சென்னை தோல் மருத்துவ மையம்ஒரு முடி உதிர்ந்தால் உயிரில் ஒரு துளி உதிர்ந்தது போல் கவலைப்படும் யுவன் யுவதிகளும், வயதிலும் அறிவிலும் முதிர்ந்தவர்களும்கூடக் கோபம் தலைக்கேறும்போது “போடா மயிரு’’ என்று வைவது வாடிக்கையாகி விட்டது. மயிர் என்பது உண்மையிலேயே கெட்ட வார்த்தையா? மிருகங்களாயினும், மனிதர்களாயினும் உயிர் வாழ இன்றியமையாதது தோல். உயிர் வாழ இன்றியமையாத தோலின் உயிரையே காப்பதுதான் மயிர்.ஆம். இன்று நாம் கெட்ட வார்த்தையாகப் பயன்படுத்தும் ‘மயிர்’ என்பது நம் முடிதான். வள்ளுவப் பெருந்தகை ‘மயிர் நீப்பின் உயிர் வாழாக் கவரி மா’ என்று குறிப்பிட்டது மயிர் என்ற முடியின் முக்கியத்துவத்தைத்தான். கவரி மா என்பது இமயமலை உச்சிகளில் மிக மிகக் குளிர்ந்த சூழலில் வாழக்கூடிய, நீண்ட கொம்புகளுடைய, உடல் முழுதும் மிக அடர்ந்த சடை முடிகளால் கவரப்பட்ட, ஆநிரை இனத்தைச் சேர்ந்த மா விலங்கு. அடர்ந்த முடிகளால்தான் இதன் உடல் வெப்பம் ஒரே சீராகப் பராமரிக்கப்பட்டு உயிர் வாழ முடிகிறது. ஒரு சில முடிகள் உதிர்ந்தாலே போதும், இந்த மாபெரும் விலங்கின் உடல் வெப்பம் குறைந்து உயிருக்குக் கேடாகி விடும்.ஆனால், ‘கவரி மா’ என்ற சொல் ‘கவரி மான்’ என்று தவறாகப் பொருள் கொள்ளப்பட்டு, கவரி மானின் மயிர் உதிர்ந்தால் அதன் அழகு குறைந்துவிடும் என்று மேலும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு, மயிர் உதிர்ந்து தன் அழகு குறைந்தால் கவரி மான் உயிர் நீத்து விடும் என்று மென்மேலும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு, வள்ளுவப் பேராசான் மயிர் உதிர்தலை மானக் கேட்டுக்கு உவமையாகச் சொன்னதாக முற்றிலும் தவறாகப் பொருள் கூறப்பட்டு அதுவே வழக்கத்திலும் இடம் பெற்றுவிட்டது அந்தோ பரிதாபம்தான்.மருத்துவர்க்கெல்லாம் மருத்துவர், உலகின் மூத்த முதல் மருத்துவ மாமேதை வள்ளுவப் பெருமான், உயிர் காக்கும் முடியின் அதாவது மயிரின் மகத்துவத்தை 2,600 ஆண்டுகளுக்கு முன்னரே அறிந்து பாடியிருப்பது ஒவ்வொரு தமிழனுக்கும் பெருமை. அத்தகைய பேரறிஞர் அன்று பயன்படுத்திய மயிர் என்ற அழகிய, உன்னத, உயரிய சொல் இன்று குற்றம் என்று கருதப்படும் கேலிச் சொல், வசவுச் சொல், அவமானச் சொல். எவ்வளவு பெரிய பொருட் பிழை இது. மயிர் என்ற தூய தமிழ்ச் சொல் எப்படிக் இப்படி ஒரு கெட்ட வார்த்தையாக, வசவுச் சொல்லாக காலப் போக்கில் மாறிப் போனது என்பது புரியாத புதிர். .பரிணாம வளர்ச்சியில் தோல் பெரும் பங்கு வகிப்பதுபோல் ‘முடி’யும் பெரும் பங்கு வகிக்கிறது. முழுதும் ‘முடி’யால் மூடப்பட்ட மனிதத்தோல் காலப்போக்கில் பல இடங்களில் ‘முடி’யற்றதாகி விட்டது. ஆதி மனிதன் அடர்ந்த காடுகளிலும் பனி மலைகளிலும் வாழ்ந்ததால் உடல் வெப்பத்தைக் காக்க முடி மிக அவசியமானதாக இருந்தது. அவன் மெள்ள மெள்ள நிமிர்ந்து வளர்ந்து வளர்ந்து பனி மலைகளையும், அடர்ந்த காடுகளையும் விட்டு வெளியே வர வர, தன் முடியை மெள்ள மெள்ள இழந்துகொண்டே வந்தான். இன்று அத்தனையும் உதிர்ந்து தற்கால மனிதனின் தலையிலும் மற்ற சில பகுதிகளிலும் மட்டுமே சிறிது முடி மிச்சம் உள்ளது. அதுவும் தற்போது குறைந்து வருகிறது, பதின்ம வயதுக் குழந்தைகளுக்குக் கூட தலை முடி உதிர்ந்து வழுக்கை விழுகிறது.