குழந்தைகள், பெரியவர்கள் என்று எந்த வித்தியாசமும் இல்லாமல், எல்லோரும் விரும்பிச் சாப்பிடும் ஐஸ் ‘குல்பி’. சென்னையில் இரவு நேரத்தில், சிவப்பு நிற துணி சுற்றிய பெரிய குல்பி பானையைத் தள்ளுவண்டியில் வைத்தபடி மணி அடித்துக்கொண்டே ஒவ்வொரு தெருவும் சுற்றி வரும் குல்பி விற்பவரை, எதிர்பார்த்து காத்திருப்பவர்கள் பலர் இருக்கிறார்கள். ஐஸ் கிரீம் பார்லருக்கு சென்றாலும் பலரது சாய்ஸ் குல்பிதான்.பங்குனி வெயிலின் சீற்றம் ஆரம்பித்துவிட்ட இந்த வேளையில், உடல் எடையைப் பற்றி எந்தக் கவலையும் இல்லாமல் ஐஸ் கிரீம், குளிர்பானங்கள் என்று புகுந்து விளையாடுபவர்கள் அதிகம். அவ்வாறு குல்பி சாப்பிடுவது உடல் எடையை அதிகரிக்குமா? என்கிற கேள்வியும் எழுகிறது. ஆம் எனில், அதற்கு தீர்வு என்ன? என்பது பற்றி பார்க்கலாம்.குல்பியின் பூர்வீகம் தெற்கு ஆசியா. பால், சர்க்கரை மற்றும் சில சுவையூட்டிகளை ஒன்றாகக் கலந்து, நன்றாக சுண்டக் காய்ச்சித் தயாரிக்கப்படும் இதை, உறைய வைத்து ‘ஜில்’லென்று சாப்பிடுவார்கள். அதிக கொழுப்புச்சத்துக் கொண்ட ஃபுல் கிரீம் பாலை, மூன்றில் ஒரு மடங்காக சுண்டவைத்து குல்பி தயாரிக்கிறார்கள்.சாதாரணமாக நாம் சாப்பிடும் ஐஸ் கிரீமைவிட, குல்பி சத்துக்கள் நிறைந்தது. ஏனெனில், ஐஸ் கிரீம் தயாரிக்க பிரிசர்வேட்டிவ்களை சேர்ப்பார்கள். ஆனால், குல்பியில் பால், சர்க்கரை மற்றும் இயற்கையான சுவையூட்டிகளே பெரும்பாலும் சேர்க்கப்படுகின்றன.குல்பியில் முக்கிய மூலப் பொருளாக சேர்க்கப்படும் பாலில் கால்சியம் நிறைந்துள்ளது. ஒருவருக்கு ஒரு நாளுக்கு தேவையான கால்சியத்தில், எழுபது சதவிகிதம் ஒரு கப் பாலின் மூலம் கிடைக்கும். பால், எலும்புகள் மற்றும் பற்களை வலிமைப்படுத்துகிறது. இதில் கார்போஹைட்ரேட் குறைவாகவும், புரதம் அதிகமாகவும் உள்ளது.அதேசமயம் குல்பியில் சர்க்கரை அதிகமாக சேர்க்கப்படுவதால் உடல் பருமன், சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளவர்கள், இதை அளவோடு சாப்பிடுவது நல்லது. சர்க்கரையில் கலோரிகள் அதிகம் உள்ளன. இதனால் உடல் எடை மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு உண்டு என்கிறார்கள்..மாம்பழ குல்பி, ஆரஞ்சு குல்பி, மலாய் குல்பி, கேசர் குல்பி, சாக்லெட் குல்பி என்று பலவகையான குல்பிகள் கிடைக்கின்றன. இதில் பலரும் விரும்பி சாப்பிடுவது ‘மலாய் குல்பி’. மலாய் குல்பியில் கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி-1, வைட்டமின் பி2 போன்ற சத்துக்கள் உள்ளன.ஒரு மலாய் குல்பி சாப்பிட்டால் உடலில் கூடுதலாக 206 கலோரிகள் சேரும். ஒரு நபருக்கு, ஒரு நாளுக்கு தேவையான கலோரி அளவில் 10 சதவிகிதம் ஒரு மலாய் குல்பி சாப்பிடுவதால் கிடைத்துவிடும். உடல் எடை அதிகம் உள்ள நபர்கள் இந்தக் கலோரியை எரிக்க வேண்டும் என்றால் 1 மணி நேரம் 2 நிமிடங்கள் நடைப்பயிற்சி, 21 நிமிடங்கள் ஓட்டப்பயிற்சி, 27 நிமிடங்கள் சைக்கிள் பயிற்சி, 35 நிமிடங்கள் நீச்சல் பயிற்சி என இவற்றில் ஏதாவது ஒரு உடற்பயிற்சியை செய்யலாம்.ஒரு நாளுக்கு, குறைந்தது ஒரு குல்பியாவது சாப்பிடும் ‘குல்பி பிரியர்கள்’ அதை வாரத்துக்கு ஒன்றாகக் குறைத்துக்கொள்ளலாம். ஏனெனில் சர்க்கரை மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை தினமும் சாப்பிடுபவர்களுக்கு, காலப்போக்கில் உடல் பருமன், இதய நோய் மற்றும் சர்க்கரை நோய் வரும் வாய்ப்பு அதிகம் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.-ராஜி