டாக்டர் ஜெ.பிரியதர்ஷினி,நமக்கொரு வாரிசு இன்னும் வாய்க்கவில்லையே என்று ஏங்கித் தவிப்போர் ஒருபுறம். கிடைத்த வாரிசை கருவிலேயே கலைக்க முற்படுவோர் ஒருபுறம். இப்படித்தான் பிள்ளைப்பேறு இருவேறு வகையாக இங்கே நிகழ்கிறது. இதில், உருவாகிய கருவை கலைத்தலில் நிகழ்த்தப்படும் பல செயல்கள் கொடூரமானவை. இன்னும் பல குழப்பங்கள் இங்கே நிறைந்து இருந்தாலும், சில காலங்களுக்கு முன் வழக்கிலிருந்த கருக்கலைப்பு முறைகள் நினைத்தாலே திகிலூட்டக்கூடியவை.புராணங்களில் காந்தாரி தனது கருவைக் கலைப்பதற்காக அம்மிக் குளவியால் தன் வயிற்றில் குத்தி கருக்கலைப்பு செய்ய முயன்றார். இதுபோல சிட்னிஷெல்டனின் the other side of midnight லும் தன்னை ஏமாற்றிய காதலனின் குழந்தையை வயிற்றில் சுமந்த பேஜ் கூரிய கத்தியை தன் பிறப்புறுப்பின் வழி குத்தி கருக்கலைப்பு செய்யமுற்பட்டு, அதிர்ஷ்டவசமாக காப்பாற்றப்படுவாள். 1973-ல் இந்த நாவல் வெளிவந்த அதே ஆண்டுதான் அமெரிக்காவில் அதுவரை சட்டத்துக்கு புறம்பான கருக்கலைப்பு சட்டப்படி அங்கீகரிக்கப்பட்டது.கி.மு. காலமுறைகள்கி.மு. 1550-ல் எகிப்தில் சிலவகை மூலிகைகளின் உதவியுடன் கருக்கலைப்பு செய்ததற்கான ஆவணங்கள் கிடைத்துள்ளன.அப்போதைய கருக்கலைப்பு முறைகள் அதீதமாக கருப்பையை சுருக்கும் மருந்துகள், மலமிளக்கிகள் (விளக்கெண்ணெய், நிலாவரை போன்றவற்றை உட்கொள்ளுதல்), பிறப்புறுப்பின்வழி டர்பன்டைன் எண்ணெய், காரமிளகாய்ச்சாறு போன்றவற்றை செலுத்துதல் போன்ற கொடூரமான முறைகள் பின்பற்றப்பட்டன.கிரேக்கமருத்துவர்கள்ஹிப்பாக்ரடிஸ், ஸொரானஸ்போன்றவர்கள்கால்களைமேலேதூக்கிதிரும்பத்திரும்பகுதிப்பதை (லேசிடேமோனியன்ஜம்ப்) அறிவுறுத்தியுள்ளனர். வயிற்றில்ஓங்கிக்குத்துவது, கொதிக்கும்நீரைவயிற்றில்ஊற்றுவது, எரியும்சிரட்டைதணலின்மேல்உட்காருவதுஎனமேற்குநாட்டுமுறைகள்இன்னும்கொடூரமானவை. மேலும்வயிற்றில்அடி, உதை, சூடு, படியிலிருந்துகீழேஉருட்டிவிடுதல்எனவன்முறைகளும்கையாளப்பட்டுள்ளன..கட்டுவிரியனின்மீது நடக்கவைத்தால் கர்ப்பம் நிச்சயம் கலையும் என்று புகழ்பெற்ற ரோம மருத்துவ அறிஞர் பிளைனி எழுதியுள்ளார்.புகழ்பெற்ற அமெரிக்க எழுத்தாளர், விஞ்ஞானி பெஞ்சமின் ஃபிராங்கிளின், கருக்கலைப்புக்கான பிரத்யேகக் கூட்டு ஒன்றைத் தயாரித்துள்ளார். இதற்கான செய்முறையையும் தனது புத்தகத்தில் எழுதியுள்ளார். ஈஸ்ட் கலந்த கருக்கலைப்பு ஒயின், கருக்கலைப்பு தேநீர் என பல செய்முறைகள் கிரேக்க மற்றும் ரோம நாடுகளில் இருந்துள்ளன.