பிறக்கும்போது காற்று மூக்கில் நுழைந்தவுடன் சுவாசிக்க ஆரம்பிக்கிறோம். உடலில் ஒவ்வொரு உயிரணுவிற்கும் ஆக்ஸிஜன் எனும் பிராணவாயு தேவைப்படுகிறது. உணவில் இருந்து கிடைக்கும் குளுகோஸை எரித்து தேவையான சக்தியைப் பெற பிராணவாயு அவசியம். சில நிமிடங்களுக்கு மேல் பிராணவாயு கிடைக்காவிட்டால் மூளை செயல்திறன் இழந்துவிடும்.பச்சிளங்குழந்தைகள் நிமிடத்திற்கு 50 முறைகூட சுவாசிக்கும். ஆரோக்கியமான மனிதன் நிமிடத்திற்கு 12 முதல் 16 முறை சுவாசிக்கிறான். ஒவ்வொரு முறையும் 500மி.லி காற்றை உள்ளிழுக்கிறான்.மூச்சில் இருக்கும் ரகசியம்எவ்வளவு முயன்றாலும் சில நிமிடங்களுக்கு மேல் மூச்சை இழுத்துப்பிடித்து நிறுத்தமுடியாது. நுரையீரல்கள் அனிச்சையாக விரிந்து சுருங்கி செயல்படுவதில்தான் உயிரின் சூட்சுமம் இருக்கிறது. அதனால்தான் இதை உயிர்மூச்சு என்கிறோம்.காற்றுமண்டலத்தைவிட நுரையீரலில் அழுத்தம் குறைந்தால் வெளிக்காற்று உள்வருவதும், நுரையீரலில் அழுத்தம் அதிகரித்தால் அசுத்தக்காற்று வெளிச்செல்வதும் (Pressure gradient) பௌதிக விதிகளுக்கு உட்பட்டது. உதரவிதானமும், மார்புக்கூட்டின் விசேஷ தசைகளும் (Intercostal muscles) இந்த அழுத்தமாறுபாடு தாமாக நடைபெற வழிவகை செய்யும். அத்துடன் கழுத்தில் காணப்படும் ரத்தக்குழாயும் (Carotid artery), இதயப்பெருநாடியும் (Aortic Arch) ரத்தத்தில் வாயுக்களை கண்காணித்து மூளைக்கு தெரியப்படுத்த, சுவாசக்கட்டுப்பாட்டு மையம் (Respiratory Rhythm Centre) செயல்பட்டு எந்நேரமும் சுவாசம் நடைபெறுவதை உறுதிப்படுத்தும்.சுவாசப்பாதைசுவாசம் நாசித்தொண்டை, குரல்வளை, மூச்சுக்குழாய், கிளைசுவாசக்குழாய்கள் (Bronchi), நுண்கிளைசுவாசக்குழாய்கள் (Bronchioles) வழியே பயணித்து காற்று நுண்ணறைகளை (Alveoli) அடையும். 300 மில்லியனுக்கும் மேற்பட்ட காற்றுப்பைகளின் மேற்பரப்பில்தான் பிராணவாயு வடிகட்டப்பட்டு ரத்தக்குழாய்களுக்கு மாற்றப்படுகிறது. ரத்தத்தில் இருக்கும் ஹீமோகுளோபின் இவற்றை எடுத்துக் கொண்டு ஒவ்வொரு உயிரணுவிற்கும் சப்ளை செய்யும். எதிர்திசையில் உயிரணுக்கள் வெளிப்படுத்தும் கரியமிலவாயு ரத்தத்தில் கலந்து காற்றுப்பைகளை அடைந்து வெளிமூச்சில் வரும்..மூச்சுத்திணறல் ஏன் உண்டாகிறது?சுவாசம் முழுமைபெற காற்று உள்ளும்புறமும் தடையின்றி சென்று வரவேண்டும் (Pulmonary ventilation). காற்றுநுண்ணறைகளுக்கும் ரத்தக்குழாய்களுக்கும் இடையே வாயு நேரடிப்பரவல் (Diffusion) இருக்கவேண்டும். பிராணவாயுவும் கரியமிலவாயுவும் தொய்வில்லாமல் சீராக பரிமாற்றப்படவேண்டும் (Gas Exchange). நுரையீரலுக்கும் ரத்தத்திற்கும் மேற்பரவல் (Perfusion) இருக்கவேண்டும். சுவாசம் கட்டுக்குள் இருக்கவேண்டும் (Regulation).