எளிதாகவும் மலிவாகவும் கிடைக்கும் கொய்யாப் பழம், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் இருந்து பல்வேறு வைட்டமின்களையும் உள்ளடக்கிய ஒரு மல்டி வைட்டமின் பழமாகும். இதனை, ஏழைகளின் ஆப்பிள் என்பார்கள். கொய்யாப்பழம் தனித்துவமான சுவையும், வாசனையும் கொண்டது. வைட்டமின் சி, போலிக் ஆசிட் மற்றும் லைகோப்பீனே(LYCO - PENAE) போன்ற ஆன்டி ஆக்சிடென்டுகள் நிறைந்தது. இப்பழத்திலுள்ள பொட்டாசியம் அளவு வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியத்திற்கு சமமானது. எனவே, கொய்யாப்பழம் இதயத்திற்கு மிகவும் நல்லது.நமது முன்னோர்கள் நோய் நொடியில்லாமல் பல்லாண்டு காலங்கள் வாழ்ந்ததற்கு, அவர்கள் உண்ணும் உணவில் அக்கறை எடுத்துக் கொண்டதே காரணம். பச்சைக் காய்கறிகளையும், பழங்களையும் அதிகளவில் சாப்பிட்டார்கள். அதனால் அவர்கள் நோய் நொடியில்லாமல் இருந்தார்கள். அத்துடன் அன்பாகவும், ஆனந்தமாகவும் ஆரோக்கியத்துடனும் வாழ்ந்தார்கள். ஆனால் நாம், இயந்திரமயமான இயந்திரமயமான இன்றைய சூழ்நிலையில் ஆரோக்கியமற்று நோய்நொடிகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நேரத்துக்கு உண்பதும் இல்லை... உறங்குவதும் இல்லை.எல்லாம் ஃபாஸ்ட் புட் என்றான உலகில் நோயுடன் இறந்துபோகிறோம். நாம் அறிவியலில் என்னதான் வளர்ச்சி அடைந்து இருந்தாலும், அதிகளவு நோய்த் தாக்குதலால் வாழ்க்கை வாழ்வதற்கே என்பதை மறந்து, வாழ்க்கை சாவதற்கே என்று சொல்லாமல் சொல்லிக்கொண்டு வாழ்கிறோம். எனவே, மன மகிழ்ச்சியோடும், மன அமைதியுடனும் நோயின்றியும் வாழ அதிகளவில் பழங்களையும், காய்கறிகளையும் உண்ண வேண்டியது அவசியம். கொய்யாப் பழத்தின் தாயகம் மெக்சிகோ நகரமாகும். இது மத்திய அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஆசியா, இந்தியா, சீனா போன்ற நாடுகளில் விளைவிக்கப்படுகிறது. இப்பழம் ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் முடியவும், ஆகஸ்டு மாத்திலிருந்து நவம்பர் மாதம் முடிய இதன் சீசனாகும். ஒவ்வோர் ஆண்டும் மெக்சிகோ நகரில் உள்ள கல்லில்லோ நகரத்தில் உலக கொய்யாப்பழக் கண்காட்சி நடத்தப்படுகிறது. உலகிலேயே கொய்யாப்பழ உற்பத்தியில் நம் இந்திய நாடு 15,250,000 மெட்ரிக் டன் உற்பத்தி செய்து முதலிடத்தில் உள்ளது. சீனா 4,400,000 மெட்ரிக் டன் உற்பத்தி செய்து இரண்டாவது இடத்தில் உள்ளது..கொய்யாப்பழ வகைகள்திண்டுக்கல் ஆயக்குடி கொய்யாப் பழம், தஞ்சாவூர் விளார் கொய்யாப் பழம், தேனி நாகலாபுரத்து கொய்யாப் பழம், சிவப்புக் கொய்யாப் பழம், வெள்ளைக் கொய்யாப் பழம், அலகாபாத் வெள்ளைக் கொய்யாப் பழம், லக்னோ கொய்யாப் பழம், பனாரஸ் ரெட் பிளஸ், அர்கா அமுல்ய, அர்கா மிருதுளா, தாய் மரூன் கொய்யாப் பழம்.கொய்யாப் பழத்தில் உள்ள சத்துக்கள்எரி சக்தி 68 கி.கலோரி. கொழுப்பு 1 கிராம். மாவுச்சத்து 14 கிராம். புரதச்சத்து 26 கிராம். பொட்டாசியம் 417 மி.கிராம். சோடியம் 2 மி.கிராம். நார்ச்சத்து 5 கிராம். கால்சியம் 18 மி. கிராம். வைட்டமின் சி. 228 மி.கிராம். வைட்டமின் பி6 0.1 மி.கிராம். மக்னீசியம் 22 மி.