டெல்லி நிர்பயா கொலை… குற்றவாளிகளுக்கு தயாராகும் தூக்கு கயிறுகள்!

டெல்லி நிர்பயா கொலை… குற்றவாளிகளுக்கு தயாராகும் தூக்கு கயிறுகள்!

ஆங்கிலேயர் காலத்தில் இருந்த நடைமுறை தான் இந்தியாவில் பின்பற்றப்படுகிறது. இதன்படி, குற்றவாளிகளை தூக்கு கயிறு தொங்க விட்டு கொல்லும் பழக்கம் உள்ளது. கடந்த 2013ஆம் ஆண்டு நாடாளுமன்ற தாக்குதல் பயங்கரவாதி அப்சல்குரு தூக்கில் போடப்பட்டார். இதன் பிறகு எந்த குற்றவாளிகளும் தூக்கில் போடப்படவில்லை. கடந்த 6 ஆண்டுகளாக யாருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படவில்லை. 

இந்நிலையில், மரண தண்டனை கயிறுகளை தயாரிப்பதில் நிபுணத்துவம் பெற்ற பீகார் மாநிலத்தின் பக்ஸர் மாவட்டத்திலுள்ள ஒரு சிறைச்சாலையில், இந்த வார இறுதிக்குள் 10 கயிறுகளை தயார் நிலையில் வைத்திருக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இது 2012 டெல்லி நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கில் போடுவதற்காக இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. 

ஒரு கயிறு தயாரிக்க சுமார் 3 நாட்கள் என 10 கயிறுகள் தயாரிக்க 25 நாட்கள் வரை ஆகும் என்றும், ஒரு கயிறு விலை ரூ.1,725 முதல் ரூ.2000 எனவும் தெரியவந்துள்ளது.

டெல்லியில் ஓடும் பேருந்தில் இளம் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார். டிசம்பர் 16, 2012 அன்று நடந்த இந்த வழக்கில் இந்த மாத இறுதியில் தூக்கிலிடப்படலாம் தகவல் வெளியாகியுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்