நடிகை பூர்ணாவிடம் பணம் பறிக்க முயன்ற 2 பேர் கைது…

நடிகை பூர்ணாவிடம் பணம் பறிக்க முயன்ற 2 பேர் கைது…

நடிகை பூர்ணாவை மிரட்டி பணம் பறிக்க முயன்ற வழக்கில், கோவையை சேர்ந்த இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

தமிழில் முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு, கொடி வீரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை பூர்ணா. இவர் கேரள மாநிலம் கொச்சியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

பூர்ணாவிடமும் அவரின் குடும்பத்தினரிடமும் நகைக்கடை அதிபர் என்று கூறி திருமண மோசடி கும்பல் பணம் பறிக்க முயன்றது. இதுதொடர்பான பூர்ணா அளித்த புகாரின் பெயரில் ட்வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வரும் நிலையில் இந்த வழக்கில் இதுவரை 10க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தியதில் மாடல் அழகிகள் உள்பட மேலும் பல பெண்களிடமும் சினிமா வாய்ப்பு தருவதாக கூறி இந்த கும்பல் பணம் மற்றும் நகை பறித்தது தெரியவந்தது. மேலும் பாலக்காட்டில் உள்ள ஓட்டலில் அடைத்து வைத்து கொடுமைப் படுத்தியதும் அம்பலமானது.

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக கோவையை சேர்ந்த நாஜீப் ராஜா, ஜாபர் சாதிக் ஆகியோரை போலீஸார் கைது செய்து எர்ணாகுளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
    63.48%
  • இல்லை
    27.83%
  • யோசிக்கலாம்
    4.97%
  • கருத்து கூற விரும்பவில்லை
    3.73%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்