மீடூ புகாரால் படவாய்ப்புகளை இழந்ததால் ரூட்டை மாற்றிய பார்வதி….

தமிழில் பூ, மரியான், சென்னையில் ஒரு நாள், பெங்களூர் நாட்கள் படங்களில் நடித்தவர் பார்வதி. இவர் மலையாளத்தில் முன்னணி நடிகையாக திகழ்ந்தார். இந்நிலையில் கேரளாவில் நடிகை கடத்தல் வழக்கில் நடிகர் திலீப்புக்கு எதிராக குரல் கொடுத்தார். 

அத்துடன் மலையாள நடிகர் சங்கத்தில் திலீப்பை மீண்டும் சேர்த்த மோகன்லாலையும் எதிர்த்து பேசினார். மேலும் மீ டூ வில் பாலியல் புகார் கூறும் பெண்களுக்கு ஆதரவாக நடிகைகள் ஆரம்பித்த அமைப்பில் முக்கிய பங்கு வகித்தார். இதனால் மலையாள நடிகர்கள் தொடர்ந்து பார்வதியை புறக்கணித்து வருகின்றனர். இதனால் கடந்த ஒரு ஆண்டாக இவருக்கு புதிய பட வாய்ப்புகள் இல்லை. 

இதுகுறித்து பார்வதி பேசுகையில், ‘நடிகைகள் பாதுகாப்புக்காக மலையாள திரைப்பட பெண்கள் கூட்டமைப்பை உருவாக்கினோம். அதன் பிறகு எனக்கு புதிய படங்களில் நடிக்க வாய்ப்பு தராமல் ஒதுக்குகிறார்கள். ஹிந்தியில் மீ டு வில் பாலியல் புகார் கூறும் நடிகைகளுக்கு பட வாய்ப்புகள் அளிக்கின்றனர். ஆனால் இங்கு ஒதுக்குகிறார்கள். பல வெற்றி படங்கள் கொடுத்த எனக்கு ஒரு வருடமாக புதிய படங்கள் இல்லை’ என்று கூறினார். 

இதனை தொடர்ந்து தற்போது பார்வதி, படம் இயக்க முடிவு செய்துள்ளாராம். இதற்காக 2 கதைகளை எழுதி தயாராக வைத்துள்ளார். இந்த படங்களுக்கு சில மாதங்களில் நடிகர், நடிகைகள் தேர்வு செய்து படப்பிடிப்பு தொடங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

  • உண்மைதான்
  • தவறானது
  • வழக்கமான விமர்சனம் தான்
  • கருத்துக் கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்