பார்ப்பவர்களுக்கு பரிதாபமாக இருக்கும்.. ஹிப்ஹாப் ஆதி பளீச்!

மீசையை முறுக்கு படத்திற்கு பிறகு ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் உருவாகியுள்ள படம் நான் சிரித்தால். சுந்தர்.சி தயாரிக்கும் இப்படத்தை இராணா இயக்குகிறார். ஐஸ்வர்யா மேனன் கதாநாயகியாக நடிக்கிறார். 

இந்தப் படம் பற்றி ஆதி கூறும் போது, ‘ இணையத்தில் வெளியான கெக்க பிக்க குறும்படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இதனை திரைப்படமாக மாற்ற விரும்பினேன். இயக்குநர் ஒரு மாதத்தில் முழு கதையையும் எழுதிக் கொடுத்தார். இந்தப் படம் முழுநீள காமெடி படம். இதில் நான் நகைச்சுவை கதாநாகனாக நடித்திருக்கிறேன். 

முதல் பாதியில் என்னுடைய கதாப்பாத்திரத்தை எல்லோரும் கேலி செய்து சிரிக்கும் போது பார்ப்பவர்களுக்கு பரிதாபமாக இருக்கும். படம் முழுக்க அனைவரும் சிரிக்கும்படி காட்சிகள் இருக்கும். ஆனாலும் படத்தில் ஒரு வலிமையான கருத்து இருக்கும். 

இசை பொதுவான ஒன்று தான். இசைக்கும் விதம் தான் ஒவ்வொரு இடத்திற்கும் ஏற்ப வேறுபடும். இன்னும் மூன்று ஆண்டுகளில் எங்கு பார்த்தாலும் ராப் பாடல்கள் தான் அதிகம் இருக்கும்’ என கூறியுள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

 • உண்மைதான்
  58.45%
 • தவறானது
  19.67%
 • வழக்கமான விமர்சனம் தான்
  17.31%
 • கருத்துக் கூற விரும்பவில்லை
  4.57%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்