சூர்யா பதுங்கும் புலி என நினைக்கிறார்கள்.. சிவகுமார்!

காப்பான் படத்தினை தொடர்ந்துசூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் சூரரைப்போற்று. சுதா கொங்கரா, இப்படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தில் அபர்ணா பாலமுரளி, மோகன் பாபு, கருணாஸ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இந்தியாவின் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகிறது.

இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.  நேற்றைய பாடல் வெளியீட்டு விழாவின் போது பேசிய சிவகுமார், ‘நான் சினிமாவுக்கு வந்த போது எனது குடும்பத்தில் இன்னொரு நடிகர் வருவார் என எதிர்பார்க்கவில்லை. எக்ஸ்போர்ட் கம்பெனியில் வேலை செய்து கொண்டிருந்த சூர்யா திடீரென நடிகரானார். சூர்யா ஒரு புதையல். இப்படி ஒரு மகனை கொடுத்த இறைவனுக்கு நன்றி.

சூர்யாவை பதுங்கும் புலி என நினைக்கிறார்கள். அவர் விரைவில் பாய்வார். அதற்கான நேரம் நெருங்கி விட்டது’ என கூறியுள்ளார். 

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

  • உண்மைதான்
  • தவறானது
  • வழக்கமான விமர்சனம் தான்
  • கருத்துக் கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்