நீரிழிவு நோயாளிகளுக்கு உதவும் இஞ்சி!

நீரிழிவு நோயாளிகளுக்கு உதவும் இஞ்சி!
இஞ்சி மருத்துவ குணங்கள் நிறைந்த, உணவுப் பொருள் ஆகும். செரிமானத்திற்கு உறுதுணையாக உள்ளது. எனவே, இஞ்சி சித்தா மற்றும் ஆயுர்வேதத்தில் மூலிகைகள் தயாரிக்கப் பயன்படுகிறது.  நம் வீடுகளில் கூட,  வயிறு மற்றும் அஜீரணம் சம்பந்தமான பிரச்சினைகளுக்கு கைவைத்தியமாக பயன்படுகிறது. மருத்துவ குணங்கள் நிறைந்த இஞ்சி, டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு பயனளிக்குமா என்ற சந்தேகம் பலருக்கும் உண்டு. அதைப் பற்றி சற்று விரிவாக காண்போம். 
 பிளான்டா மெடிகா என்ற இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, நீண்ட காலமாக டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு  உள்ள சர்க்கரையின் அளவை சமநிலைப்படுத்த, இஞ்சி உதவுகிறது. மேலும், இவை  இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் குறைக்கிறது.
ஜர்னல் பிளான்டா மெடிகாவில் வெளியிடப்பட்ட மற்றொரு ஆய்வில், இஞ்சியில் ஜின்ஜரோல்ஸ் இருப்பதால், இன்சுலின் உதவி இல்லாமல், தசை செல்களுக்கான குளுக்கோஸின் வளர்ச்சியை மேம்படுத்துகிறது, எனவே உயர் இரத்த சர்க்கரை அளவை சமநிலைப்படுத்துகிறது.
 மேலும், 2014 ஆம் ஆண்டில் விலங்குகளின் மேல் நடத்தப்பட்ட ஆய்வில்,  இலவங்கப்பட்டை மற்றும் இஞ்சி கலவையை சாப்பிட்ட பருமனான எலிகளின் உடலில் சர்க்கரை அளவு குறைந்து, இன்சுலின் அளவு அதிகரித்திருந்தது.  உடலில் தேங்கியுள்ள அதிகப்படியான கொழுப்பை இஞ்சி குறைக்கிறது.
ஜர்னல் ஆஃப் காம்ப்ளிமென்டரி வெளியிட்ட ஆய்வு முடிவில், இஞ்சி பவுடரை தொடர்ந்து மூன்று மாதங்கள் பயன்படுத்துவதன் மூலம் அதிலுள்ள கிளைசிமெக் டைப் 2 நீரிழிவு நோயாளிகளில் இன்சுலின் அளவை மேம்படுத்த உதவுகிறது.
யுனைடெட் ஸ்டேட்ஸ் வேளாண்மைத் துறையின் (யு.எஸ்.டி.ஏ) தரவுகளின்படி, 100 கிராம் இஞ்சி வேரில் 80 கலோரிகள், 2 கிராம் உணவு நார் சத்து மற்றும் 1.82 கிராம் புரத சத்து உள்ளன. இஞ்சியை உட்கொள்வது பாதுகாப்பானதாகத் தோன்றும் அதே வேளையில், நீரிழிவு நோய் உள்ளவர்கள் அதை உணவில் சேர்ப்பதற்கு முன்பு மருத்துவரை அணுக வேண்டும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
 உங்கள் உணவில் இஞ்சியைச் சேர்க்க விரும்பினால், அனைத்து சமையல் குறிப்புகளிலும் அதன் பேஸ்ட்டைச் சேர்க்கலாம்! இது தவிர,  சாப்பிட்ட பிறகு இஞ்சியை பச்சையாக சாப்பிடலாம் அல்லது ஒரு நாளைக்கு இரண்டு முறை இஞ்சி டீ சாப்பிடலாம்!

Related Newsதொடர்புடைய செய்திகள் See Allஅனைத்தும் பார்க்க

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்