கிராம். இரும்புச்சத்து 0.3 மி.கிராம்.கொய்யாப் பழத்தின் மருத்துவக் குணங்கள்நோய் எதிர்ப்பு சக்தி மிகுந்த ---கொய்யாப் பழத்தில் வைட்டமின் சி சக்தி 228 மி.கிராம் உள்ளது. எலுமிச்சை பழங்களைவிட நான்கு மடங்கு அதிகமாகும். வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாக்குகிறது. அத்துடன் நோய்க் கிருமிகளின் தொற்றில் இருந்தும் பாதுகாக்கிறது.புற்றுநோயைத் தடுக்கிறது. கொய்யாப் ----பழத்தில் உள்ள லைக்கோபீனே (LYCO - PENAE), குவெர்சிடின் (QUVERCETIN), வைட்டமின் சி மற்றும் பாலிபீனால் (POLY PHENOL) ஆன்டி ஆக்சிடென்ட்டாக செயல்படுகின்றன. இவை புற்றுநோய் செல்கள் உருவாவதைத் தடுக்கின்றன. கொய்யாப்பழம் சாப்பிடுவதால் ஆண்களுக்கு உள்ள புராஸ்டேட்(PROSTATE GLAND) என்னும் சிறுநீர்ப்பை அடிச்சுரப்பியில் எற்படும் புராஸ்டேட் புற்றுநோயைத் தடுக்கிறது. லைக்கோபீனே நிறைந்துள்ளதால் மார்பகப் புற்றுநோய் செல்களை அழித்து பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்படாமல் பாதுகாக்கிறது.சர்க்கரை நோயைத் தடுக்கும்----இப்பழத்தில் நார்ச்சத்து 5 கிராம் உள்ளதாலும், குறைந்த அளவே கிளைசீமிக் இன்டெக்ஸ் (GLYCAEMIC INDEX) உள்ளதாலும் நீரிழிவு நோய் ஏற்படும் காரணிகளைத் தடுத்து விடுகின்றன. குறைந்த கிளைசீமிக் இன்டெக்சின் காரணமாக சர்க்கரையின் அளவு அதிகரிப்பது தடுக்கப்படுகிறது. நார்ச்சத்து 5 கிராம் உள்ளதாலும் இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது..இதயத்திற்குச் சிறந்தது----பொட்டாசியம், சோடியம் அளவினை மேம்படுத்துகிறது. பொட்டாசியம் 417 மில்லி கிராம் உள்ளதால் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்குக் கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது. இதயநோய் ஏற்படுவதற்கான டிரைகிளிசரைடு மற்றும் எல்.டி.எல். கொலஸ்டிரால் அளவைக் குறைக்க கொய்யாப்பழம் உதவுகிறது. மேலும் எச்.டி. எல். அளவை அதிகரிக்கச் செய்து இதயம் ஆரோக்கியமாக செயல்பட வைக்கிறது.மலச்சிக்கலைத் தடுக்கிறதுகொய்யாப்பழத்தில் நார்ச்சத்து 5 கிராம் உள்ளது. ஒரு நாளைக்குத் தேவையான நார்ச்சத்து அளவில் பன்னிரண்டு சதவிகிதம் ஒரு பழத்தில் உள்ளது. இவை உணவை நல்ல முறையில் செரிமானம் செய்து மலச்சிக்கல் ஏற்படாமல் பாதுகாக்கிறது. பழத்தை உண்ணும்போது விதைகளையும் மென்று சாப்பிட்டால் மிக எளிதாக மலம் கழிக்க முடியும். பழத்தை வெட்டிச் சாப்பிடுவதைவிட கடித்துச் சாப்பிட்டால்தான் பழத்தின் முழுப் பயனையும் பெறமுடியும்.பார்வைத் திறன் அதிகரிக்கும்-----வைட்டமின் ஏ சத்து இப்பழத்தில் அதிகம் இருப்பதால் பார்வைத் திறன் அதிகமாகும். கண் பார்வைத் திறன் அதிகமாவதால் கண்களில் கேடராக்ட் எனப்படும் கண்புரை நோய் ஏற்படுவதைத் தடுக்கிறது.கர்ப்பிணிகளுக்குச் சிறந்தது-----வைட்டமின் பி 9 எனப்படும் போலிக் ஆசிட் நிறைந்துள்ளதால் குழந்தையின் நரம்பு மண்டலத்தை நன்றாக வளர்ச்சி அடையச் செய்கிறது. புதிதாகப் பிறக்கும் குழந்தைகளுக்கும் நரம்பு கோளாறுகள் ஏற்படாமல் பாதுகாக்கிறது.