டாக்டர் சுபா சுப்ரமணியன், நரம்பியல் நிபுணர்,ஓர் எழுத்தாளரால் மனரீதியான மந்தநிலையை அனுபவிக்கும்போது அவரால் புதிய கருத்து உள்ளடக்கத்தை உருவாக்க முடியாது என்பதைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். எந்தவோர் எழுத்தாளருக்கும் அல்லது படைப்பாளிக்கும் இந்த நிலை இயல்பானது என்றாலும், ரைட்டர்ஸ் கிராம்ப் (Writer’s Cramp) என்ற மருத்துவம் சார்ந்த நோய் அண்மைக் காலமாக அதிகரித்து வருகிறது.ரைட்டர்ஸ் கிராம்ப் என்றால் என்ன, இந்தக் குறிப்பிட்ட நிலையை ஒருவர் எப்படிச் சமாளிக்க முடியும் என்பது பற்றிய கூடுதல் விவரங்களை இந்தக் கட்டுரையில் விளக்கமாகப் பார்ப்போம். அண்மைக்கால ஆராய்ச்சியில், மக்கள் தொகையில் ஒரு மில்லியனுக்கு 7 முதல் 69 பேர் இந்தக் கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளனர் என கண்டறியப்பட்டுள்ளது. இது ஒரு குறிப்பிட்ட வகை டிஸ்டோனியா (Dystonia) ஆகும்.இது விரல்கள், கை மற்றும் முன்கைகளை பாதித்து தன்னிச்சையான இயக்கங்களை ஏற்படுத்துகிறது. மூளை, தசைகளுக்கு தவறான தகவலை அனுப்புகிறது. இதனால் தன்னிச்சையான செயல்பாடு மற்றும்/அல்லது அதிகப்படியான தசைப்பிடிப்பை ஏற்படுத்துகிறது. இந்த நிலை பெரும்பாலும் நரம்பியல் இயக்கக் கோளாறுக்கு வழிவகுக்கிறது, இதனால் கை கட்டுப்பாடு இல்லாமல் விசித்திர தோரணையில் திரும்பிக் கொள்கிறது. ஒரு நபர் நீண்ட நேரம் எழுதும்போது, குறிப்பாக தேர்வு நேரத்தில் மாணவர்கள் மத்தியில் அல்லது ஒருவர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு எழுதத் தொடங்கும்போது இந்தக் கோளாறு ஏற்படுகிறது.அறிகுறிகள்இது ஆரம்பக் கட்டத்தில் விரல் வலியில் தொடங்கி மெதுவாக தோள்பட்டை வரை பரவுகிறது. விரல்கள் வலிக்கத் தொடங்குகின்றன. மேலும், ஒரு கட்டத்தில் நீண்ட நேரத்திற்கு எழுதும் ஒருவருக்கு உணர்வின்மை அல்லது மரத்துப்போகுதல் போன்ற உணர்வு வெளிப்படத் தொடங்கும். மெதுவாக அவர்கள் பேனா அல்லது பென்சிலின் பிடியை தன் கட்டுப்பாடின்றி இழப்பதைக் காணலாம். ஒரு கட்டத்தில் தசைகள் மூளை கொடுக்கும் குறிப்புகள் விசித்திரமானவையாக இருப்பதால் மூளையுடன் ஒத்துழைப்பதை நிறுத்திக்கொள்கிறது. .பிற பொதுவான அறிகுறிகள்:• பேனா அல்லது பென்சிலை நீண்ட நேரம் வைத்திருக்க முடியாது போகுதல்• மணிக்கட்டுகள் துவழத் தொடங்குதல்• எழுதும்போது விரல்கள் நீட்டிக் கொள்வதால் பேனாவைப் பிடிப்பது கடினம் ஆகுதல்• மணிக்கட்டு மற்றும் முழங்கை வழக்கத்திற்கு மாறான நிலையில் நகருதல்• கை மற்றும் விரல்கள் கட்டளைகளுக்கு ஒத்துழைக்காமை• பேனா/பென்சிலை விரல்கள் வழக்கத்திற்கு மாறாகக் கடுமையாகப் பிடித்தல்வகைகள்எளிமையாகக் கூறுகையில், ரைட்டர்ஸ் கிராம்ப் நிலையில், மற்ற செயல்பாடுகளின்போது கை சாதாரணமாக ஒத்துழைக்கும். ஆனால், குறிப்பிட்ட தருணங்களில் மட்டுமே கட்டுப்படுத்த முடியாததாக இருக்கும்.