டாக்டர் ஜெயஸ்ரீ ஜெயகிருஷ்ணன்,ஒரு பெண் தன் வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவங்களில் ஒன்றுதான் மகப்பேறு அடைவது. மகப்பேறு காலத்தில் ஈஸ்ட்ரோஜன் மற்றும் தசைகள் தளர்வு காரணமாக வயிற்று தசை பாதிப்பு, எடை அதிகரிப்பு, தோரணை மாற்றம் மற்றும் ஹார்மோன் மாற்றங்கள் உட்பட பல உடல் மாற்றங்கள் நடக்கும்.கர்ப்பக் காலத்தில் வளரும் கருப்பையால் வயிற்று தசைகளான லீனியா ஆல்பா (linea alba) மற்றும் இணைப்பு திசுக்கள் அளவு விரிவடைகின்றன. இது வயிற்று தசைகள் பிரிபடுவதை பல வகையில் பாதிக்கிறது. டயாஸ்டஸிஸ் ரெக்டி (Diastasis recti) என்பது ரெக்டஸ் அப்டோமினஸின் (rectus abdominus) விளைவுவாகும். கர்ப்பக்கால ஹார்மோன்களான ரிலாக்சின் மற்றும் ஈஸ்ட்ரோஜன் ஆகியவை தசைகள் பிரிபடுவதற்கு உதவுகின்றன. கூடுதலாக, டயாஸ்டஸிஸ் ரெக்டி, அதாவது அடிவயிறு தசை பிரிதல், பிரசவத்தின்போது உந்துதலால் ஏற்படும் அழுத்தத்தால் ஏற்படலாம். கர்ப்பக் காலத்தில் மற்றும் அதற்குப் பிறகு வயிற்றில் சில தசைப் பிரிவுகள் ஏற்படுவது இயல்பானது.உடல் எடை குறியீட்டெண் (BMI), கர்ப்பக் கால எடை அதிகரிப்பு, குழந்தையின் எடை மற்றும் தாயின் வயது ஆகியவை ஒரு காலத்தில் ஆபத்து காரணிகளாகக் கருதப்பட்டன. இருப்பினும், 2015ஆம் ஆண்டின் ஆய்வில், இந்த குணாதிசயங்களுக்கும், கர்ப்பிணிப் பெண்களை நோய் தாக்கும் சாத்தியக்கூறுகளுக்கும் இடையே எந்தத் தொடர்பும் இல்லை என்று கண்டறியப்பட்டது.பிறந்த குழந்தைகளிடையேகூட டயாஸ்டஸிஸ் ரெக்டி ஏற்படலாம், குறிப்பாக அவர்கள் குறைப்பிரசவத்தில் பிறந்து இருந்தால் வாய்ப்புகள் அதிகமாக இருக்கும். இது அவர்களின் வயிற்றுத் தசைகளின் முழுமையற்ற வளர்ச்சி மற்றும் தசை இணைப்பில் ஏற்படும் பிரச்சனையின் விளைவாகும். பொதுவாக, பிரச்சனை காலப்போக்கில் தானாகவே சரியாகிவிடும்..லீனியா அல்பா (linea alba) அதாவது வயிற்று மையம் அகலமாகுதல், மலக்குடல், வயிற்றுத் தசையின் இரண்டு பக்கங்களுக்கு இடையே உள்ள இடைவெளியை அசாதாரணமாக விரிவடையச் செய்வது ரெக்டஸ் டயாஸ்டஸிஸ் (rectus diastasis) என அழைக்கப்படுகிறது.