வெள்ளைபூக்களை தயாரித்த கம்ப்யூட்டர் பொறியாளர்கள்…

தமிழகத்தைச் சேர்ந்த அமெரிக்கா வாழ் கம்ப்யூட்டர் பொறியாளர்கள் இணைந்து தயாரித்துள்ள படம் வெள்ளைபூக்கள். இப்படத்தில் விவேக், இளங்கோவன் இயக்கி இருக்கிறார். ஜெரால்ட் பீட்டர் ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இப்படத்தில் விவேக், சார்லி, பூஜா, தேவ் மற்றும் பலர் நடித்துள்ளனர். மேலும் இவர்களுடன் ஹாலிவுட் நடிகை பெய்ஜ் ஹெண்டர்சன் நடித்திருக்கிறார்.
ராம்கோபால் இசையில் உருவாகும் இப்படத்தில், விவேக் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியான விவேக், அமெரிக்காவில் உள்ள தனது மகன் வீட்டிற்கு செல்கிறார். அங்கு சிலருடன் நட்புக் கொள்கிறார். எல்லாம் சுமூகமாக நடந்துக் கொண்டிருக்கும் போது, அவரது நண்பர்கள் அடுத்தடுத்து கொல்லப்படுகின்றனர். கொலையாளி யார் என்பதை விவேக் கண்டுபிடிப்பது தான் கதையாம். இதன் முழு படப்பிடிப்பும் அமெரிக்காவில் நடைபெற்றுள்ளது.
Pollsகருத்துக் கணிப்பு

தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இடைக்கால பட்ஜெட்.! பற்றிய உங்கள் கருத்து..!
-
வரவேற்கக்கூடியது
-
தேர்தல்நேர அறிவிப்புகள்
-
கடன்சுமை அதிகரிக்கும்
-
கருத்தில்லை
Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

வட சென்னையில் நடந்த குற்றக் கதை!