ரைட்டர்ஸ் கிராம்ப்பில் இரண்டு அடிப்படை வகைகள் உள்ளன: எளியது மற்றும் டிஸ்டோனிக்.எளிய ரைட்டர்ஸ் கிராம்ப் நிலையில் எழுதுவதில் மட்டும் சிரமம் இருக்கும். நீங்கள் பேனாவை எடுத்தவுடன் அசாதாரண தோரணைகள் மற்றும் தன்னிச்சையான அசைவுகள் தொடங்கும். இது உங்கள் எழுதும் திறனை மட்டுமே பாதிக்கிறது.டிஸ்டோனிக் ரைட்டர்ஸ் கிராம்ப் என்பது ஒரு குறிப்பிட்டப் பணியைத் தாண்டி நகர்கிறது. இதன் அறிகுறிகள் எழுதும்போது மட்டுமல்லாது, ஷேவிங், தட்டச்சு அல்லது மேக்கப் போடுவது போன்ற பிற செயல்களைச் செய்யும்போதும் தோன்றும்.காரணங்கள்ஃபோகல் டிஸ்டோனியா என்பது உங்கள் கை மற்றும் கைகளில் உள்ள தசைகளுடன் உங்கள் மூளை எவ்வாறு பேசுகிறது என்பது சம்பத்தப்பட்ட ஒரு பிரச்சனையாகும். மீண்டும் மீண்டும் தன்னிச்சை கை அசைவுகள் மூளையின் சில பகுதிகளை மாற்றியமைப்பதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.எளிமையான ரைட்டர்ஸ் கிராம்ப், அதிகப்படியான பயன்பாடு, மோசமான எழுதும் தோரணை அல்லது பேனா அல்லது பென்சிலை தவறாகப் பிடிப்பது ஆகியவற்றுடன் தொடர்புடையது. இருப்பினும், ஒரு பேனாவை பிடித்த சில மணி நேரங்களில் அல்லாமல் சில நிமிடங்களிலேயே எளிமையான ரைட்டர்ஸ் கிராம்ப்பின் அறிகுறிகள் தொடங்குகின்றன. .மன அழுத்தம் கை தொடர்பான டிஸ்டோனியாவை ஏற்படுத்தாது என்றாலும், அது அறிகுறிகளை மோசமாக்கும். பரீட்சை எழுதும்போது ஏற்படும் மன அழுத்தம் ரைட்டர்ஸ் கிராம்ப் நிலையை மோசமாக்கும். ஆனால், அதைப் பற்றியே நினைத்திருத்தல் அல்லது கவலையுற்றிருத்தல் நிலைமையை மிக மிக மோசமாக்கும்.டிஸ்டோனிக் ரைட்டர்ஸ் கிராம்ப் எளிய ரைட்டர்ஸ் கிராம்ப்பைக் காட்டிலும் உடலில் பல பாகங்களில் பாதிப்பை ஏற்படுத்தலாம். இந்த நிலையில், நீங்கள் கத்தி மற்றும் முட்கரண்டி போன்ற பிற எழுதாத பணிகளைச் செய்யும்போது விருப்பமில்லாத இயக்கங்கள் ஏற்படலாம்.ரைட்டர்ஸ் கிராம்ப் மரபு தொடர்புடையதாகவும் இருக்கலாம்.சிகிச்சை முறைகள்தேர்வு எழுதவிருக்கும் பள்ளிக் குழந்தைகளுக்கு மென்மையான பந்துகளைப் பயன்படுத்தி எளிய பயிற்சிகளை சீரான இடைவெளியில் செய்யலாம். பெரியவர்கள்கூட அவ்வப்போது இந்தப் பயிற்சி செய்யலாம். மற்ற முறைகளில் வாய்வழி மருந்துகள் அடங்கும் -மருந்துகளின் பயன்பாடு, போடோக்ஸ் ஊசி மற்றும் கடைசி கட்டத்தில் அறுவை சிகிச்சைகூட இருக்கலாம். தளர்வு மற்றும் கவனச்சிதறல் பயிற்சிகளை அவ்வப்போது செய்தால் தசைகளில் உள்ள விறைப்புத் தன்மையை குறைக்கலாம் மற்றும் தசைகளுக்கு மூளை சமிக்ஞைகள் ஒரு குறிப்பிட்ட காலத்தில் மேம்படும்.