போஸ்டர் ஒட்டப் போகிறேன்… மிஷ்கின் பளீச்!

மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் சைக்கோ. இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. கடந்த 2013ம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் வெளியான படம் ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ அந்தப் படம் வெளியான போது விளம்பரப்படுத்த போதிய பணம் இல்லாததால் இயக்குநர் மிஷ்கினே தெருத்தெருவாக சென்று போஸ்டர் ஒட்டினார்.

கடந்த ஆண்டு தமிழில் சிறந்த பிராந்திய மொழிப் படத்திற்கான விருது பெற்ற பாரம் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய மிஷ்கின், ‘இயக்குநர்கள் ராம், வெற்றிமாறன் இந்தப் படம் பார்க்க என்னை அழைத்தார்கள். படம் மிகவும் யதார்த்தமாகவும், எளிமையாகவும் அமைந்தது என்னை கவர்ந்தது. பேரன்பு, அசுரன், சைக்கோ படத்தை விட பாரம் பெரிய படம்.

இந்தப் படத்திற்காக தமிழ்நாட்டில் நான் போஸ்டர் ஒட்டப் போகிறேன். எனக்கும், ராமுக்கும் வேலை இல்லை. அதனால் சாலை வழியே பயணம் செய்து போஸ்டர் ஒட்டுவதை செய்வோம். வெற்றிமாறன் இதற்காக நீங்கள் உதவ வேண்டும்’ என கூறியுள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

  • உண்மைதான்
  • தவறானது
  • வழக்கமான விமர்சனம் தான்
  • கருத்துக் கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்