வீடியோ நீக்கப்பட்டது ஏன்? ரஜினிகாந்த் விளக்கம்!

வீடியோ நீக்கப்பட்டது ஏன்? ரஜினிகாந்த் விளக்கம்!
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் நேற்று நாடு முழுவதும் சுய ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இந்நிலையில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நடிகர் ரஜினிகாந்த் டிவிட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். ஆனால் அதனை டிவிட்டர் நிர்வாகம் நீக்கிவிட்டது. இது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியது. 

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள ரஜினிகாந்த், 'நான் பதிவு செய்த வீடியோவில் 12 முதல் 14 மணி நேரம் வெளியே செல்லாமல் இருந்தால், இந்த பாதிப்பு மூன்றாம் நிலைக்கு செல்வதை தடுக்க முடியும் என கூறியிருந்தேன். இன்று ஒரு நாள் மட்டும் அப்படி இருந்தால் போதும் என தவறாக புரிந்து கொள்ளப்பட்டு அந்த வீடியோ அதிகம் பகிரப்பட்டது. அதனால் டிவிட்டர் நிர்வாகம் அதனை நீக்கி உள்ளது.

அரசு சொல்வதை பின்பற்றி இந்த கொடிய வைரஸை வீழ்த்துவதற்கான முயற்சியில் ஈடுபடுவோம். என்னுடைய வீடியோவின்  நோக்கத்தை புரிந்துகொண்டு, ஆதரித்து மக்களிடம் பதிவை சரியான முறையில் கொண்டு சேர்த்த அனைவருக்கும் நன்றி' என கூறியுள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழ் திரைப்படங்களை நேரடியாக ஆன்லைனில் திரையிடுவதை பற்றி உங்களது கருத்து.?

 • சரியான முடிவு
  59.45%
 • தவறான முடிவு
  20.61%
 • படம் வெற்றி பெறுவதே முக்கியம்
  11.93%
 • படத்தின் லாபத்திற்கு உதவும்
  8.01%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்