முனைவர் அ.போ.இருங்கோவேள்,மேலாளர், மருத்துவ சமூகவியல், க்ளகோமா A to Z - விளக்கம் க்ளகோமாவில் பல வகைகள் இருக்கின்றனவா?ஆம், பொதுவாக க்ளகோமாவை கண் மருத்துவர்கள் நான்கு வகைகளாகப் பிரிக்கிறார்கள்.முதல் நிலை திறந்த கோண க்ளகோமா:-கண் உள் நீர் வெளியேறும் வழி திறந்து காணப்பட்டால், அதனை திறந்த கோண க்ளகோமா என்று கூறுவார்கள். பொதுவாக மூன்றில் இரண்டு பங்கு க்ளகோமா நோயாளிகள் இந்தநிலை க்ளகோமாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்தவகை க்ளகோமா பரம்பரை ரீதியாகவும், 50 வயதிற்கு மேலும் வருகிறது. இந்தவகையில் மெதுவாக, படிப்படியாக கண்ணின் உட்புற அழுத்தம் அதிகரிக்கிறது. அப்போது ஏற்படும் தெளிவற்ற பார்வையை கேடராக்ட் என்று தவறாகக் கருதுவதாலும், படிப்படியாக குறிப்பிட்ட காலகட்டத்தில் பார்வை குறைந்துவிடுவதும் இந்தவகை க்ளகோமாவினால்தான்.எனவே, கண் உட்புற அழுத்தத்தில் மாற்றம் இருக்கிறது என்று தெரிந்தவுடனேயே குறிப்பிட்ட கால இடைவெளிகளில் முழுமையான கண் பரிசோதனை அவசியமாகும். அதன் மூலமே இவ்வகை க்ளகோமாவை கண்டறிந்து நோயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியும்.இந்தவகை க்ளகோமாவை கண் சொட்டு மருந்துகளாலும், மாத்திரைகள் எடுத்துக் கொள்வதாலும் மெதுவான முன்னேற்றத்தைப் பெற்று நல்ல பலனை அடையலாம்..முதல் நிலை மூடிய கோண க்ளகோமா அல்லது வளைந்த கோண க்ளகோமா:-இந்தவகையில் அக்யூவியஸ் திரவத்தை வெளியேற்றும் கணவாய்கள் முன்பு திடீரென்று அடைப்புகள் ஏற்படுவதாலோ, முழுவதுமாகவோ அல்லது ஓரளவோ திரவம் வெளியேறும் வழி மூடப்படுவதால் கண்களில் அழுத்தம் அதிகரிக்கிறது.சிலருக்கு சினிமா தியேட்டர்களிலும், இருட்டான அறைகளிலும் அல்லது சில மருந்துகளை உபயோகிப்பதாலும் கண்ணின் பாப்பா அடிக்கடி விரியலாம். அதனாலும் வெளியேற்றும் கணவாய்களின் கோணம் ஒடுக்கமாகவும் இருந்தால் இந்தவகை க்ளகோமா வரலாம்.இவ்வகை க்ளகோமாவின் அறிகுறிகள்:- கடுமையான தலைவலி- கண் வலி- குமட்டல்- இரவு நேரங்களில் வெளிச்சத்தைச் சுற்றி வானவில் போன்று காட்சியளிப்பது.- கடுமையான தெளிவற்ற பார்வை.இந்த அறிகுறிகள் தென்பட்டால், உடனடி மருத்துவக் கவனிப்பு அவசியம். ஏனெனில் இவ்வகை க்ளகோமாவில் திடீரென கண் அழுத்தம் அதிகரித்து உடனடியாக கடுமையான பார்வை பாதிப்புக்கு வாய்ப்புகள் இருக்கிறது.இவ்வகை க்ளகோமாவுக்கான சிகிச்சை:ஆபரேஷன் அல்லது லேசர் சிகிச்சை மூலமாக புடைத்துக் காணப்படும் கருவிழியின் சிறிய பகுதியை நீக்கி அக்யூவியஸ் திரவம் முறைப்படி வெளியேறி கண் அழுத்தத்தை சீராக்குவது.வளர்நிலை க்ளகோமா:இவ்வகை க்ளகோமா பொதுவாக குழந்தைகளுக்கு மிகவும் குறைந்த அளவில் காணப்படும். இந்நோய் பரம்பரையாகவும், குழந்தை பிறப்பதற்கு முன்பே கண்ணில் அக்யூவியஸ் திரவத்தை வெளியேற்றும் பாதை சரியாக வளராமல் அல்லது முழுமையாக வளராமல் இருந்தாலும் வருகிறது.