தனுஷ் படத்தில் நடிக்கிறாரா அக்‌ஷய் குமார்..?

தனுஷ் படத்தில் நடிக்கிறாரா அக்‌ஷய் குமார்..?

தனுஷ் நடிப்பில் பாலிவுட் நடிகர் ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் உருவாகவுள்ள ஹிந்தி படத்தில் அக்‌ஷய் குமார் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

பாலிவுட்டில் தனுஷ் ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் ’ராஞ்சனா’ படத்தின் மூலம் அறிமுகமானார். இந்தப் படம் நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து பால்கி இயக்கத்தில் அமிதாப் பச்சன், அக்‌ஷரா ஹாசனுடன் ’ஷமிதாப்’ படத்தில் நடித்தார். இரண்டு படங்களும் ஹிட்டாக பல ஹிந்தி பட வாய்ப்புகள் வந்தாலும், தனுஷ் தொடர்ந்து தமிழ் படங்களில் தொடர்ந்து கவனம் செலுத்தி வந்தார். 

அந்த வகையில் கடந்த ஆண்டு வெளியான ’அசுரன்’, ’எனை நோக்கி பாயும் தோட்டா’ என படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இந்த ஆண்டு பட்டாஸ், கர்ணன், செல்வராகவன் படம், ராம் குமார் மற்றும் கார்த்திக் சுப்புராஜ் படம் என அடுத்து அடுத்து படங்கள் ரிலிஸுக்கு தயாராகி வருகின்றன. 

இந்நிலையில் தனுஷ் மீண்டும் ஹிந்தியில் ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் நாயகியாக சாரா அலிகான் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தில் அக்‌ஷய் குமார் ஒரு கவுரவ கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்