போதைப்பொருள் சர்ச்சை… திரையுலகினருக்கு விஷ்ணு விஷால் வேண்டுகோள்….

போதைப்பொருள் சர்ச்சை… திரையுலகினருக்கு விஷ்ணு விஷால் வேண்டுகோள்….

சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணத்தை தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகள் பாலிவுட்டில் உருவாகியுள்ளது. கங்கனா ரனாவத்த்தின் கருத்துகள், போதை மருந்து விவகாரம் என்று பல சர்ச்சைகள் வந்து கொண்டே இருக்கிறது. 

இதற்கிடையில் போதைப்பொருள் விவகாரத்தில் சுஷாந்த் சிங்கின் காதல் ரியா சிக்கினார். மேலும் கன்னட நடிகைகள் ராகினி திரிவேதி, சஞ்சனா கல்ராணி ஆகியோர் போதை பொருள் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுடன் பல நடிகர் நடிகைகள் பெயர் வெளியாகும் என்று தெரிகிறது. இதனால் திரையுலகில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் திரையுலகினருக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், “என் அன்பார்ந்த திரைத்துறை நண்பர்களே, ஒரு சிலரின் சுயநலமான நோக்கத்தால் தான் சில விஷயங்கள் மோசமாகச் சித்தரிக்கப்படுகின்றன. மக்கள் நாம் பேசுவதை மதிக்காத நிலைக்கு நாம் தரம் தாழ்ந்து செல்ல வேண்டாம். ஒருவர ஒருவர் ஆதரிப்போம், துறையை வளர்ப்போம் என்று தெரிவித்துள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

 • ஆம்
  64.44%
 • இல்லை
  27.81%
 • யோசிக்கலாம்
  4.33%
 • கருத்து கூற விரும்பவில்லை
  3.42%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்