பல்வலியைப் போக்கும்கொய்யா மரத்தின் இலைகளில் சக்தி வாய்ந்த அழற்சியை எதிர்த்துப் போராடும் குணம் உள்ளது. பாக்டீரியாக்கள் எனப்படும் நுண்ணுயிரிகளை எதிர்க்கும் திறன் கொண்டது. இதனால் இலைகளில் இருந்து எடுக்கப்படும் சாறு பல்வலி, ஈறுவீக்கம் மற்றும் வாய்ப்புண்களைக் குணப்படுத்தும்.மன அழுத்தம் குறைகிறது----மக்னீசியம்சத்து 22 மில்லிகிராம்உள்ளதால்உடல்தசைகள்மற்றும் நரம்புகளைஓய்வடையச்செய்கிறது. எனவே, கடினமானஉடல்உழைப்பு, நீண்டநேரம்அலுவலகப்பணிசெய்தபின்புஒருகொய்யாப்பழத்தைசாப்பிட்டால்.உடலில் அசதி குறைந்து புத்துணர்ச்சி ஏற்படுகிறது. அத்துடன் மன அழுத்தம் குறைந்து மனத்திற்கு ஊக்கத்தையும், நல்ல ஆற்றலையும் கொடுக்கிறதுமூளைக்கு நல்லது-----கொய்யாப் பழத்தில் நியாசின் மற்றும் பிரிடாக்சின் வைட்டமின்கள் உள்ளதால் மூளையின் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. அறிவாற்றல் செயல்பாட்டினையும் தூண்டுகிறது. நரம்புகளுக்கு நல்ல ஓய்வைக் கொடுக்கிறது. மூளை சிறப்பாக செயல்பட உதவுகிறது.உடல் எடையைக் குறைக்க-----நாம் உட்கொள்ளும் புரதம், நார்ச்சத்துக்களில் எந்தக் கட்டுப்பாட்டையும் கொண்டு வராமல் கொய்யாப்பழம் வளர்சிதை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதன் மூலம் உடல் எடையைக் குறைக்கச் செய்கிறது. கொய்யாப் பழம் வயிற்றை நிரப்பும் சிற்றுண்டியாகவும், மிக எளிதில் பசியைப் பூர்த்தி செய்யும் உணவாகவும் இருப்பதால், மற்ற கொழுப்பு மிக்க உணவைச் சாப்பிடத் தேவையில்லை. ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சைப் பழங்களுடன் ஒப்பிடும்போது கொய்யாப் பழத்தில் குறைந்த அளவே சர்க்கரை உள்ளது.இருமல் மற்றும் சளியைப் போக்குகிறது-----பழத்தில் வைட்டமின் சி யும், இரும்புச் சத்தும் உள்ளதால் சளி மற்றும் வைரஸ்களுக்கு எதிராக செயல்படுகிறது. கொய்யாக் காயின் சாறும் இலைகளின் சாறும் சளி மற்றும் இருமலில் இருந்து விடுபட உதவுகிறது. சுவாச மண்டலம், தொண்டை மற்றும் நுரையீரலையும் சுத்தப்படுத்துகிறது.தோலின் பொலிவை மேம்படுத்தும்----கொய்யாப் பழத்தையும் முட்டையின் வெள்ளைக் கருவையும் சேர்த்து, மிக்சியில் அரைத்து முகத்தில் பூச வேண்டும். இருபது நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவ வேண்டும். இவ்வாறு வாரத்திற்கு இரண்டு நாட்கள் செய்தால் தோலில் உள்ள இறந்த செல்கள் நீக்கப்பட்டு முகம் பொலிவு பெறும்.ஸ்கர்வி நோயைக் கட்டுப்படுத்தும்----பல் மற்றும் ஈறுகளில் இருந்து இரத்தம் வருவதற்கு ஸ்கர்வி நோய் என்று பெயர். கொய்யாப் பழத்தில் ஆரஞ்சுப் பழத்தைவிட நான்கு மடங்கு வைட்டமின் சி அதிகமுள்ளது. வைட்டமின் சி குறைபாடு காரணமாக ஸ்கர்வி நோய் ஏற்படுகிறது.எளிதாகவும், விலை மலிவாகவும் கிடைக்கும் கொய்யாப் பழத்தைப் பற்றிய விழிப்புணர்ச்சியை குழந்தைகளிடம் ஏற்படுத்த வேண்டியது பெற்றோர்களின் கடமை. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாவதுடன், புற்று நோய், சர்க்கரை நோய், இதய நோய்களையும், தற்போது நம்மை பயமுறுத்திக் கொண்டு இருக்கும் கொரொனா நோயும் வராமல் தடுத்திடலாம்.