அசோக மரத்தின் இலைகளின் இளம் துளிர்கள், செந்நிறப் பூக்கள், பட்டை, காய், வேர் அனைத்தும் மருத்துவக் குணங்கள் கொண்டவை. இந்த மரத்தின் காற்று மனத்துக்கும் மூளைக்கும் ஆத்மாவுக்கும் வலிமை, திட நம்பிக்கை, மகிழ்ச்சி மற்றும் நல்ல ஆரோக்கியத்தையும் வழங்கும் சிறப்பான குணங்கள் கொண்டவை என்று ஆய்வின் அடிப்படையில் தெரிய வந்துள்ளது.இலங்கையை ஆண்ட இராவணன், இராமபிரானின் மனைவி சீதையைக் கடத்திச் சென்று, அடர்த்தியான வனத்தில் சிறை வைத்திருந்தான். அந்த இடம், இன்றும் இலங்கையில் ‘அசோக வனம்’ என்ற பெயரில் இருந்து வருகிறது. இந்த அசோக வனத்தை நான் நேரில் சென்று பார்த்திருக்கிறேன்.இராவணன், சீதையை அச்சுறுத்தி, மன ரீதியாகத் துன்புறுத்தி, தன் மோகத்துக்கு இணங்க வைக்கப் பெரிதும் முயற்சித்தான். ஆனால், சீதை இராவனனின் மிரட்டலுக்குப் பயப்படாமல் அசோக வனத்தில் இருந்தார். இராமபிரான் வானரங்கள் துணையோடு இலங்கை சென்று போரிட்டு, சீதையை மீட்டு வந்தார். இராவணனின் கொடுமையால் சீதையின் உடல் நலம், மன நலம், அழகு, ஆரோக்கியம் யாவும் சிதைந்திருக்கும் என்று நினைத்துக் கொண்டிருந்தவர்கள் சீதை ஆரோக்கியமாகவும் வலிமையான மன நிலையுடனும் திரும்பி வந்ததைக் கண்டு வியந்து போனார்கள். சீதையின் ஆரோக்கியத்துக்குக் காரணம், அசோக மரங்கள் சூழ்ந்த அசோக வனம்தான். அசோக மரத்தின் மருத்துவப் பிரதிபலிப்புதான்.அசோக மரத்தின் அனைத்து பாகங்களும் பெண்களின் கர்ப்பப்பை, சினைப் பை, அந்தரங்க உறுப்புப் பிரச்னைகள், சிறுநீர்ப்பை, சிறுநீரகப் பிரச்சினைகள் ஆகியவற்றுக்கும் அருமருந்தாக இருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. சித்தா, ஆயுர்வேதம், யுனானி மூலிகை மருந்துகளைத் தயாரிக்கும் பல கம்பெனிகள் அசோக மரத்தின் பாகங்களைக் கொண்டு ஷர்பத்தாகவும் லேகிய வடிவிலும் பெண்களின் பல பிரச்சினைகளுக்கு மருந்து தயாரித்து விற்பனை செய்கிறார்கள்..என் பள்ளிப் படிப்பு முதல் பட்டப்படிப்பு வரை செடி, கொடி, மூலிகைகள் பற்றி, அவற்றின் மருத்துவக் குணங்கள் பற்றி, வெளிவந்த நூல்களை நிறையப் படிப்பேன். 1978-ல் வாணியம்பாடி பாலாற்றில் பெரும் வெள்ளம் ஏற்பட்டது. பாலாற்றங்கரையில் இருந்த எங்கள் குடிசை, வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. தமிழக அரசு, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வாணியம்பாடி நியூ டவுனில் இலவச வீட்டு மனைகளை வழங்கியபின் பாலாற்றங்கரை ஓரங்களில் வீடுகள் கட்டி வசித்து வந்தவர்களை அங்கிருந்து அகற்றிவிட்டது.