இயக்குனர் திடீரென மரணம்.. கைநழுவிய தல அஜித்தின் ஆசை...

இயக்குனர் திடீரென மரணம்.. கைநழுவிய தல அஜித்தின் ஆசை...

‘அய்யப்பனும் கோஷியும்’ என்ற மலையாளப்படம் கடந்த பிப்ரவரி மாதம் முதல் வாரம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

சாஷி இயக்கத்தில் உருவாக  இந்தப் படத்தில் அய்யப்பனாக பீஜூமேனனும், கோஷியாக பிருத்விராஜும் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால் தென்னிந்திய மொழிகளிலும், பாலிவுட்டிலும் ரீமேக் செய்யும் பணிகள்  நடக்கிறது. இதற்கிடையில்  இப்படத்தின் இயக்குநர் சாஷி மரணமடைந்ததால் திரையுலகினர் சோகத்தில் உள்ளனர்.

இந்நிலையில் ’அய்யப்பனும் கோஷியும்’ படத்தை பார்த்து வியந்த நடிகர் அஜித், இயக்குநர் சாஷியை போனில் அழைத்து பாராட்டினாராம். மேலும் அவருடன் கூட்டணி சேர்ந்து படம் செய்யவும் விரும்பினாராம். இதையடுத்து அஜித்துக்காக கதை தயார் செய்த சாஷி, அதை கொரோனா ஊரடங்குக்கு பின் சொல்ல காத்திருந்தாராம். 

இதனிடையே கடந்த ஜூன் 18-ந் தேதி சாஷி உயிரிழந்ததால், அஜித்தின் ஆசை நிறைவேறாமல் போனது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்