ஆறாம் நூற்றாண்டில் கிரேக்கர்கள் மற்றும் ரோம் நகரத்தை சேர்ந்தவர்கள் சில்ஃபியம் என்னும் செடியின் இலை, விதை, பிசினை கருக்கலைப்பிற்கும் கருத்தடைக்காகவும் பயன்படுத்தியுள்ளனர். இதனால் இதன் விதைகளின் உருவம் பதிக்கப்பட்ட நாணயங்களையும் வெளியிட்டனர். இந்த அடிப்படையிலேயே சில்ஃபியம் இன்றளவும் காதலின் சின்னமாகக் கொண்டாடப்படுகிறது.இந்திய முறைகள்இந்தியாவும் கருக்கலைப்புக்கு எதிரான கருத்துக்களையே கொண்டிருந்தது. ஆனால், தாயின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துமானால் கருக்கலைப்புக்கான திட்டம் முறையே வகுக்கப்பட வேண்டும். (சுஷ்ருதஸம்ஹிதை சூத்திரம் 10-11). ஆயுர்வேதம், அதர்வணவேதம் முதலிய வேதங்களும் இதையே வலியுறுத்துகின்றன. இருப்பினும், எட்டாம் நூற்றாண்டின் சம்ஸ்கிருத ஏடுகளில் அவித்த வெங்காயத்தை ஒரு பானைக்குள் போட்டு அமரும் முறைகள் இருந்துள்ளது தெரியவந்துள்ளது.பத்தொன்பது மற்றும் இருபதாம் நூற்றாண்டு முறைகள்பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதி வரையிலும் உலகின் பல்வேறு பகுதிகளிலும் மூங்கில் குச்சிகளில் செங்கோட்டை, நீலஎருக்குச் சாற்றில் நனைத்த துணியினைச் சுற்றி அதனை கர்ப்பப்பை வாய்வழி கொஞ்சம் கொஞ்சமாக நுழைத்து விரிவடையச் செய்யும் முறை பின்பற்றப்பட்டுள்ளது. அதுபோல லேமினேரியாடென்ட் எனப்படும், நீரை உறிஞ்சும் கடல்பாசிகளைக் கொண்டு செய்யப்படும் குச்சிகளும் பயன்படுத்தப்பட்டன.மேலும். ஒருபக்கம் சீதா பழ விதைகள், பப்பாளிக் காய்கள், அன்னாசிகள், நீலஎருக்கு என எக்கச்சக்கமான தாவரங்களும் காய்கனிகளும் பயன்படுத்தி கருக்கலைப்பு செய்த மற்றும் அதற்கு துணையான பெண்களை சூனியக்காரிகள் என வேட்டையாடினர்..வழுக்கு எல்ம் பட்டையிலிருந்து தயாரிக்கப்டும் பொடி, உட்டுஸ் கலவை (அயோடின், பொட்டாசியம் ஐயோடைடு போன்ற பொருட்களைச் சேர்த்து செய்யப்படும் சோப்பு போன்ற கலவை) போன்றவற்றை நேராக கருப்பை வாய்க்குள் சொருகியும் கருக்கலைப்பு செய்துள்ளனர்.குறைந்த அளவில் விஷத்தன்மையுடைய இரசாயனங்களை எடுத்துக்கொள்ளுதல் பல்வேறு பழங்குடி சமுதாயங்களில் இன்னும் இருந்து வருகிறது. இவற்றில் முக்கியமானவை ஈயம், இரும்பு, மெர்குரி, காப்பர் போன்றவை. காப்பர் இன்றளவும் (காப்பர்டி) கருத்தடை சாதனமாகப் பயன்படுத்தப்படுகிறது. எறும்பு, ஒட்டகம் மற்றும் மானின் மயிர்க்கால்களை அறுத்துப் பூசும் பழக்கமும் இருந்துள்ளது. முதலை சாணம்கூடப் பயன்படுத்தியுள்ளனர். இம்மாதிரியான பல்வேறு பழக்கங்களால் நச்சேறிய கருச்சிதைவு ஏற்பட்டு, பெண்ணின் உயிருக்கே ஆபத்தாய் முடியலாம்.