வெள்ளம் குறைந்தபின், எங்கள் குடிசை இருந்த பகுதியைப் போய்ப் பார்த்தேன். நான் வைத்திருந்த புத்தகங்களில் சில கரையோரம் ஒதுங்கி, புதர்களிலும் சேற்றிலும் கிடந்ததைக் கண்டேன். அவற்றைப் பத்திரமாக அருகில் இருந்த வெங்கடேஸ்வரா அச்சகத்துக்கு எடுத்துப் போனேன். அதன் உரிமையாளர் இ.எல்.சௌந்தர்ராஜனைப் பார்த்துப் புத்தகங்களை பைண்ட் செய்து கொடுக்கும்படிக் கேட்டேன். ‘‘இந்தப் புத்தகங்கள் சேறு படிந்து கசங்கி இருப்பதால், சுத்தம் பண்ணி, பைண்டிங் செய்வது சிரமம்!’’ என்று சொன்னவர், புத்தகம் ஒன்றை எடுத்துப் பிரித்துப் பக்கங்களைப் புரட்டியவர், ‘‘இது மருத்துவப் புத்தகமாகத் தெரிகிறது.. உதவி செய்ய முயற்சிக்கிறேன்’’ என்று புத்தகங்களைப் பெற்றுக் கொண்டார். ‘‘தம்பி, இந்தப் புத்தகத்தில் அசோக மரப்பட்டை, இலைகள், பூக்களை மருந்தாகத் தயாரித்துச் சாப்பிட்டால் மலட்டுத் தன்மை நீங்கி, குழந்தை பாக்கியம் ஏற்படும் என்று போட்டிருப்பதைப் படித்தேன். அந்த மூலிகை மருந்து எங்கே கிடைக்கும்? அதை எனக்குக் கொண்டு வந்து தர முடியுமா?’’ என்று கேட்டார்.நான் அசோக மரத்தைத் தேடிக் கண்டுபிடித்து அதன் இலைகள், பூக்கள், பட்டை ஆகியவற்றை லேகியமாக்கி எடுத்துச் சென்றேன். அப்போதுதான் அவருடைய இளைய மகன் வெங்கடேசனை அழைத்து அவருடைய மனைவி வேலூரில் பிரபலமான ஒரு தனியார் மருத்துவ மனையில் பல மாதங்களாக சிகிச்சையில் இருப்பதைச் சொன்னார். திருமணம் ஆகி ஓராண்டுதான் ஆகிறது. அந்தப் பெண்ணிற்கு கர்ப்பப் பையையும் சினைப் பையையும் அகற்றிவிட வேண்டும். கடுமையாகச் சேதம் அடைந்திருக்கிறது என்று டாக்டர்கள் கூறுகிறார்கள். மாத விலக்கு போக்கு பல மாதங்களாக எந்த மருந்துக்கும் கட்டுப்படவில்லை என்று கூறி அந்தப் பெண்மணியையும் மருத்துவக் குறிப்புகளையும் காண்பித்தார்கள். ‘இறைவனின் அருள் உங்களுக்குக் கிடைக்கப் பிரார்த்திக்கிறேன்!’’ என்று நான் சொன்னேன். அதற்கு வெங்கடேசன், ‘‘நான் கடவுள் நம்பிக்கை இல்லாத நாத்திகன். நான் உங்களை நம்புகிறேன் அவ்வளவுதான்!’’ என்றார்..அசோகா மருந்தை என்னிடம் பெற்றுக் கொண்ட அவர், அவருடைய மனைவிக்குக் கொடுத்துச் சாப்பிட வைத்தார். அந்தப் பெண்மணி மெல்ல மெல்லக் குணம் பெற்றார். அடுத்த ஆண்டு அவருக்கு ஓர் ஆண் குழந்தையும், 3-ஆவது ஆண்டு ஓர் பெண் குழந்தையும் பிறந்தது. வெங்கடேசனின் மனைவிக்கு அளித்த சிகிச்சைக்காக நான் அவர்களிடம் பணம் வாங்கவில்லை. அவர்களும் புத்தகங்களை பைண்ட் செய்து கொடுத்ததற்காக என்னிடம் பணம் வாங்கவில்லை.அதன்பிறகு, இ.எல்.சௌந்தர்ராஜன் அவருடைய வீட்டிற்கு அருகில் உள்ள அம்பலூர் கிராமத்தில் அவருடைய சொந்தச் செலவில் எனக்கு வாடகைக்கு ஒரு வீட்டை எடுத்துக் கொடுத்தார். அங்குதான் 1978-ல் என் முதல் மருத்துவமனையை திரு கரிய கவுண்டர் எம்.