மருத்துவர் யோ.தீபா,நாம் அன்றாடம் சாப்பிடக்கூடிய உணவுப்பொருள்களில் விஷம் கலந்திருக்கிறது என்று சொன்னால் வியப்பாக இருக்கும். ஆம், நம் கண்ணுக்குத் தெரியாமல் நாம் விஷத்தையும் சேர்த்தே உட்கொண்டு வருகிறோம். நாம் உண்ணும் உணவு உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும், உடல் மற்றும் மனநலனுக்கு புத்துணர்ச்சி தரும் என்று நம்பிக் கொண்டிருக்கிறோம். ஆனால், விஷமாகிப்போன அந்த உணவுகளால் உயர் ரத்த அழுத்தத்தில் தொடங்கி எலும்புத் தேய்மானம், நீரிழிவு நோய் மற்றும் புற்றுநோய் என பல்வேறு நோய்கள் வந்து நம்மை பதம் பார்க்கின்றன. இங்கே நாம் அன்றாடம் உண்ணக்கூடிய உணவுகள் விஷமாகிப்போனது என்று கூறியதைக் கேட்டதும் உங்களுக்கு ஆச்சர்யமாக இருக்கலாம்.யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தில் வெள்ளை விஷங்கள் என்று சிலவற்றைக் குறிப்பிடுகிறோம் முதலில் நாம் இங்கே குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் நாம் அன்றாடம் அருந்தக்கூடிய பால். நேரடியாகவோ அல்லது வேறு பல நிலைகளிலோ நாம் அவசியம் உட்கொள்ளக்கூடிய உணவுகளில் ஒன்றாக இருக்கிறது பால். நிலைப்படுத்தப்பட்ட பால், சமன்படுத்தப்பட்ட பால் என பல நிலைகளில் கிடைக்கும் இந்தப் பால் பசும்பாலாக இருந்தாலும் அதை ஒரு நாளைக்கு மேல் வைத்துப் பயன்படுத்தக்கூடாது. அப்படி பயன்படுத்தினால் அது கெட்டுப் போய்விடும். ஆனால் நாம் அதை பதப்படுத்தி பயன்படுத்தும்போது சில வேதியியல் மாற்றங்கள் ஏற்படும். அத்துடன் பாலில் உள்ள சத்துக்களை நீக்கும்போது முக்கியமான நல்ல பாக்டீரியாக்கள் அழிந்து விடும், இயற்கையான என்சைம்களும் அழிந்துவிடும். பொதுவாக பாலில் உள்ள கால்சியம் மட்டுமன்றி வைட்டமின் சி, பாஸ்பரஸ் போன்றவை உடலில் சேரும்போது அவை குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு உதவுவதுடன் நோய் எதிர்ப்பு சக்திக்கு உதவும். ஆனால் அவை இன்றைக்கு அழிக்கப்பட்ட நிலையிலேயே நமக்குக் கிடைக்கின்றன..அடுத்ததாக அரிசி. அதை சுத்திகரிப்பு செய்யும்போது அதாவது தோலை நீக்கும்போது பாலிஷ் செய்கிறார்கள். அதிகபட்சமான தோலினை நீக்கும்போது அதிகப்படியான ஸ்டார்ச் மட்டுமே கிடைக்கிறது. அதிக ஸ்டார்ச் சத்து உள்ள அரிசியைச் சாப்பிடுவதால்தான் நீரிழிவு நோய் மற்றும் உடல் பருமன் போன்றவை ஏற்படுகிறது. குழந்தைகளுக்கு செரிமான பிரச்சினைகளும் ஏற்படுகிறது. இன்றைய சூழலில் பல்வேறுவிதமான உடல் பிரச்சினைகளுக்கு அவைதான் காரணமாகும். ஆனால் நமது பாரம்பரிய உணவுகளில் சத்துகள் நிறைந்திருக்கும். பொதுவாக தென்னிந்தியர்கள் மாவுச்சத்து நிறைந்த உணவுகளைத்தான் அதிகமாக சாப்பிடுகிறோம். வட இந்தியர்கள் கோதுமை உணவுகளை உட்கொள்கிறார்கள். இவற்றில் ஸ்டார்ச் சத்துகளே அதிகம் உள்ளன.