உடல் முழுவதும் எங்குமே முடி இல்லாத, பரிணாம வளர்ச்சியில் மேம்பட்ட ஒரு புது மனித இனம் உருவாகிறதோ என்ற ஐயம் ஏற்பட்டாலும் ஆச்சர்யமில்லை. நாகரிகம் என்ற பெயரில் காடுகள் அழிய அழிய, மலைகள் மறைய மறைய, பூமி வெந்து தகிக்க, சூழல் வெப்பம் அதிகரித்துக் கொண்டே இருக்க இருக்க, முடியின் தேவையும், பயன்பாடும், உடல் வெப்பம் காக்கும் பணியின் அவசியமும் குறைந்து கொண்டே வருவதால் இன்று முடி ஒரு அழகூட்டும் துணை உறுப்பாகவே கருதப்படுவதில் வியப்பில்லை. அன்று அத்தியாவசியமாக இருந்த முடி இன்று வெறும் அடையாளம் மட்டுமே.ஆனால், இந்த முடிக்காகவும், முடியின் பராமரிப்புக்காகவும், முடி வணிகத்துக்காகவும் இன்று உலகப் பொருளாதாரத்தில் மூன்றில் ஒரு பங்கு செலவிடப்படுகிறது என்பது மயிர் கூச்செறியும் உண்மைச் செய்தி.ஆச்சர்யங்கள் நிறைந்த முடியைப் பற்றிய அறிவியல் உண்மைகள் உணர்வோம், வாருங்கள்....கருவில் ஆணா பெண்ணா என்று முடிவாகும் முன்னரே முடி உருவாகத் தொடங்கி விடுகிறது. எட்டாவது வாரத்திலேயே புருவத்திலும், மேலுதட்டிலும் தாடையிலும் முடியின் மொட்டுக்கள் அரும்பத் தொடங்கி விடுகின்றன.அரும்பு மீசை கருவிலேயே ஆரம்பம்!கூந்தல்தொழிற்சாலையின்அடிக்கல்நாட்டுவிழாகருஉருவானஎட்டாவதுவாரத்தில்தொடங்குகிறது. கட்டடம்கட்டும்சிற்பிகளாய்டெர்மல்பாப்பிலாஎனப்படும்முடியின்வேர்ச்செல்கள்ஹேர்ஃபாளிக்கிள்எனப்படும்.முடிநுண்ணறையை பதினான்கு வாரங்களுக்குள் கட்டி முடிக்கின்றன. தொழிற்சாலை உருவாகும்போதே உற்பத்தியும் தொடங்குவது கூந்தல் தொழிற்சாலையில் மட்டும் தான். முதலில் தோன்றிய குழைவான மென்முடி, உச்சந்தலையில் இருந்து பின்னந்தலை வரை முப்பத்தாறு வாரங்களில் கருவிலேயே உதிர்ந்து விடுகிறது. பிறந்து மூன்று முதல் நான்கு மாதங்களில் முன்தலையில் இருந்து உச்சந்தலை வரை உள்ள மென்முடி உதிர்கிறது. இப்படி பகுதி பகுதியாக நிகழும் ஒழுங்கற்ற உதிர்வு, குழந்தை பிறந்த ஓராண்டு வரை நீடிக்கிறது.எனவேதான், நம் அறிவார்ந்த தமிழ்ச் சமூகம் தொன்று தொட்டு முதல் முடியிறக்கத்தை மிகச் சரியாக முதலாண்டு முடியும் தறுவாயில் நிகழ்த்துகிறது. ஓராண்டுக்குப் பின் முடி உதிர்வதும் வளர்வதும் ஒரே சீராக நிகழ்கிறது. கூந்தல் தொழிற்சாலையின் கருவறையான முடி நுண்ணறையில், முடி வேர்ச்செல் தொழிலாளர்கள் மூச்சுவிட மறந்தாலும், கெராட்டின் புரத மூலப்பொருள் கொண்டு பூச்சரம் போல் முடி தொடுக்கும் பணியை மறப்பதில்லை. ஏறத்தாழ அரைக்கோடி கூந்தல் தொழிற்சாலைகள் நம் தோலெங்கும் பரவிக் கிடக்கின்றன.அயராது அழகாகத் தொடுக்கப்பட்ட இந்த முடிப்பூச்சரங்கள் காற்றோடு கலந்தாடிக் காதல் மொழி பேசும் வண்ணம் முடியின் நுரையீரல் போன்ற மெடுல்லாவில் காற்றுப் பைகள் இடம் பெற்றிருப்பது இயற்கையின் இன்னுமொரு அதிசயம். இந்தக் காற்றுப் பைகள்தான் பறவைகள் பறக்கவும், விலங்குகள் உடல் வெப்பம் தணிக்கவும் உதவுகின்றன.