எல்லாம் ஒழுங்காக நடந்தால் நிம்மதிதான். ஆனால், சுவாசத்தை பாதிக்க பல காரணிகள் இருக்கின்றன. காற்றில் இருக்கும் மாசு நுரையீரலை பாதிக்கலாம். வாகனப்புகை மூக்கை அரிக்கலாம். நுண்கிருமிகள் தொற்றை உண்டாக்கி சுவாசப்பாதையை குறுகவைக்கலாம். ஒவ்வாமை சுவாசத்தை பாதிக்கலாம். கல்குவாரி, கட்டட வேலைகளில் வெளிப்படும் தூசி சுவாசத்தில் கலக்கலாம். சொந்தச் செலவில் சூன்யம் வைத்துக் கொள்வதைப்போல் சிகரெட் புகை நுரையீரலை தகிக்கவும், அருகில் இருப்போரை மூச்சுத்திணறவும் செய்யலாம். இதுதவிர, இதயநோயும், ரத்தசோகையும் மூச்சை பாதிக்க வாய்ப்புண்டு. ரத்தத்தில் ஆக்ஸிஜன் லெவல் குறைந்தாலும் மூச்சுத் திணறி சருமநிறம் மாறும்.சுவாசப்பாதையில் எந்த இடத்தில் சிக்கல் ஏற்படுகிறதோ அதற்கேற்றாற்போல் பிரச்சினைகள் தலைதூக்கும். ரத்தப்பரிசோதனை, மார்புஎக்ஸ்ரே மற்றும் சிடிஸ்கேன் மூலம் பாதிப்பின் தன்மையை உறுதிப்படுத்த முடியும். என்ன வகை பாதிப்புகள் மூச்சுத்திணறலை உண்டாக்குகின்றன, அவற்றை சமாளிப்பது எப்படி என்று பார்ப்போம்.நுண்கிருமி தாக்கம்மூச்சுத்திணறலுக்கு முக்கியக் காரணம் வைரஸ், பாக்டீரியா போன்ற நுண்கிருமிகள்தான். இவை இருமல், தும்மல் மற்றும் காற்றில் இருந்து மூச்சுடன் உள்நுழையும்போது முதல்பாதிப்பு தொண்டையில்தான். பெரும்பாலும் ரைனோ வைரஸ் (Rhino virus), நோரோவைரஸ் (Norovirus), RSV (Respiratory Syncytial virus) போன்றவை ஜலதோஷத்தை உண்டாக்கும். பாக்டீரியாவும் (Streptococcus Pyogenes) தொற்றை உண்டாக்கும். இன்ஃப்ளூயன்ஸா-கி ஃப்ளூ வைரஸ் நூறாண்டு காலமாக சுவாசத்தை பாதித்து வருகிறது. இதன் திரிபான H3 N2 சளி, கபம், காய்ச்சல், தொண்டைவலி, உடல்வலியை ஏற்படுத்தி மூச்சுத்திணறலை உண்டாக்கி வருகிறது. கொடூர கொரோனாவைப் பற்றி சொல்லவே வேண்டாம். அது சுவாசமண்டலத்தில் ACE2 (Angiotension Converting Enzyme) ஏற்பிகளில் நுழைந்து உயிரணுக்களுடன் தங்களையும் தந்திரமாக பிரதி எடுத்துப்பெருகி மூச்சுத்திணறலை உண்டாக்கி நோயெதிர்ப்புத்திறனைக் குழப்பி சொந்த உயிரணுக்களையே தாக்கவைத்து லட்சக்கணக்கான மரணங்களையும் நிகழ்த்திவிட்டது..மேல்சுவாசப்பாதை பாதிப்புகள்மேல்சுவாசப்பாதை என்பது மூக்கு, தொண்டை, தொண்டைக்குழல், குரல்வளை வரை. மூக்குத்தண்டு (Septum) விலகி இருந்தால் மூச்சு விடுவதில் சிரமம் இருக்கும். அடினாய்டில் வீக்கம் ஏற்பட்டால் சிறார்கள் வாயால் மூச்சுவிட்டு உதடு காயும். தேவைப்பட்டால் அறுவைசிகிச்சையில் இவற்றை சரி செய்யலாம்.