இதேபோல் வெள்ளை சர்க்கரை. காபி, டீ மற்றும் இனிப்பு பண்டங்களில் பெரும்பாலும் சர்க்கரைதான் பயன்படுத்துகிறோம். பொதுவாக வெள்ளைச் சர்க்கரை கலோரி அதிகம் உள்ளது; ஆனால் அதில் நியூட்ரிஷன் கிடையாது. வெள்ளைச் சர்க்கரையும் சுத்திகரிப்பு செய்யப்பட்டே கிடைக்கிறது. உதாரணமாக ரேஷனில் விற்கப்படும் சர்க்கரை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்; அருகே கடைகளில் விற்கப்படும் சர்க்கரையையும் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அவற்றை திறந்தநிலையில் ஒருநாள் வைத்தால் ரேஷனில் விற்கப்படும் சர்க்கரையில் எறும்புகள் மொய்க்கும்; ஆனால் கடைகளில் விற்கப்படும் சர்க்கரையை எறும்புகள் மொய்க்காது. காரணம் என்னவென்றால் கடைகளில் விற்கப்படும் சர்க்கரையில் ரசாயனங்கள் சேர்க்கப்பட்டிருக்கும். ரேஷன் சர்க்கரையில் எந்தவித ரசாயனமும் இருக்காது என்பதால்தான் அதில் எறும்புகள் மொய்க்கின்றன. இப்படியாக நாம் உண்ணக்கூடிய ஒவ்வொரு பொருட்களிலும் பல்வேறு விதமான நச்சுக்கள் இருக்கின்றன. அவற்றால்தான் உடல் பருமன், கல்லீரல் பாதிப்பு மற்றும் குடல் புற்றுநோய் என பல்வேறு விதமான நோய்கள் ஏற்படுகின்றன. சர்க்கரையில் உள்ள ரசாயனங்கள் ரத்தம் வழியாக செரிமான மண்டலத்தில் போய் பிரச்சினையை ஏற்படுத்துகிறது.சர்க்கரையில் குளுக்கோஸ் மற்றும் பிரக்டோஸ் இருக்கின்றன. உட்கார்ந்த இடத்திலேயே இருந்து கொண்டுவேலை பார்ப்பவர்கள் மற்றும் அதிக நேரம் டி.வி முன்னால் உட்கார்ந்திருப்பவர்களுக்கு சர்க்கரையில் உள்ள பிரக்டோஸ் ரத்த நாளங்களில் கொழுப்பாக சேர்ந்து கடைசியில் கல்லீரலில் தங்கி விடுகிறது. இதனால் ஃபேட்டி லிவர் பிரச்சினை ஏற்பட்டு உடல் பருமன் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படுகிறது. இன்சுலின் சுரப்பையும் பாதித்து டைப் 2 சர்க்கரை நோய் வருகிறது. வெள்ளைச் சர்க்கரை சாப்பிடுவதால் குளுக்கோஸின் அளவு அதிகரிக்கும். எனவே, சர்க்கரைக்குப் பதிலாக நாட்டுச் சர்க்கரை, பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற இயற்கை இனிப்புள்ள உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். சர்க்கரையில் தயாரிக்கப்படும் சில உணவுப் பொருட்களாலும் நமக்கு பாதிப்புகள் ஏற்படலாம் என்பதால், அதற்குப் பதிலாக பழங்கள் சாப்பிடலாம்..நாம் அன்றாட உணவில் சேர்க்கும் உப்புகூட விஷம்தான். இதைக்கேட்டதும், ஐயோ... உப்பு விஷமா என்று நீங்கள் கேட்கலாம். அளவுக்கு அதிகமாக உப்பு எடுத்துக் கொண்டால் உடம்பில் நீர் தேங்கிவிடும். ஆக, உப்பை அதிகமாக சேர்த்துக்கொண்டால் உடம்பில் நீர் தேங்கி ரத்த அழுத்தம் அதிகரிக்கும். மேலும், சிறுநீரகத்திலும் பாதிப்பு ஏற்படும். காலில் நீர் தேங்கி தொல்லை