PREMENTRUAL SYNDROMEபெண்களுக்கு மாதவிடாய் தொடங்குவதற்கு சில தினங்களுக்கு முன்னதாக 'மாதவிடாய்க்கு முந்தைய பதற்றநிலை (P.M.S) உருவாகிறது. இதன்காரணமாக, உடலில் ஏற்படும் சில மாற்றங்கள், மனத்தளவில் ஓர் அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன. அப்போது பெண்களுக்கு அதிக ஓய்வும், எளிய உடற்பயிற்சிகளும் தேவைப்படுகிறது. இரைப்பை, முலைகள் மற்றும் யோனியில் இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. உடலில் இயக்குநீர் மாற்றங்கள் நிகழ்கின்றன. இதனால் சிலவற்றை உண்ண ஆசை அல்லது வெறுப்பு ஏற்படுகிறது. கோபம், படபடப்பு என வழக்கமான நடவடிக்கைகளுக்குப் பதிலாக சில மாற்றங்கள் நிகழ்கின்றன. மாதவிடாய்க்குமுன், இரைப்பை பெருத்து விடுகிறது; முலைகள் கனத்து விடுகின்றன; செரிமானக் கோளாறுகள் ஏற்படுகின்றன; அடிவயிற்றில் வலி; உடலில் அசதி; தலைவலி போன்ற பிற துயரங்களும் தொடங்குகின்றன. எரிச்சல், அதீத களைப்பு போன்றவை ஏற்படுகின்றன மனத்தளவில் பெண்களுக்கு பல எதிர்மறை எண்ணங்கள் உருவாகின்றன. யாரைப் பார்த்தாலும் ‘வள்’ளென்று விழுவது, காரணமில்லாமல் அழுவது, பிறரிடம் அவசியமற்ற விவாதங்களில் ஈடுபடுவது, தனிமையை உணர்வது, பதற்றம் மற்றும் மனஅழுத்தம் போன்ற சில அறிகுறிகளும் உருவாகின்றன. பசியின்மை, தூக்கமின்மை, ஆர்வமின்மை போன்ற அறிகுறிகள் மாதவிடாய்க்கு முன் ஏற்படுகின்றன. மாதவிடாய் தொடங்கியபின், இவை படிப்படியாகக் குறையத் தொடங்குகின்றன. வயது கூடும்போது, இவற்றின் தன்மையும் மாறுபடுகின்றன. நம் உணவுப் பழக்கவழக்கமும், நாம் மேற்கொள்ளும் வாழ்க்கைமுறையும் இவற்றுடன் நேரடித் தொடர்பு உடையவை..நான்கில் மூன்று பெண்களுக்கு, P.M.S அறிகுறிகள் ஏற்படுவதாக ஆய்வுகள் அறிவிக்கின்றன. இதை எவ்வாறு சமாளிப்பது? இந்த நாட்களில், ஒரேசமயத்தில் நிறைய உண்பதைவிட, போதிய இடைவெளியில் கொஞ்சம் கொஞ்சமாக உண்பது சிறந்தது. பொரித்த உணவுகள், அதிக உப்பு, பதப்படுத்திய பண்டங்கள் போன்றவற்றை நிறையவே குறைக்கவேண்டும். இதன்மூலம் இரைப்பை பெருப்பது, முலைகள் கனப்பது போன்றவற்றைத் தவிர்க்கலாம். நார்ச்சத்துமிக்க காய்கறிகள், பழங்கள், சிறுதானியங்கள் போன்றவற்றை அடிக்கடி அதிக அளவில் உபயோகிக்க வேண்டும். காப்பி, தேநீர், குளிர்பானங்கள் போன்றவற்றைப் பயன்படுத்துவதைக் குறைக்கவேண்டும் தினமும், முப்பது நிமிடங்களாவது உடற்பயிற்சிகளில் ஈடுபடவேண்டும். நடைப்பயிற்சி, மிதிவண்டி ஓட்டுவது, நீச்சல் என விருப்பமானவற்றைச் செய்யலாம். இரவில், தொல்லைகளற்ற உறக்கம் அவசியம். நம்முடைய அனைத்து பழக்கவழக்கங்களும் உளவியல் உணர்வோடு ஒன்றியவை. எனவே, எப்போதும் நாம் நேர்மறை எண்ணங்களோடு இயங்கவேண்டும். இவ்வாறு இருந்தாலே, P.M.S. அறிகுறிகளை எளிதில் தவிர்த்துவிடலாம் அல்லது கீழ்க்கண்ட ஹோமியோ மருந்துகளைப் பயன்படுத்தியும் குணம் காணலாம்: போவிஸ்டா, கல்கேரியாகார்பானிகம், குப்ரம்மெட்டாலிகம், லாக்கசிஸ், லைக்கோபோடியம், நேட்ரம்மூரியாடிகம், பல்சட்டில்லா, செபியா, சல்பர், வெராட்ரம் ஆல்பம் மற்றும் ஜிங்கம் மெட்டாலிகம்.-உ.அறவாழி