இரண்டாம் நிலை க்ளகோமா:கண் விபத்தின் காரணமாக வீக்கம் மற்றும் கட்டிகள் அல்லது முற்றிய கேடராக்ட் அல்லது நீரிழிவு நோய் காரணமாக வருகிறது..குறைந்த அழுத்த க்ளகோமா:குறைந்த கண் நீர் அழுத்தம் உள்ள ஒரு புதிரான நிலையில் ஏற்படுகிறது. சாதாரண கண் நீர் அழுத்த நிலையில்கூட பார்வை நரம்பு பாதிக்கப்படலாம். சாதாரண கண் நீர் அழுத்த நிலையில்கூட பக்கவாட்டுப்பார்வை பாதிக்கப்படலாம். கண் நீர் அழுத்தம் வழக்கத்துக்கு மாறாக உயர்வாக இல்லாதிருந்தாலும் பார்வை நரம்பு பாதிக்கப்படுகிறது.இத்தகைய பாதிப்பு ஏற்பட்டவர்களில் குறைந்த பட்சம் 30% பேருக்காவது மருந்து மூலம் கண் நீர் அழுத்தத்தை குறைக்க முடியும்.உதாரணமாக, குறைந்த ரத்த அழுத்த நோய் (Low Blood Pressure) உள்ளவர்களுக்கு, அவர்களுக்கான பக்க விளைவுகளைக் குறித்து சரியாக தீர்மானித்தபிறகே மேற்குறித்த குறைந்த அழுத்த மற்றும் சாதாரண அழுத்த க்ளகோமா இரண்டிற்குமான சிகிச்சைகள் வழங்கப்படலாம்.க்ளகோமா நோய் எவ்வாறு கண்டறியப்படுகிறது?1. கண்ணின் உள் அழுத்தம் டோனோமீட்டர் எனும் கருவியினால் அளவிடப்படுகிறது. சாதாரணமாக கண்ணின் உள் அழுத்தம் 9 முதல் 21மி.மீ. Hg இருக்கும். இங்கு ‘மி.மீ. Hg ' என்பது பாதரசத்தில் மில்லி மீட்டர் எனப்படும். இது கண் உள் அழுத்தத்தை குறிக்கும் அளவீடாகும்.2. ஆப்தால்மாஸ்கோப்பி (Ophthalmoscopy) பரிசோதனை எனப்படுவது கண்ணின் உட்புறத்தை குறிப்பாக பார்வை நரம்பினைப் பரிசோதனை செய்வதாகும்.3. பெரிமெட்ரி (Perimetry) எனப்படும் பிரத்யேக சோதனை கண்ணின் பார்வைக் களத்தை (Field of Vision) வரைபடமாகத் தயாரித்து அளிக்கிறது. க்ளகோமா முதலில் பார்வைக் களத்தில் மாற்றத்தை உண்டாக்குகிறது என்பது கவனிக்கத்தக்கது.4. கோனியோஸ்கோப்பி (Gonioscopy) எனப்படும் தனிப்பட்ட கவனத்துடன் செய்யப்படும் சோதனை கார்னியாவும் கருவிழியும் சந்திக்கும் கோணம் திறந்துள்ளதா அல்லது மூடியுள்ளதா என அறிய உதவுகிறது. இது மருத்துவர்கள் நோயாளியை பாதித்திருப்பது திறந்த கோண க்ளகோமாவா? அல்லது வளைந்த கோண க்ளகோமாவா? என முடிவு செய்ய உதவுகிறது.க்ளகோமாவிற்கு எவ்வாறு சிகிச்சை அளிக்கப்படுகிறது?நோயின் தன்மை, தீவிரம் ஆகியவற்றைப் பொறுத்தே மருத்துவர்கள் சிகிச்சையளிக்கிறார்கள்..1. மருந்தின் மூலமாக கண்ணில் அக்யூவியஸ் திரவம் வெளியேறுவதை அதிகரிக்கவோ அல்லது திரவம் சுரப்பதை குறைக்கவோ முடியும்.2. சில வகை க்ளகோமாவில் லேசர் சிகிச்சை முறையில் கண் அழுத்தம் குறைக்கப்படுகிறது. க்ளகோமாவைப் பொறுத்தமட்டில் கண் அழுத்தம் மட்டுமே குறைக்கப்பட்டு மேலும் தீவிரமடைவதைத் தடுக்க முடியுமே தவிர, ஏற்கெனவே உள்ள பார்வைக் குறைபாட்டைக் குணப்படுத்த சிகிச்சை ஏதும் இல்லை.