கொடுக்கும். வெள்ளை வெளேர் என்று விற்கப்படும் உப்புகளை நாம் உணவில் சேர்த்துக் கொள்வது சரியல்ல. தைராய்டு பிரச்சினைகள் வராமல் பாதுகாத்துக் கொள்ள அயோடின் சேர்த்த உப்பினை சேர்த்துக்கொள்வது நல்லது. பெண்கள் மற்றும் சிறு வயது குழந்தைகள் என பலருக்கு தைராய்டு பாதிப்புகள் ஏற்படுகிறது. வெள்ளை வெளேரென்று விற்கப்படும் உப்புகளில் அயோடினுக்குப் பதிலாக fluride அதிகமாக இருக்கிறது. இப்படி அதிகமாக சேர்க்கப்படுவதால் உடல் பருமன் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன.கல் உப்பு சேர்த்துக்கொள்வது நல்லது என்றாலும் அவற்றின் அளவு தெரியாததால் அன்றாட உணவுகளில் கூடவோ, குறையவோ சேர்க்கின்றோம். அளவு தெரியாததால் கல் உப்பை தூளாக்கி பயன்படுத்தலாம். சிலர் இந்துப்பு மற்றும் பல்வேறுவிதமான உப்புகளை சேர்க்கிறார்கள். அவையெல்லாம் நமக்குத் தேவையற்றது. நமது பகுதியில் விளையக்கூடிய, கிடைக்கக்கூடிய பொருட்களை பயன்படுத்துவதுதான் நல்லது. அவைதான் நமது உடல் நலனுக்கு நல்லது செய்யும் என்பதை புரிந்துகொண்டு நடந்துகொள்ள வேண்டும்.அடுத்தது மைதா மாவு. மைதாவும்கூட முழு உடல் நலனையும் பாதிக்கிறது. நாம் அன்றாடம் சாப்பிடக்கூடிய பல்வேறுவிதமான உணவுப்பொருள்களில் நமக்கு தெரியாமலே மைதா நிறைந்திருக்கிறது. குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய சமோசா, பப்ஸ், சாண்ட்விச், பீஸா, பர்கர் என பல்வேறுவிதமான உணவுகளில் மைதா சேர்க்கப்படுகிறது. சிறியவர்கள் மட்டுமல்ல பெரியவர்களும்கூட இந்த மாதிரி உணவுகளைத்தான் விரும்பிச் சாப்பிடுகிறார்கள். அதற்குப் பதிலாக நமது பாரம்பரிய உணவுகளை உட்கொள்ள வேண்டும். கோதுமையில் இருந்து பிரித்து எடுக்கப்பட்ட உணவான மைதாவிலிருந்துதான் பிரெட் தயாரிக்கப்படுகிறது. பிரெட் அதிகமாக சாப்பிடும்போது மலச்சிக்கல் ஏற்படும். மலச்சிக்கல் ஏற்படுவதால் அடுத்தடுத்து வேறு சில நோய்களும் நம்மை பாதிக்கும்..குறிப்பாக மைதாவை பிராசஸிங் செய்யும்போது உடலுக்கு நலம் சேர்க்கும் பல்வேறுவிதமான பொருட்கள் நீக்கப்பட்டு உடல் நலனுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் பொருள்கள் சேர்க்கப்படுகின்றன. இப்படி சேர்க்கப்படுவதால் செரிமான உறுப்புகள் பாதிக்கப்படும். மேலும் உடல் நலனுக்குத் தேவையான நார்ச்சத்து நீக்கப்பட்டுவிடும் என்பது நம்மில் பலருக்கு தெரியாது. மைதாவில் மிகக் குறைந்த நியூட்ரியன்கள் உள்ளன. இதனால் குடல் புற்றுநோய் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. நமக்கு தெரியாமல் நாம் இதுபோன்ற வெள்ளை விஷங்களை உண்டு நோய்களை நமக்கு நாமே உள்வாங்கிக் கொள்கிறோம். இவற்றையெல்லாம் கருத்தில்கொண்டு இயற்கையான பாரம்பரிய உணவுப் பொருட்களை உண்டு உடல் நலம் காப்போம்.