நச்சேறிய கருச்சிதைவுபொதுவாக கரு உருவாகி பத்து வாரத்துக்குள் அது கலைய நேரிட்டால் தானாகவே முழுமையாக வெளியேறிவிடும். ஆனால், பத்து வாரங்களுக்கு மேல் அதன் பாகங்கள் கருப்பையிலேயே தங்கி இருந்தால் தீவிர கிருமித்தொற்று ஏற்பட்டு கருப்பை சீழ்பிடித்துக் கொள்கிறது. இந்தநிலையில், உடனடியாக சிகிச்சை மேற்கொள்ளாவிடில் சிறுநீரகம் பாதிப்படைந்து பெண்ணின் உயிருக்கே ஆபத்து நேரிடலாம். இதுவே, நச்சேறிய கருச்சிதைவு என்று அழைக்கப்படுகிறது. இதில் குளிர் காய்ச்சலுடன் (100 டிகிரிக்கு மேலாக) அடிவயிற்றுவலியும் கருப்பைவாயில் நாற்றத்துடன்கூடிய சீழ் வெளியேற்றமும் இருக்கும். இவற்றைக்கொண்டு நச்சேறிய கருப்பை ஏற்பட்டு இருப்பதை அறியலாம்.சட்ட விரோதமாக மருத்துவரின் மேற்பார்வை இன்றி செய்யப்படும் கருச்சிதைவுகளில் இந்த நிலைமை ஏற்படுகிறது. இதனை வீரியமிக்க நுண்ணுயிர்க்கொல்லி மருந்துகளைக் கொண்டு விரைவாக சிகிச்சை செய்ய வேண்டும்.கருக்கலைப்பு செய்கின்ற கால வரையறைகரு பன்னிரண்டு வாரத்துக்குக் குறைவாக இருப்பின் ஒரு மருத்துவர் முடிவு செய்தால் போதுமானது. கர்ப்பம் பன்னிரண்டு வாரங்களைத் தாண்டுமானால் இரண்டு மருத்துவர்களின் ஆலோசனை அவசியம்..நவீன கருக்கலைப்பு முறைகள்கர்ப்பிணிகள் கருக்கலைப்புக்கு முன் இரத்தஅளவு, சிறுநீர் பரிசோதனை மற்றும் இதர பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். ளுலக சுகாதார அமைப்பின்படி கர்ப்பக்காலம் ஒன்பது வாரத்திற்கும் குறைவாக இருக்குமாயின் புறநோயாளியாக எளிய மருந்துகளின் உதவியுடன் கருக்கலைப்பு செய்து கொள்ளலாம். ஆனால், இந்திய கருக்கலைப்புச் சட்டம் ஏழு வாரத்திற்கும் குறைவான கருக்களையே புறநோயாளியாகக் கருக்கலைக்க அனுமதிக்கிறது.ஏழு வாரங்களுக்கும் குறைவான கருக்கலைப்பு முறைகள்இதற்காக மிஃபிப்ரிஸ்டோன்(mifepristone) மற்றும் மிஸோப்ராஸ்டோல் (misoprostol) மாத்திரைகள் பயன்படுத்தப்படுகின்றன. மாத்திரைகளை எடுத்துக்கொண்ட பதினைந்தாம் நாள் மறுமுறைப் பரிசோதிக்க வேண்டும்.இந்த மாத்திரைகளால் சிலசமயம் அதிகமான உதிரப்போக்கு ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுக வேண்டும். மாத்திரை வழங்குமுன் பெண்களை மனதளவில் தயார் செய்துவிட்டால் அதிக இரத்தப்போக்கைக் கட்டுப்படுத்த இயலும்.