மீண்டும் கூடும் 'நானும் ரவுடிதான்' பட கூட்டணி?

கடந்த 2015ம் ஆண்டு வெளிவந்த நானும் ரவுடிதான் படம் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், விஜய்சேதுபதி-நயன்தாரா நடிப்பில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தினை தொடர்ந்து விக்னேஷ் சிவன் சூர்யா நடிப்பில் இயக்கிய தானா சேர்ந்த கூட்டம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. 

இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக விக்னேஷ் சிவன் எந்த படமும் இயக்கவில்லை. இதற்கிடையில் சிவகார்த்திகேயனை வைத்து ஒரு புதிய படம் இயக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. ஆனால் அந்த படமும் ஆரம்பிக்காமலேயே கைவிடப்பட்டது. 

இந்நிலையில் மீண்டும் நானும் ரவுடிதான் கூட்டணியை விக்னேஷ் சிவன் இணைத்துள்ளதாக கூறப்படுகிறது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா மீண்டும் ஜோடி சேரவுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளதாகவும், இந்த படத்தை தற்போது மாஸ்டர் படத்தை தயாரித்து வரும் லலித் என்பவர் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளிவரும் என தெரிகிறது. அத்துடன் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி விட்டதாகவும், வரும் ஏப்ரல் முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

  • உண்மைதான்
  • தவறானது
  • வழக்கமான விமர்சனம் தான்
  • கருத்துக் கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்