அண்ணாத்த திரைப்படம் குறித்து படக்குழு அதிரடி முடிவு..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடர்பாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா பரவல் தொடங்குவதற்கு முன்னரே ரஜினிகாந்தின் அண்ணாத்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. இந்த படத்தில், ரஜினியுடன் குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ்ராஜ் ஆகியோர் நடிக்கின்றனர். ஐதராபாத்தில் பாதி படப்பிடிப்பு எடுத்து முடிக்கப்பட்டது. கடந்த அக்டோபர் மாதம் ஊரடங்கில் தளர்வு அறிவித்தபோது, அண்ணாத்த படப்பிடிப்பு மீண்டும் தொடங்க திட்டமிடப்பட்டது.
அப்போது, தெலுங்கு மற்றும் இந்தி படப்பிடிப்புகளில் பங்கேற்றவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால், ரஜினிகாந்த் பாதுகாப்பை கருத்தில் கொண்டு படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்த நிலையில், மீண்டும் படப்பிடிப்புக்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் திரைப்பட நகரில் அரங்குகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அடுத்த மாதம் 2வது வாரத்தில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும், ரஜினிகாந்த் உள்ளிட்ட அனைத்து நடிகர்- நடிகைகளும் கலந்து கொள்வார்கள் என்றும் கூறப்படுகிறது. அண்ணாத்த திரைப்படம், ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டில் திரைக்கு வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Pollsகருத்துக் கணிப்பு
இங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னையில் நடைபெறவுள்ள 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது?
-
சரியான முடிவு
-
அனுபவக் குறைவு
-
கிரிக்கெட் அரசியல்
-
3-4 டெஸ்ட்டில் வாய்ப்பு