மேலும், மாத்திரை வழங்குமுன் நிச்சயமாக அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் செய்திருக்க வேண்டும். ஏனெனில் கருப்பைக்கு வெளியே கரு உருவாகி இருந்தால், இந்த மாத்திரைகளால் பயனில்லை. மேலும், கருக்குழாயிலோ சினைப்பையிலோ கரு உருவானால் ஒரு கட்டத்துக்குமேல் அது வெடித்துவிடும் அபாயம் இருக்கிறது. அவ்வாறு ஏற்பட்டால் அதீத உதிரப்போக்கு ஏற்பட்டு உயிருக்கே ஆபத்தாகலாம். எனவே, சிகிச்சை ஆரம்பிக்கும் முன்பே, அப்பெண்ணை மிகக்கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும்.இந்த மாத்திரைகளைப் பயன்படுத்தியும்கூட மிகச்சிலருக்கு கருக்கலையாமல் போகலாம். மேலும், அந்தப் பெண்ணும் கருக்கலைப்பு செய்யும் தன்முடிவை மாற்றிக் கொள்ளலாம். ஆனால், இந்த மாத்திரைகளால் குழந்தைக்கு கை, கால் ஊனம் ஏற்படலாம் என ஆராய்ச்சிகள் கூறுகின்றன. எனவே, மாத்திரைகள் சாப்பிட்டால் முழுமையாக கருக்கலைப்பு நடந்துள்ளதா என்று பரிசோதித்துக்கொள்ள வேண்டும்.மருத்துவக் கருக்கலைப்புக்குப் பின்னர் கிருமிகள் தொற்றுவது மிகவும் அரிது. சாதாரண நுண்ணுயிர்க் கொல்லிகளால் இதனைத் தவிர்க்கலாம்.ஏழு வாரம் முதல் பன்னிரண்டு வாரம் வரையிலான கருக்கலைப்புகர்ப்பப்பை வாயினை விரிவுப்படுத்தி கருக்குழந்தையை உறிஞ்சுகருவி கொண்டு அகற்ற வேண்டும்..பன்னிரண்டு வாரத்திற்கு மேற்பட்ட கருக்கலைப்பு முறைகள்இந்தக் காலகட்டத்தில் மருந்துகள் அல்லது அறுவை சிகிச்சையின் மூலம் கருக்கலைப்பு செய்யலாம்.மருத்துவ சிகிச்சை முறைகள் சுலபமானது. மயக்க மருந்தையும் தவிர்க்கலாம். மேலும், மாதவிலக்கைப் போன்று இயல்பானது. இருப்பினும் அடிக்கடி மருத்துவரைக் கலந்து ஆலோசிக்க வேண்டும். மேலும், சிலருக்கு வயிற்றுப்போக்கு, வாந்தி, காய்ச்சல் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.அறுவை சிகிச்சை மூலமான கருக்கலைப்பு நிச்சயமானது. துரிதமானது. ஆனால், சிலநேரங்களில் கருப்பை வாய் சேதமடைவதற்கான சிறு வாய்ப்புள்ளது. மேலும், சிலசமயங்களில் கருப்பை உள்வரிச்சவ்வில் அழற்சி ஏற்பட்டு மறுமுறைக் கருத்தரிக்கும்போது கருச்சிதைவும் ஏற்படுகிறது. ஒரு கருவை சுமப்பதும் அதனை அகற்றுவதும் முழுவதுமாய் பெண்ணின் உடல் மற்றும் மனம் சார்ந்த முடிவு. அதில் கணவனோ, வேண்டிய உறவினர்களோகூட தலையிட சட்டம் அனுமதிக்கவில்லை. னுந்த சூழ்நிலையிலும் பதினெட்டு வயதிற்கு மேற்பட்டவர்கள் தங்கள் சொந்த விருப்பத்திலும், மற்றவர்கள் தங்கள் பாதுகாவலரின் உதவியுடனும் சுகாதாரமான, நவீன கருத்தடை முறைகளை சட்டப்படி அணுக முன்வர வேண்டும்.