லாஸ்லியா படத்தில் இணைந்த மற்றொரு பிக்பாஸ்-3 பிரபலம்... ரசிகர்கள் ஹேப்பி

கமல் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியில் பங்கேற்றார் லாஸ்லியா. இலங்கை சேர்ந்தவரான இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.இந்த நிகழ்ச்சிக்கு பிறகு லாஸ்லியா எப்போது சினிமாவில் அறிமுகமாவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது.

இந்நிலையில் லாஸ்லியா நடிக்கும் புதிய படம் பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. இயக்குநர் ஆல்பர்ட் ராஜா இயக்கத்தில் உருவாகவுள்ள இந்த படத்தில் ஆரி நாயகனாக நடிக்க, ஸ்ருஷ்டி டாங்கே நாயகியாக நடிக்கிறார். இந்த படத்தின் மூலம் லாஸ்லியா சினிமாவில் அறிமுகமாகிறார். 

மேலும் இந்த படத்தில் நகைச்சுவை நடிகர் செந்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இந்த படத்தின் டைட்டில் விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் பிக்பாஸ் சீசன் 3யின் மற்றொரு பிரபலமான அபிராமியும் இணைந்துள்ளார். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

 • உண்மைதான்
  58.45%
 • தவறானது
  19.67%
 • வழக்கமான விமர்சனம் தான்
  17.31%
 • கருத்துக் கூற விரும்பவில்லை
  4.57%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்