ரைட்டர்ஸ் கிராம்ப்க்கு நேரடியான சிகிச்சை இல்லை என்றாலும், அதன் சிகிச்சையானது முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். போதுமான அளவு உடல், மன மற்றும் மருந்து சிகிச்சை எழுதும் திறனை தக்கவைக்க உதவுகிறது. பரீட்சை நேரத்தில், குழந்தைகள் ரைட்டர்ஸ் கிராம்ப் நிலைக்குச் செல்ல வாய்ப்பிருப்பதால், அதைப்பற்றி பயப்படாமல் அதைக் கடக்க அவர்களுக்கு உதவ வேண்டும் என்பதை பெற்றோர்களும், ஆசிரியர்களும் புரிந்துகொள்வது அவசியம்.ஆரோக்கியமான எழுத்துக்கான குறிப்புகள்எழுதும்போது உட்காரும் தோரணையை சரிசெய்வதன் மூலம் வலியைத் தடுக்கலாம் அல்லது வலியில் இருந்து பாதுகாக்கலாம். ஒழுங்கற்ற தோரணை உங்கள் விரல்கள் மற்றும் கையைப் பயன்படுத்தும் விதத்தை பாதிக்கும். இதிலிருந்து தற்காத்துக் கொள்ள மேலும் குறிப்புகள் சில..உங்கள் முழங்கை எவ்வளவு அதிகமாக வளைகிறதோ, அவ்வளவு அதிகமாக உங்கள் மணிக்கட்டு மற்றும் கை வலி அதிகரிக்கும். எனவே, உங்கள் முழங்கையை 90 டிகிரி அல்லது அதற்கு மேற்பட்ட நிலையில் வைக்கவும்.-உங்கள் முன்கையில் அதிக அழுத்தம் கொடுப்பதைத் தவிர்க்கவும்.-உங்கள் விரல் அசைவைக் குறைத்து, அதை தளர்வாக வைத்திருங்கள். நீங்கள் எழுதும்போது உங்கள் மணிக்கட்டு வெண்மையாக மாறக்கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.-உங்கள் விரலை அடிக்கடி நகர்த்துவதற்குப் பதிலாக, பேனா அல்லது பென்சில் நிலையை சரிசெய்ய மணிக்கட்டு மற்றும் முன்கையைப் பயன்படுத்தவும்.-உங்கள் மணிக்கட்டில் வலி இருக்குமேயானால் எழுதும் காகிதத்தை உங்கள் வசதிக்கேற்ப திருப்பி சரி செய்துகொள்ளவும். உங்கள் மணிக்கட்டை தளர்வாக வைத்திருக்க சாய்வான மேற்பரப்பை பயன்படுத்துங்கள். குறிப்பாக இடது கை பழக்கம் உள்ளவர்கள் எழுதும் போது உங்கள் கட்டைவிரல் வலித்தால், உங்கள் ஆள்காட்டி மற்றும் நடு விரல்களுக்கு இடையில் பேனாவைப் பிடித்து எழுத முயற்சிக்கவும்.-பிடிப்பு அழுத்தத்தைக் குறைக்க பெரிய விட்டம் கொண்ட பேனாக்கள் அல்லது ரப்பர் பிடிகள் கொண்ட பென்சில்களைத் தேர்வு செய்யவும்.-நிலையான பால்பாயிண்ட் பேனாக்களுக்குப் பதிலாக எளிதான மை ஓட்டமுள்ள அல்லது ஜெல் பேனாக்களை முயற்சி செய்யவும்.-எல்லாவற்றிற்கும் மேலாக, அடிக்கடி இடைவெளிகளுடன் நிதானமான வேகத்தில் எழுதுங்கள்.