும் தூக்கிலிடப்படலாம் என கூறப்படுகிறது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்