இது ஆண்களையும், மகப்பேற்றுக்கு பிறகான பெண்களையும் பாதிக்கும் என்றாலும், டயாஸ்டஸிஸ் ரெக்டி முக்கியமாகப் பிறந்த குழந்தைகளையும் கர்ப்பிணிப் பெண்களையும் பாதிக்கிறது. தொடர் உடல் சிரமங்கள், ஒரே பிரசவத்தில் ஒன்றிற்கும் மேற்பட்ட குழந்தைகள் பெறுகிற பெண்கள் டயாஸ்டஸிஸ் நோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். டயாஸ்டஸிஸ் ரெக்டி தீவிரம் பற்றி அறிவதற்கு மகப்பேறு மருத்துவர் அல்லது பெண்களின் ஆரோக்கியத்தில் நிபுணத்துவம் பெற்ற பிசியோதெரபிஸ்ட் ஆகியோரின் ஆலோசனையை அணுகவும். நோயாளி ‘க்ரோக்’ நிலையில், அதாவது வானம் பார்த நிலையில் படுத்து, படுக்கை மட்டத்தில் இருந்து தலை, தோள்கள் மற்றும் கைகளை உயர்த்தி, தங்கள் விரல்களை அடிவயிற்றில் கிடைமட்டமாக வைத்து வயிற்றின் தசைகளின் இறுக்கத்தன்மையை அளப்பதின் மூலம் அதன் தீவிரத்தை மதிப்பீடு செய்யலாம். இரண்டு மலக்குடல் இடையில் எவ்வளவு விரல்கள் வயிற்றுத் தசைகளின் தளர்வை உணர்கிறது என்பதை வைத்து அளவிடலாம்.வயிற்றுத் தசைகள் விரிவடையும்போது, முக்கிய அறிகுறிகளாக வயிற்றில் தளர்வு அல்லது வீக்கம் இருக்கும். கீழ் முதுகுவலி, கூன் தோரணை, மலச்சிக்கல் பிரச்சனைகள் மற்றும் பலவீனமான இடுப்பு தசைகள் போன்றவைகள் மற்ற அறிகுறிகளாகும்.கர்ப்பக் காலத்தில் இது மோசமடைய அனுமதிக்காமல் முறையான பயிற்சிகளைச் செய்வதன் மூலம் கட்டுப்படுத்தப்பட வேண்டும், மேலும் பிறந்து 6 முதல் 8 வாரங்களுக்குப் பிறகு, தொப்புள் குடலிறக்கத்தின் வளர்ச்சியைத் தடுக்க இடுப்புத் தசை சிகிச்சை எடுக்க வேண்டும்.டயஸ்டாசிஸ் ரெக்டி இருக்கும்போது, அடிவயிற்று அழுத்தம் கொடுக்கும் வகையில் கனமான பளு தூக்குதல் பயிற்சிகள், முதுகு வளைவுகள் மற்றும் வயிற்றுத் தசைகளை வீங்கச் செய்யும் அல்லது அதிகமாக விரிவடைய வைக்கும் சில யோகா பயிற்சிகளைத் தவிர்க்கவும். தீவிரமாக இருமும் போது உங்கள் வயிற்றை ஆதரவாக பிடித்துக்கொள்ளவும். நிமிர்ந்த தோரணை மற்றும் வழக்கமான சுவாச முறையை பராமரிக்கவும். உட்கார்ந்திருக்கும் போது உங்கள் கீழ் முதுகிற்கு ஆதரவு கொடுக்கவும். சிறுநீர் மற்றும் மலம் அடக்க முடியாமை மற்றும் வலிமிகுந்த உடலுறவு போன்றவைகளையும் கவனித்துக் கொள்ள வேண்டும்.சிகிச்சை அளிக்கப்படாமல் விடப்படும் டயாஸ்டஸிஸ் ரெக்டி தொப்புள் குடலிறக்கமாக (Umbilical Hernia) உருவாகலாம்; இது ஆரம்பகால நோயறிதல் மற்றும் தகுதிவாய்ந்த மகளிர் நல பிசியோதெரபிஸ்ட் மூலம் உடல் சிகிச்சையைப் மேற்கொள்வதன் மூலம் தடுக்கப்படலாம். இது கர்ப்பத்தின் தொடக்கத்தில், அதாவது தொப்புள் குடலிறக்கத்தின் ஆபத்து குறைவாக இருக்கும்போது செயல்படுத்தப்பட வேண்டும்.