எல்.ஏ. தலைமையில், வாணியம்பாடி இஸ்லாமியா கல்லூரி முதல்வர் பேராசிரியர் மீர்ஜா அப்துல் மாஜீத் திறந்து வைத்து என்னை ஆசீர்வதித்தார்.என் மருத்துவமனை இருந்த அம்பலூரைச் சுற்றி 40 கிராமங்கள் உள்ளன. என்னைத் தவிர அங்கு ஒருவர் கூட இஸ்லாமியர் கிடையாது. அங்குதான் இந்து சமுதாய மக்களுடன் நான் நெருங்கிப் பழகும் அரிய வாய்ப்பு கிடைத்தது.நாத்திகரான வெங்கடேசன் என் நட்புக்குப் பின் ஆத்திகராக மாறி, இன்று வரை கடந்த 35 ஆண்டுகளாக ஒவ்வோர் ஆண்டும் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கும், திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கும் தவறாமல் சென்று வருகிறார். செல்வதற்கு முன் தவறாமல் என்னைச் சந்தித்துப் பொன்னாடை போர்த்திவிட்டு, இனிப்பு கொடுத்து மரியாதை செலுத்திவிட்டுக் கிளம்பும் பழக்கத்தை இன்று வரை அவர் தொடர்ந்து கொண்டிருக்கிறார். அதே மாதிரி, புனித ரம்ஜான் , பக்ரீத் பண்டிகை காலங்களில் அவர்தான் எங்கள் வீட்டில் முதல் விருந்தினராக இருப்பது வழக்கம்.இந்த நிகழ்வுகளை இங்கு நான் சொல்வதற்கு முக்கியக் காரணம், ‘அசோகா மரம்’ எப்படி திருமணமான ஒரு புதுப் பெண்ணை மரணத்திலிருந்து மீட்டுக் குழந்தை பாக்கியம் கிடைக்கச் செய்தது, பயனடைந்த குடும்பம் சிகிச்சை அளித்த மருத்துவருக்கு மருத்துவமனை தொடங்க உதவியாக இருந்தது? ஒரு நாத்திகர், மனைவியின் மருத்துவ சிகிச்சைக்குப் பின் எப்படி ஆத்திகராக மாறினார்? மத நல்லிணக்கத்துக்கு மருந்துகூட உதவுமா? இப்படிப் பல கேள்விகளை நம் முன் வைத்த நிகழ்வுகள் ஆயிற்றே, அவற்றை இங்கு சொல்லாமல் விடுவது எப்படி?இதைத் தொடர்ந்துதான், வாணியம்பாடியில் இந்துக் கோயில்களில் வைத்து வணங்கப்படும் மரம், செடி கொடிகளைக் கொண்ட மூலிகைத் தோட்டத்தை உருவாக்கி உள்ளேன். இலங்கையிலிருந்து வரவழைக்கப்பட்ட அசோகா செடிகளை நட்டு அசோக வனத்தை உருவாக்கியிருக்கிறேன். அதில் பூக்கும் செந்நிறப் பூக்கள் மற்றும் அழகான இலைகளையும் காணும்போது மனம் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறது..அசோக மரம்வாணியம்பாடியில் உள்ள எங்கள் மொகல் கார்டனில் இந்து, சமணர், புத்தர் ஆலயங்களில் தல விருட்சமாக வைத்து வணங்கப்படும் மருத்துவக் குணம் கொண்ட தெய்வீக மரங்களின் தோட்டம் ஒன்றை 10 ஏக்கரில் உருவாக்கிக் கொண்டிருந்தபோது, இராம பிரானையும் சீதையையும் தெய்வமாக வணங்கும் ‘இஸ்கான்’ அமைப்பைச் சேர்ந்த (ஹரே ராமா, ஹரே கிருஷ்ணா) சிலரும் அதன் உலகத் தலைவரும் என் தோட்டத்துக்கு வருகை தந்திருந்தார்கள். அவர்களுடன், கர்நாடக மாநில அரசின் தலைமைச் செயலாளர் ஜெமீர் பாஹா ஐ.ஏ.