தொற்று ஏற்படும்போது நெற்றி, கன்னம், மூக்கிற்கு அருகே எலும்புகளுக்கு இடையே இருக்கும் சைனஸ்பாதை வழியே சளி இறங்கும். மூக்கடைக்கும். கண்களுக்கு கீழே வலி உண்டாகும். இருமல், சோர்வு, காய்ச்சல், தலைவலி உண்டாகும். சளி இளம்பச்சை நிறத்திலும் சுவாசம் நாற்றத்துடன் இருந்தால் அது பாக்டீரியாவின் கைவரிசை. இதற்கு ஆன்டிபயாடிக் மருந்துகள் கைகொடுக்கும்.தொண்டைக்குழியில் சேரும் சளி கெட்டியாகி எரிச்சலை உண்டாக்கும். உணவுத்துணுக்குகள் தொண்டையில் ஒட்டிக்கொண்டு பாக்டீரியாக்களை வரவழைக்கும். இருமல் தும்மல் வரும். பாதிப்பு தொடர்ந்தால் காய்ச்சல், உடல்வலி, சோர்வு உண்டாகும். காதுவலி கழுத்தில் நெறி கட்டுதல் ஏற்படலாம். உப்புநீரில் வாய் கொப்பளிப்பது நல்லது. தொண்டைவறட்சி (Sore throat) வைரஸால் உண்டாவது. பாக்டீரியாவினால் உண்டாவது தொண்டை அழற்சி (Strep throat).உணவுக்குழலும் மூச்சுக்குழலும் பிரியும் இடத்தில் இருக்கும் வால்வுப்பகுதி பாதிக்கப்பட்டாலும் (Epiglottis) மூச்சு பாதிக்கும். குரல்வளை வைரஸால் பாதிக்கப்பட்டால் (Laryngitis) குரல் கம்மும். விழுங்குவதில் சிரமம் ஏற்படும்.அலர்ஜியால் உண்டாவது ஆஸ்துமா. பரம்பரையாகவும் வரலாம். காற்றுப்பாதை குறுகி சுவாசம் விசில் அடிப்பதுபோல் கேட்கும். புகை, தூசி, சருகு போன்றவற்றை தவிர்க்கவேண்டும். மருத்துவர் பரிந்துரையின் பேரில் இன்ஹேலர் மற்றும் மருந்துகள் தேவைப்படும்.தேவையான அளவு தண்ணீர் குடிக்கவேண்டும். ஐஸ்கிரீம் மற்றும் குளிர்பானங்கள் வேண்டாம். தேவையான ஓய்வு எடுப்பது நல்லது. மூச்சுத்திணறல் மற்றும் காய்ச்சல் தொடர்ந்தால் மருத்துவரைக் காண்பது நலம். நாமாகவே கடையில் மருந்து வாங்கி உட்கொள்வது சரியல்ல. காய்ச்சல் என்பது தொற்றின் தாக்குதலை நம் நோயெதிர்ப்புத்திறன் எதிர்கொள்வதைக் காட்டும் அறிகுறி. அந்த அறிகுறியை குறைப்பதால் மட்டுமே அடிப்படை நோய் குணமாகாது. தொற்றுவது பாக்டீரியாவா அல்லது வைரஸா, அவற்றின் தன்மை என்ன என்று தெரியாமல் சுயமருத்துவம் செய்வது கேள்வியே புரியாமல் பரீட்சையில் பதில் எழுதுவதுபோல. சரியான சிகிச்சை எடுத்துக்கொள்ளும் வரை அரியர்ஸ் தேர்வு எழுதுவதுபோல் நுண்கிருமி பாதிப்பு தொடர்ந்துகொண்டே இருக்கும்!கீழ்சுவாசப்பாதை பாதிப்புகள்கீழ்சுவாசபாதிப்புகள் மூச்சுத்திணறலுடன் ஆபத்துகளை உண்டாக்கவல்லவை. குரல்வளைப்பாதை குறுகுவது (Tracheal Stenosis), குருத்தெலும்புகள் சேதமாகி பலவீனமாவது (Tracheomalacia) போன்றவை உரிய மருத்துவசிகிச்சை தேவைப்படுபவை.மூச்சுக்குழாய் அழற்சி (Bronchitis) இருமல் காய்ச்சலை உண்டாக்கும். பெரும்பாலும் குழந்தைகளை பாதிப்பது இன்ஃப்ளூயன்ஸா வைரஸ். இருமல், மார்புதசைவலி, சோர்வு, மூச்சுத்திணறல் உண்டாகும். இருமும்போது மஞ்சள்நிறத்தில் சளி தென்படலாம். 