மலிவு விலையில் வெங்காய வாங்கச் சென்ற நபர்! உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம்!!

மலிவு விலையில் வெங்காய வாங்கச் சென்ற நபர்! உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம்!!

ஆந்திராவின் கிருஷ்ணா மாவட்டத்தில் வெங்காயம் வாங்க வரிசையில் காத்திருந்த 55 வயது நபரின் வாழ்க்கை முடிந்துபோன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்தியா முழுவதும் வெங்காயத்தின் விலை வரலாறு காணாத அளவு உயர்ந்தது. 1 கிலோ வெங்காயம் ரூ.180 வரை விற்பனை செய்யப்பட்டது. 

இந்நிலையில், ஆந்திராவில் மலிவான விலையில் அங்குள்ள உழவர் சந்தையில் வெங்காயம் விற்பனை செய்யப்பட்டது. இதனை அறிந்த மக்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் நின்று காத்திருந்தனர். 1 கிலோ ரூ.25க்கு மலிவு விலைவில் விற்கப்பட்ட வெங்காயத்தை வாங்க ஆர்வத்துடன் மக்கள் கிட்டத்தட்ட 3 கிலோ மீட்டர் தூரம் வரிசையில் நின்றுள்ளனர். 

வெங்காயம் வாங்குவதற்கு வரிசையில் நின்ற நூற்றுக்கணக்கானவர்களில் ஒருவர் இருதயக் கோளாறு ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். இதனை கண்ட வரிசையில் நின்றவர்களில் சிலர், அங்குள்ள உள்ளூர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்ததாக தெரிவித்துள்ளனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்