எஸ். அவர்களும் வந்திருந்தார்கள்.இஸ்கான் தலைவரைப் பார்த்து, ‘‘நீங்கள் வணங்கும் தாய் சீதை இலங்கையில் இராவணனின் அசோகா வனத்தில் இருந்தார். அசோகா செடிகள் தன் நிழலில் நறுமணம், ஆரோக்கியம் அழகு, மன வலிமை குறையாமல் சீதையைப் பார்த்துக் கொண்டன. அந்த வனத்திலிருந்து அசோகா செடிகளை இங்கு கொண்டு வந்திருக்கிறேன். உங்கள் கரங்களால் அசோகா செடிகளை இங்கு நடுங்கள். அது சரியாக இருக்கும்!’’ என்றேன்.இஸ்கான் தலைவரும் கர்நாடக தலைமைச் செயலாளரும் விசேஷமான பக்தியுடன் ஒப்புக் கொண்டனர். தலைமைச் செயலாளர் திருக்குர்-ஆன் மந்திரங்களை ஓதி இறைவனிடம் பிரார்த்தனை செய்தபின் 100 அசோகா மரங்களின் கன்றுகளை இருவரும் நட்டனர். இன்று அவை நல்ல முறையில் வளர்ந்து பூக்கள் பூத்து, செந்நிறப் பூச் செண்டுகளாய் இதமான காற்றுடன் நறுமணம் வீசிக் கொண்டிருக்கின்றன.அசோகா மரம் 10 முதல் 15 அடி உயரம் வரை வளரும். இளம் துளிர்கள், நாயின் நாக்கு கீழ் நோக்கித் தொங்குவதைப் போலக் காட்சியளிக்கும். சாக்லேட் நிறத்தில் அழகாக, பள பளப்பாக வாயில் போட்டு மென்று சாப்பிடுவதற்கு மிருதுவாகவும், கசப்பு இல்லாமலும் இருக்கும். சிவப்பும் மஞ்சளும் கொண்ட நட்சத்திரக் கூட்டம்போல, ஒரு பூச்செண்டைப் போல இருக்கும்.இதனுடைய காய்கள் மொச்சைக் காய் வடிவில் 6 அங்குல நீளம், 1 அங்குல அகலம் இருக்கும். அதற்குள் நீளமான விதைகள் இருக்கும். இலைகள் முதிர்ந்தபின் பச்சை நிறத்தில் கெட்டியாகவும் மா இலைகளைப் போல ஆனால், அதைவிட நீளமாகவும் இருக்கும்.அசோக மரத்தின் மருத்துவக் குணங்கள்அண்மையில், டைனிக் ஜாக்கரான் பத்திரிகை மிகப் பெரிய செய்திக் கட்டுரை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதாவது இந்தியாவின் மத்தியப் பிரதேசக் காடுகளில் நடத்திய ஆராய்ச்சிகளின் விளைவாக ஜம்ஷெட்பூர் வனங்களில் அசோக மரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றை ஒன்றிய அரசு மிகவும் சிரத்தையுடன் பாதுகாத்து வருகிறது..பெண்களின் மனத் தளர்வு (mental depression), மன அழுத்தம் போன்றவற்றை நீக்கி, சந்தோஷத்தைக் கொடுக்கும் இம்மரம், கர்ப்பப் பை, சினைப் பை, சிறுநீர்ப் பை ஆகியவற்றின் பிரச்சினைகளைத் தீர்ப்பதுடன், சிறுநீரகக் கோளாறுகளையும் சரி செய்கிறது.கர்ப்பப் பை கட்டிகள், சினைக் கட்டிகள், மாத விலக்குப் பிரச்சினைகள், கர்ப்பப் பை சுருங்கி சிறியதாக இருத்தல், கர்ப்பப் பை வீங்கி விரிவடைந்து அதிகமாக மாத விலக்கு ஏற்பட்டு அழுகிப்போகும் நிலையையும் அசோக மரத்தின் மருந்துகள் சரி செய்து குணமாக்குவதாக மூலிகை மருத்துவ நூல்களும் வல்லுநர்கள் எழுதி வெளியிட்டுள்ள ஆராய்ச்சிக் கட்டுரைகளும் தெரிவிக்கின்றன.