மனித முடியில் இந்தக் காற்றுப் பைகள் நிறைந்த இந்த மெடுல்லா மெலிந்து முடியும் கனத்து மனிதன் கனவானாகி விடுகிறான். மனிதனின் தலைக் கனத்துக்கும் இதுதான் காரணமோ! முடியின் வெளிச்சுவரான கார்டெக்ஸில் அமைந்துள்ள கெராட்டின் மலர்கள் சிஸ்டீன் என்ற எஃகு போன்ற உறுதியான புரதத்தால் ஆனவை. அவை ஒன்றோடொன்று ‘டைசல்ஃபைடு பிணைப்பு’ என்ற நம் உடலிலேயே மிக உறுதியான நாரினால் இணைக்கப்பட்டு தொடுக்கப்படுகின்றன. அதனால்தான் முடி இயற்கையாகவே இத்துணை வலுவாகவும் தோல் பாதுகாப்புக்கு உறுதுணையாகவும் இருக்கிறது.விளம்பரங்களில் காட்டப்படுவதுபோல் எந்த ஒரு ஷாம்பூவும் எண்ணெய்யும் முடியை வலுவாக்கி ஏரோப்ளேன் இழுக்க வைக்க முடியும் என்பது ஏமாற்று வேலை. நம் உடலை தோலாடை பாதுகாப்பதுபோல் முடியை முழுவதுமாக மூடிப் பாதுகாக்க இயற்கை இன்னுமொரு கவசம் தந்துள்ளது. அதுதான் க்யூட்டிகிள் எனப்படும் மெல்லிய ஒருசெல் அடுக்கு. அதையும் பாதுகாக்க இன்டெக்ரல் லிபிட் லேயர் என்ற நெய்ப்படலம் கூடுதல் கவசமாக அமைந்துள்ளது.இத்தனை பாதுகாப்பு கவசங்களும் முடியை நீட்டிப்பதற்காகச் செய்யப்படும் ரசாயனங்களால் மீண்டும் சரி செய்ய முடியாதபடி முற்றிலுமாக பாதிப்படைகின்றன. ஒவ்வொரு முடி இழைக்கும் ‘செபேஷியஸ் க்ளாண்ட்’ என்ற நெய்ச்சுரப்பியை இயற்கை அளித்துள்ளது. முடியை இளமையாகவும், மென்மையாகவும், மிருதுவாகவும், மினுமினுப்பாகவும் வைத்துக்கொள்ள உதவும் ஸீபம் என்ற நெய்யை இந்த சுரப்பிகள் ஒவ்வொரு நொடியும் சுரந்துகொண்டே இருக்கின்றன. இந்த இயற்கை நெய்க்கு ஈடு இணையே இல்லை. முடியின் ஓரிரு அங்குலம் வரை இந்த இயற்கை நெய் படர்ந்து விடுவதால் வேறு எந்த எண்ணெய்யும் முடிக்குத் தேவையில்லை. நீளமான முடி வைத்துள்ளவர்களுக்கு மட்டுமே எண்ணெய் தேவைப்படுகிறது. .நம் தோலின்மேல் காணும் முடி எனப்படுவது, முடி என்ற உறுப்பின் ஒரு பகுதிதான். முடியின் முக்கிய உறுப்புகளான முடிவேர் நுண்ணறையும், முடி நெய்ச் சுரப்பிகளும், முடித் தசையும், முடியின் ஆதி வேர்ச் செல்களும், ரத்தநாளங்களும் என அனைத்தும் அடித்தோலடுக்கில் இருப்பதால், முடிக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் அங்கிருந்தே கிடைக்கின்றன. ஆகவே, நாம் உண்ணும் ஊட்டச்சத்து மிக்க உணவும், சமன்பாடுள்ள இயக்கு நீர்களும், மன மகிழ்வும்தான் முடி வளர்ச்சிக்கு உதவுமே தவிர முடியின் மேல் தடவும் எதுவும் எந்த எண்ணெய்யும் முடி வளர்ச்சிக்கு உதவாது.இவ்வளவு ஆச்சர்யங்கள் நிறைந்த முடியையே ஆச்சர்யப்பட வைக்கும் தசை தான் ‘அரெக்டாரெஸ் பைலோரம்’. ஒவ்வொரு முடி இழைக்கும் ஒரு அரெக்டாரெஸ் தசை அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆச்சர்ய தசையின் இன்னுமோர் ஆச்சர்யம், முடியின் பெட்டகப் பொக்கிஷமான ஆதிவேர்ச்செல்கள் இதனடியில் அமைந்திருப்பதுதான்.அடிக்கடி ஆச்சர்யப்பட்டு மயிர்க்கூச்செறிவது முடிவளர்ச்சிக்கு உதவும் என்று நவீன முடி ஆராய்ச்சியாளர்கள் கருதுவதில் ஒன்றும் ஆச்சர்யமில்லைதானே! இவ்வளவு ஆச்சர்யங்கள் நிறைந்த முடியைக் கேவலமாக நினைக்காமல், மயிர் என்ற சொல்லை இனி மரியாதையுடன் பயன்படுத்துவோம். மயிர் மானக்கேடான சொல் அல்ல! மதிப்புக் கூட்டும் சொல்!.