1-3 வாரம் வரைகூட இருமல் நீடிக்கும். அறிகுறிகளுக்கு ஏற்ப காய்ச்சல் மற்றும் இருமல் மருந்துகள்/டானிக் பயன்தரும். பலவீனமானவர்கள், புகைப்பிடிப்பவர்களை அதிகம் பாதிக்கும். கவனிக்காமல் இருந்தால் காற்றுப்பாதை குறுகி மூச்சுத்தடை ஏற்படலாம் (COPD - Chronic Obstructive Pulmonary Disease).உள்மூச்சுக்குழாய் தொற்று (Bronchiolitis) இன்னும் தீவிரமானது. சளி/திரவம் கோர்த்து நிமோனியா உண்டாகலாம். மூக்கடைப்பு, மூக்கொழுகல், இருமல் உண்டாகும். மூன்றுநாட்களுக்குப் பிறகு மூச்சிரைக்கும். வைரஸால் உண்டாகும் நிமோனியாவில் சளி தெரியாது. பாக்டீரியாவால் (Streptococcus Pneumoniae) உண்டாகும் நிமோனியாவில் மஞ்சள், பச்சை பிரவுன் நிறங்களில் சளி தென்படும். ரத்தமும் வெளிப்படலாம்.புகைப்பழக்கம் காற்றுநுண்ணறைகளை சேதப்படுத்தும் (Emphysema). வாயுப்பரிமாற்றத்தை குறைத்து சுவாசிப்பதில் சிரமத்தை உண்டாக்கும். ஒருகட்டத்தில் புற்றுநோய் வரக் காரணமாகலாம். தொடர்ந்து மாசுநிறைந்த காற்றை சுவாசிப்பவர்களுக்கு, அதுவும் ஆஸ்பெஸ்டாஸ் கலந்து இருந்தால், நுரையீரலில் புற்று ஏற்பட வாய்ப்பு உண்டு. எடை குறையும். பசி இருக்காது. மேற்கூறிய பாதிப்புகள் அனைத்தும் உடனடி உரிய மருத்துவம் தேவைப்படுபவை..செய்யவேண்டியவைமூக்கடைப்பு இருப்பின் உப்புநீரால் மூக்கை சுத்தப்படுத்தலாம். ஆவி பிடிக்கலாம். வீசிங்கிற்கு நெபுலைசர் தேவைப்படலாம்.அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவவேண்டும். தும்மல் இருமல் பரவாதவாறு கைக்குட்டையால் மறைக்கவேண்டும். வெளியே செல்லும்போது மாஸ்க் அவசியம்.வீட்டில் ஃபேன் இறக்கைகள், மிதியடிகள் கட்டிலுக்கடியில் சேரும் தூசுதும்புகளை அவ்வப்போது அகற்ற வேண்டும்.புகைபிடிக்கக்கூடாது. தேவையற்ற பொருட்களை எரித்து காற்றில் மாசைக் கூட்டக்கூடாது.பிராணயாமா, யோகா, மூச்சுப்பயிற்சி மிக நன்று.தடுப்பூசிகளைத் தவறாமல் அவ்வப்போது போட்டுக் கொள்ளவேண்டும்ஹீமோகுளோபின் அதிகரிக்க கீரை பேரீச்சம்பழம் சாப்பிடலாம். நோயெதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்க வைட்டமின் நிரம்பிய பழங்களையும், காய்கறிகளையும் உண்ணவேண்டும்.இப்போதைய H3 N2 இன்ஃப்ளூயன்ஸாவும், XBB.1.16 கொரோனா திரிபும் இன்னும் உருமாறி தாக்கிக்கொண்டுதான் இருக்கும். விலங்கினங்களில் இருந்து புதுநுண்கிருமிகளும் (Zoonotic pathogens) எதிர்காலத்தில் தொற்றவும் செய்யும் என்பது யதார்த்தமான உண்மை. நோயெதிர்ப்பு ஆற்றலை அதிகரித்து சுவாசத்தைக் காத்துக்கொள்வதுதான் விவேகமான செயல்.-பி.என்.ஈஸ்வரமூர்த்தி