சுட்டெரிக்கும் வெயில். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் வெயிலைப் பற்றித்தான் பேச்சு. இதைப்பற்றியே பேசிப்பேசிக் களைத்துப் போகாமல் இந்த நேரத்தில் நம் உடம்பை உஷ்ணம் தாக்காமல் எப்படிப் பாதுகாப்பது என்று தெரிந்திருக்க வேண்டியது மிக அவசியமாகும்.இதோ அதற்கான யோசனைகள்: கடும் வெயிலின் தாக்கத்தைத் தணிக்க வெள்ளரிக்காய் சாறுடன் பீட்ரூட் சாறு சேர்த்துப் பருக உடல் சூடு தணியும். பித்தப்பையில் கற்கள் உருவாவதையும் இது தடுக்கும். மோர், இளநீர், தர்பூசணி, எலுமிச்சைச்சாறு, பழச்சாறுகள் தினமும் ஏதேனும் ஒன்று அவசியம் பருகவேண்டும். இதனால் உடல் உஷ்ணம் ஏற்படாது. வெங்காயத்தைப் பச்சையாக மென்று தின்று வந்தால் நீர் எரிச்சல், நீர்க்கடுப்பு நீங்கிவிடும். வெக்கை நோய்களுக்கு இளநீர் ஓர் அருமருந்துபோல் செயல்படும். அதனால் தினமும் இளநீர் பருகவேண்டும். நாம் இந்த சமயத்தில் அருந்தும் எந்தவகைப் பழச்சாறுடனும் சிட்டிகை உப்பு சேர்த்து அருந்துவது உடம்புக்கு நல்லது. தர்பூசணி ஜூஸுடன் சிறிது எலுமிச்சைச்சாறு, கசக்கிய புதினாத் தழைகள், சர்க்கரை சேர்த்துக் குடித்துப் பாருங்கள். சம்மருக்கு ஏற்ற அருமையான பானம் இது என்பதை மறந்துவிடாதீர்கள். உடல் சூடு தணியும். உடலும் குளிர்ச்சியாக இருக்கும். இந்த சமயத்தில் பருகும் நீர் மோரில் அரிந்த பச்சைமிளகாய்க்குப் பதில் சிறிதளவு பொடித்த சுக்கு சேருங்கள். சுவை தூக்கலாக இருக்கும். உடம்பைக் குளிர்ச்சியாக வைக்கவும் நல்லது. கோடையின் சூட்டைத் தணிப்பதற்கு அடிக்கடி சாலட் வகைகள் செய்து சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் சாப்பிட வேண்டும். முள்ளங்கி நல்ல குளுமையைத் தரும். கேரட் துருவியில் துருவி உப்பு, அரைமூடி எலுமிச்சைச்சாறு, பெருங்காயம், கடுகு தாளித்து சாப்பிட வெய்யிலின் பாதிப்பு இருக்காது..சரும நோய்கள் வராதிருக்க கோடைக்காலத்தில் உள்ளாடைகள் உட்பட அனைத்து ஆடைகளையும் சற்று தளர்வாக பருத்தியிலேயே அணிவது நல்லது. நீராகாரம் ஓர் அருமையான பானம். காலையிலும் ஒரு டம்ளர் டிபன் சாப்பிட்ட பின்னாலும் ஒரு டம்ளர் அருந்தலாம். இதைவிட உடலைக் குளிர்ச்சியாக வைக்கக்கூடிய பானம் எதுவும் இல்லை. வெயில் காலத்தில் சூட்டினால் வயிற்றுவலி வரும். இதற்கு கசகசாவை மிக்ஸியில் அரைத்துக் கொதிக்கவைத்து பாலோடு சேர்த்து துளி சர்க்கரை போட்டு சாப்பிட வயிற்றுவலி நீங்கிவிடும். கோடைக்காலத்தில் வியர்க்குருவினால் அவதிப்படுபவர்கள் கோதுமை மாவை புளித்த கஞ்சியில் கலந்து உடம்பில் பூசினால் வியர்க்குரு மறையும். வேனில்கால வெயில் நேரத்தில் வெந்தயத்தை தயிரில் ஊறவைத்து காலை நேரத்தில் பருகிவர உடல் உஷ்ணம் குறையும். தண்ணீரில் வெட்டிவேரை நறுக்கிப் போட்டுக் குளியுங்கள். உடலில் உள்ள வியர்வை நாற்றம் நீங்கும். அதேநேரம், கோடைக்காலத்தில் இரண்டு நேரம் அதாவது காலையிலும் மாலையிலும் பச்சைத்தண்ணீரில் குளித்து உடம்பை சூட்டில் இருந்து பாதுகாக்கத் தவறாதீர்கள். வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு வேனிற் கட்டிகள் வந்தால் கட்டிகள் மீது குளுமையான நுங்கை மசித்துத் தடவுங்கள். சீக்கிரமே குணமாகிவிடும். வியர்வையைப் போக்கி ஃப்ரஷ்ஷாக இருக்க, நான்கு சொட்டு எலுமிச்சம்பழ ரசத்தை குளிக்கும் தண்ணீரில் சேர்த்து அதில் குளிக்கவேண்டும். கோடைக்காலத்தில் நன்னாரியை பானைத்தண்ணீரில் ஒரு கைப்பிடி அளவுக்குப் போட்டு வைத்தால் அந்தத் தண்ணீர் குடிப்பதற்கு சுவையாக இருப்பதுடன் உடலுக்குக் குளிர்ச்சியையும் தரும்.-- சி.ஆர்.ஹரிஹரன்