‘மூச்சிறைக்க ஓடிவந்துஎன் முதல் ருதுவைஉன் இலையொன்றைகிள்ளியபடியேதொடங்கிற்றுஎன் பதின் பருவம்’- எழுத்தாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தமிழச்சி தங்கபாண்டியன், ‘மஞ்சணத்தி’ என்னும் பெயரில் எழுதிய கவிதைப் புத்தகத்தில் இடம்பெற்ற கவிதை இது. ஒரு பெண், தான் பருவமடைந்த செய்தியை, முதன் முதலில் தன் தாயிடம்கூட கூறாமல், மஞ்சணத்தி மரத்திடம் கூறுவதாக இந்தக்கவிதையில் எழுதப்பட்டுள்ளது. அந்த அளவுக்கு மஞ்சணத்தி பெருமை பெற்றது.இதேபோல் மஞ்சணத்தியின் பெருமையை பறைசாற்றும் இந்தக் கவிதை கொஞ்சம் வித்தியாசமானது. ‘மஞ்சணத்தி மரத்துல தவுட்டுக் குருவிகளோட கெச்சட்டமும் கை புடிச்சு வழித் துணையா சக்கலாக் கரடு வரை வந்து போகும்...’-மஞ்சணத்தியின் பெருமையை இந்தக் கவிதை வரிகள் சொல்வதுபோலவே ஒருவர் தனது சிறுகதைத் தொகுப்பில், ‘இரு மைனாக்கள் மஞ்சோனா மரக்கிளையில் சாவகாசமாக உட்கார்ந்தபடி அலையாடும் குளத்தைப் பார்த்தபடி இருந்தன’ என்று சுவைபட எழுதியுள்ளார். அந்த அளவுக்கு சிறப்பு வாய்ந்த மஞ்சணத்திக்கு நுணா என்றொரு பெயரும் உண்டு..மருந்தாகும் மஞ்சணத்திஇதன் அனைத்து பாகங்களும் பல்வேறுவிதத்தில் மனிதனுக்குப் பயன்படக்கூடியது. நிலத்தில் பயிர் செய்வதற்குமுன் தழைச்சத்தாக இதை இடுவார்கள். அதேபோன்று இதன் விறகுகள் மற்றும் சுள்ளிகள் அடுப்பு எரிக்கப் பயன்படுத்தப்படுகிறது. மஞ்சணத்தி மரத்திலிருந்து அழகிய மரப்பொருள்கள் செய்யப்படுகின்றன. இதன் காய்கள் பல்பொடி செய்யப் பயன்படுத்தப்படுகிறது. பழங்களைச் சாப்பிடுவதால் வீக்கத்தைக் கரைக்கும். ஆஸ்துமாவுக்கும் இதன் பழம் மருந்தாகிறது.மஞ்சணத்தி ஒரு மூலிகை என்றதும், அது காடுகளிலும் மலைகளிலும் கிடைக்கக்கூடியது என்றே பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தில் தன்னிச்சையாக வளரும் சீமைக்கருவேல மரத்துக்கு அடுத்தபடியாக செழித்து வளரும் மரம் இது. இது மிகச் சாதாரணமாக நம் வீட்டுத் தோட்டங்களிலும் வயல்வெளிகளின் வேலி ஓரங்களிலும் தாராளமாக செழித்து வளரும். ஏன் தரிசு நிலங்களிலும்கூட இந்த மஞ்சணத்தியை மஞ்சோனா, மஞ்சள் நீராட்டி, நுணா, நோனி என்ற பெயர்களில் அழைக்கிறார்கள். இதன் தாவரவியல் பெயர் Morinda Tinctoria.