ஆபரேஷன் எத்தகைய சூழ்நிலையில் தேவைப்படுகிறது?லேசர் சிகிச்சை அல்லது ஆபரேஷன் முதனிலை சிகிச்சை முறையாக, தீவிர மற்றும் பரம்பரையான க்ளகோமாவிற்கு அளிக்கப்படுகிறது. தொடர்நிலை க்ளகோமா நோயாளிகளுக்கு அதிகபட்ச மருந்துகள் அளித்தும் கண் உள் அழுத்தம் கட்டுப்படவில்லை என்றாலும், நோயாளிகள் மருந்தின் மூலமாக கட்டுப்படுத்துவதை தாங்கிக் கொள்ள முடியாத நிலையிலும் ஆபரேஷன் முறை கையாளப்படுகிறது.ஆபரேஷன் எவ்வாறு செய்யப்படுகிறது?கண்ணிலிருந்து அக்யூவியஸ் திரவம் முறையாக வெளியேறுவதற்காக ஒரு புதிய வழியை ஏற்படுத்துவதே ஆபரேஷன் ஆகும்.ஆபரேஷன் முடிந்த பின்னர் சில வாரங்களுக்கு நீங்கள் சொட்டு மருந்து போட வேண்டும் என்று டாக்டர் அறிவுறுத்துவார். இது ஆபரேஷனுக்குப் பின்னர் கண்களில் வீக்கம் அல்லது தொற்றுநோய்க் கிருமிகள் தாக்காதவண்ணம் தடுப்பதற்காக அறிவுறுத்தப்படுகிறது. பொதுவாக ஆபரேஷனுக்குப் பின்னர் 60 முதல் 80 சதவிகிதம் கண் உள் அழுத்தம் குறைவதற்கான வாய்ப்பு இருக்கிறது.சில நோயாளிகளுக்கு அக்யூவியஸ் திரவத்தை வெளியேற்றும் புதிய வழியில் சிரமமிருக்கும் பட்சத்தில் மீண்டும் ஒரு முறை ஆபரேஷன் தேவைப்படலாம்.ஆபரேஷனில் பக்க விளைவுகள் ஏற்படலாம். அவ்வாறு தோன்றும்பட்சத்தில் உடனடியாக உங்களுடைய மருத்துவமனையைத் தொடர்புகொள்ள வேண்டியது மிகவும் அவசியம் ஆகும்..க்ளகோமாவினால் ஏற்கெனவே ஓரளவு பார்வை பாதிக்கப்பட்டிருந்தால் அல்லது இழந்திருந்தால் என்ன செய்வது?1. க்ளகோமாவை ஆரம்பகட்ட நிலையில் அடையாளம் கண்டு பார்வையிழப்பை தடுப்பது நடைமுறையில் மிகவும் அரிதாக இருக்கக்கூடிய சூழ்நிலையில் சிலர் ஓரளவு பார்வையை இழந்த நிலையிலேயே கண் மருத்துவமனையை நாடுகிறார்கள்.2. இழந்த பார்வையை மீட்க முடியாமல் போனாலும் இருக்கின்ற பார்வையை காப்பாற்றிக் கொள்ளவே சிகிச்சைகள் வழங்கப்படுகிறது.3. இழந்த பார்வையோடு வாழ்க்கையை வழி நடத்திச் செல்வதற்கு மிகவும் கை கொடுப்பவை லோ விஷன் உபகரணங்கள் (Low Vision Aids) எனப்படும் வசதிகள். உங்கள் மருத்துவரிடம் லோ விஷன் ஆலோசனைகளைக் கேளுங்கள், லோ விஷன் கிளினிக்கிற்கு உங்களைப் பரிந்துரைக்கும்படி வேண்டிக் கொள்ளுங்கள்.4. கண்ணியலாளர்களும் (Optometrist) சில சமூக சேவை அமைப்புகளும், சங்கர நேத்ராலயா உள்ளிட்ட கண் மருத்துவமனைகளும் லோ விஷன் எய்டு பற்றிய சேவைகளை வழங்குகின்றன. அவர்களையும் தொடர்பு கொள்ளலாம்.இந்நோயில் பார்வைக்குறை வரும் முன் நம் கண்களைக் காப்பதே சிறந்தது. 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் முழுமையான கண் பரிசோதனை செய்வதன் மூலமே க்ளகோமாவை வரும்முன் அறிந்து கண்களை காக்க முடியும் என்கிறார்கள் சங்கர நேத்ராலயாவின் க்ளகோமா சிகிச்சை வல்லுநர்கள்.