இடைத்தேர்தல் தோல்வி... சித்தராமையா, தினேஷ் குண்டுராவ் ராஜினாமா! காங்கிரசுக்கு பின்னடைவு!!

இடைத்தேர்தல் தோல்வி... சித்தராமையா, தினேஷ் குண்டுராவ் ராஜினாமா! காங்கிரசுக்கு பின்னடைவு!!

கர்நாடக இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி 10க்கும் மேற்பட்ட இடங்களில் தோல்வியை தழுவியதால், அக்கட்சியின் சட்டப் பேரவைக் குழுத் தலைவர் சித்தராமையை பதவியை ராஜினாமா செய்துள்ளார். 

கர்நாடகாவில் 15 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த வாரம் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது.

இந்நிலையில், 10 தொகுதியில் பாஜக வெற்றி பெற்று முதல்வர் எடியூரப்பா ஆட்சியை தக்கவைத்துக்கொண்டார். மேலும் 2 தொகுதியில் பாஜக முன்னிலையில் உள்ளது. ஆனால் காங்கிரஸ் 2 இடங்களை மட்டுமே வென்றுள்ளது. 

இதையடுத்து, சித்தராமையா சட்டப் பேரவைக் குழுத் தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதன் மூலம் எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்தை சித்தராமையா இழந்தார். மேலும், கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் ராஜினாமா செய்துள்ளதால் அக்கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்