சங்க காலத்தில் தலைவியும் தோழியும் மலர்களைக் குவித்து விளையாடுவார்கள். அதில் 99 வகைப் பூக்கள் இடம்பிடிக்கும். அதை தணக்கம் பூ என்பார்கள். அந்தப் பூக்களில் மஞ்சணத்திப்பூவும் ஒன்று. இதன் மரம் மிகவும் லேசானது; ஆனால் நாரோட்டம் இருப்பதால் வலிமையானது. அந்தக் காலத்தில் நீர் இறைக்கும் கமலையில் எருதுகளின் கழுத்தில் பூட்டப்பட்டிருப்பது இந்த நுணா மரத்தால் செய்யப்பட்டதே. நிம்மதியான உறக்கம் வரவழைக்கும் கட்டில்களும் இந்த மரத்தால் செய்யப்படுபவையே. குங்குமச் சிமிழ், தெய்வச் சிலைகள் போன்ற கலைப்பொருள்கள் இந்த நுணா மரத்தில்தான் செதுக்கப்படும்.மாவிலையைப் போன்ற இலைகளைக் கொண்டிருந்தாலும் எதிரடுக்கில் இலைகள் காணப்படும். வெள்ளை வெளேர்னு பூக்கள் பூத்திருக்கும். காய்கள் முடிச்சு போட்ட மாதிரி இருக்கும். பச்சை நிறக் காய்கள் பழமானதும் கறுப்பு நிறமாகி விடும். சுமார் 15 அடி உயரம் வரை வளரக்கூடிய இந்த நுணா மரத்தின் உள்புறம் மஞ்சள் நிறமாக இருக்கும். அதனால்தான் இதை மஞ்சணத்தி என்று சொல்கிறார்கள். இதில் செலினியம், துத்தநாகம் போன்ற தாது உப்புகள் இயற்கையாகவே இருக்கிறது. நுணா மரத்தின் பழத்தைச் சாப்பிடலாம். ஆனால், இதைச் சாப்பிட்டதும் வெற்றிலை, பாக்கு போட்டால் எப்படி நாக்கு சிவக்குமோ அதேபோல் கறுப்பு நிறத்தில் காணப்படும்..மஞ்சணத்தி எனப்படும் நுணா வெப்பம் தணிக்கும், வீக்கம் கரைக்கும், மாந்தம் போக்கும், கல்லீரல் - மண்ணீரல் கோளாறுகளைத் தீர்க்கும், பசியைத் தூண்டும், தோல் நோய் போக்கும் என பல்வேறு மருத்துவக் குணங்களைக் கொண்டது.இன்றைக்கும் கிராமங்களில் குழந்தைகளுக்கு வரும் மாந்தம், பேதியை நிறுத்த நுணா இலையில் ஒரு கசாயம் செய்து கொடுக்கிறார்கள். மஞ்சணத்தி இலையின் நடு நரம்புகளை எடுத்துவிட்டு அதனுடன் துளசி, கரிசலாங்கண்ணி, மிளகு, சுக்கு சேர்த்துக் கஷாயம் செய்து வடிகட்டி குழந்தைகளின் வயதுக்கேற்றபடி கால் சங்கு(பாலாடை), அரை சங்கு கொடுத்து வந்தால் மாந்தம், பேதி குணமாகும். இதேபோல் மஞ்சணத்தி இலையை மையாக அரைத்துப் புண், ரணம், சிரங்குகளில் வைத்துக் கட்டினால் குணமாகும். இலையை இடித்துப் பிழிந்து சாறு எடுத்து இடுப்புவலி உள்ள இடங்களில் பூசினால் பலன் கிடைக்கும். காயை அரைத்துச் சாறு எடுத்து தொண்டையில் பூசி வந்தால் தொண்டை நோய்கள் நீங்கும்.ஒரு பங்கு மஞ்சணத்தி இலைச்சாற்றுடன் நொச்சி, உத்தாமணி, பொடுதலை ஆகிய மூன்றின் சாறு ஒரு பங்கு சேர்த்து மூன்று முதல் நான்குவேளை கொடுத்து வந்தால் எல்லாவிதமான மாந்தமும் நீங்கும். குறிப்பாக, ஆறு மாதக் குழந்தைக்கு 50 சொட்டு, ஒரு வயது முதல் இரண்டு வயது வரையிலான குழந்தைகளுக்கு 15 மி.லி, மூன்று வயதுக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு 30 மி.லி கொடுக்கலாம். இத்தகைய சூழலில் எளிதில் செரிமானமாகும் உணவுகளைக் கொடுக்க வேண்டியது அவசியம்.குளிர் காய்ச்சலுக்கு நல்லதொரு மருந்தாகச் செயல்படுகிறது. மஞ்சணத்தியின் பட்டை சிறிதளவு எடுத்துக் கொண்டு அரை ஸ்பூன் சீரகம், பனங்கற்கண்டு சேர்த்து தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து கஷாயம் செய்து கொள்ள வேண்டும். அதை வடிகட்டி சுமார் 50 மி.லி அளவு காலை மற்றும் இரவு உணவுக்கு முன் அருந்தி வந்தால் காய்ச்சலைத் தடுப்பதுடன் வயிற்றுக் கோளாறுகளைக் குணப்படுத்தும்.மாதவிடாய்க் கோளாறுகளைக் குணப்படுத்தும்மஞ்சணத்தியின் காயும், இலையும் மாதவிடாய்க் கோளாறுகளைக் குணப்படுத்தக்கூடியவை. மஞ்சணத்தி இலையை பசையாக அரைத்து நெல்லிக்காய் அளவு எடுத்துக் கொள்ளுங்கள். அதேஅளவு இதன் காயையும் அரைத்துச் சேர்த்து சிறிது மிளகுத்தூள், கால் ஸ்பூன் சீரகம் சேர்த்து ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க விட வேண்டும். அதில் 50 முதல் 100 மி.லி வரை எடுத்து 48 நாள்கள் தொடர்ந்து குடித்து வந்தால் மாதவிடாய்க் கோளாறுகள் நீங்கிவிடும். இதைச் சர்க்கரை நோயாளிகள் குடித்து வந்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை கட்டுக்குள் வரும்..பல்பொடியாகவும் பயன்படுத்தலாம்காயுடன் சம அளவு கல் உப்பு சேர்த்து அரைத்து அடையாகத் தட்டி காய வைத்து அரைத்தால் பல்பொடி தயார். இதைக் கொண்டு தினமும் பல் துலக்கி வந்தால் பற்கள் தூய்மையாகும். அத்துடன் பல் வலி, பல் அரணை, வீக்கம், ரத்தக்கசிவு போன்றவை சரியாகும். இதன் வேரைக் கஷாயம் செய்து குடித்து வந்தால் சுகபேதியாகும். இது எந்தவிதச் சிரமத்தையும் ஏற்படுத்தாமல் மலச்சிக்கல் பிரச்னையை சரி செய்யும்.ஒரு கிலோ மஞ்சணத்திப் பட்டையை இடித்து அதைவிட நான்கு மடங்கு தண்ணீர் ஊற்றி 8-ல் ஒரு பங்காக வற்றுமளவு காய்ச்ச வேண்டும். இதனுடன் சம அளவு எலுமிச்சைச் சாறு, ஒரு லிட்டர் நல்லெண்ணெய் சேர்த்து தைலப் பதமாகும் வரை காய்ச்ச வேண்டும். இந்தத் தைலத்தை வாரம் ஒருநாள் தலை மற்றும் உடல் முழுவதும் தேய்த்து அரை மணி நேரம் கழித்துக் குளித்து வந்தால் கழலைக் கட்டிகள், முறைக் காய்ச்சல், படை நோய்கள் போன்றவை குணமாகும்.இப்படியாக பல்வேறு நோய்களைப் போக்குவதில் மஞ்சணத்திக்கு சிறப்பான பங்கு உண்டு.