உடல் எடையை 67 கிலோவிலிருந்து 52 கிலோவாகக் குறைத்து தனது உடலகை ஆராதிப்பவர் நடிகை மிருணாள் தாகூர். ‘சீதா ராமம்’ திரைப்படம் மூலம் தனது நடிப்பால் பலரது கவனங்களைக் கவர்ந்த நடிகை மிருணாள் தாகூர், உடலைக் கட்டமைப்பாகவும் கவர்ச்சியாகவும் வைத்துக் கொண்டிருப்பதன் ரகசியம் அறிய அனேகம் பேருக்கு ஆர்வம் அதிகம். பாலிவுட்டில் முன்னேற்றப் படிக்கட்டுகளில் தடம் பதித்துவரும் மிருணாள் தாகூர், ரசிக மனங்களின் ஆர்வத்துக்கு தடைபோடாமல் தனது ஃபிட்னெஸ் ரகசியங்களைப் பகிர்ந்தார்.‘‘எனது ஃபிட்னெஸ் குரு நடிகர் ஹிருத்திக் ரோஷன். சின்னத்திரையில் நடித்துக் கொண்டிருந்த எனக்கு இந்திப் படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தபோது, ‘உடல் எடையைக் குறைக்க வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டார்கள். தேடிவந்த திரைப்பட வாய்ப்பாச்சே... வேண்டாம் என்று விட்டுவிட முடியுமா? எனவே, ஹிருத்திக் ரோஷன் வழங்கிய ஃபிட்னெஸ் டிப்ஸ் உதவியுடன் ஆறு மாத காலத்தில் உடல் எடையை 67 கிலோவிலிருந்து 52 கிலோவாகக் குறைத்தேன். உடல் எடையை 52 கிலோவாகக் கட்டுக்குள் வைத்திருக்க ஜிம்மிற்குப் போக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஹிருத்திக் ரோஷனுடன் நடிக்கும்போது காலை 7 மணிக்கு அவர் ஜிம்மில் இருப்பார். நானும் உடல் பயிற்சி செய்வேன். படப்பிடிப்பு மாலை நேரத்தில் முடிந்ததும் ஹிருத்திக் ரோஷன் நேரே ஜிம்மிற்குச் சென்றுவிடுவார். அவர் போகும்போது நான் போகாமல் இருக்க முடியாதே... எனவே, நானும் ஜிம்மிற்கு சென்று எளிய பயிற்சிகளை செய்துவிட்டு வருவேன். குறைந்த பட்ச உடல்பயிற்சிகள் செய்ய ஹிருத்திக் வற்புறுத்துவார். தினமும் உடல் பயிற்சிகளைச் செய்ய வேண்டும் என்பதை ஹிருத்திக் ரோஷனிடமிருந்து நான் கற்றுக் கண்டேன். ஃபிட்னெஸ் விஷயத்தில் இன்னொரு குரு நடிகர் ஜான் ஆப்ரஹாம். ஃபிட்னெஸ்சிற்காக உடல் பயிற்சியுடன் சரிவிகித உணவிற்கும் முக்கியத்துவம் கொடுப்பவர் ஜான் ஆப்ரஹாம். தினமும் 8 கிளாஸ் காய்ச்சி ஆறவைத்த குடிநீர் பருகும் பழக்கம் நடிகர் ஜான் ஆப்ரஹாமிடமிருந்து என்னைத் தொற்றிக் கொண்டது. பயணத்தின்போது உலர் பருப்புகளான பாதாம், பிஸ்தா, பூசணி விதைகள் மற்றும். பழங்கள், முளைவிட்ட பயறுவகைகளைச் சாப்பிடுவேன். மாவுப் பொருள் அடங்கிய உணவுவைகளைத் தவிர்ப்பேன். எனது பலவீனம் சாக்லேட் கேக். பல தடவைகள் சாக்லேட் கேக்கைப் பார்ப்பதுடன் நிறுத்திக் கொள்வேன். எப்போதாவது ஒருமுறை சாக்லேட் கேக்கை வெளுத்துக் கட்டுவேன்..எனது ஃபிட்னெஸ் டிரெயினர் ரோஹித் TRX கார்டியோ உடல் பயிற்சிகளைச் சொல்லிக் கொடுப்பவர். உடல் பயிற்சிகளின் பெயரைப் பார்த்தால் கடினமான பயிற்சி போல தோன்றும். ஆனால், எல்லாம் அடிப்படை பயிற்சிகள்தான். எளிய பயிற்சியாக இருந்தாலும், உடலின் தசைகளை உயிர்ப்பாக வைக்கும். என்ன... வியர்வை வழிய வழிய பயிற்சி செய்யவேண்டும். பயணத்தின்போது தங்கும் ஹோட்டலில் நீச்சல் குளத்தில் நீந்துவேன். நடப்பேன்... அங்கே ஜிம் இருந்தால் அங்கும் உடல் பயிற்சி செய்வேன். யோகா பயிற்சி செய்வேன். இப்படி ஏதாவது ஒரு விதத்தில் உடலுக்குப் பயிற்சி தருவேன். உடல் பயிற்சி செய்து உடலை கட்டமைப்பாக வைத்துக் கொண்டாலும் முகத்தை... தோலை... மினுமினுப்பாக வைத்துக் கொள்வதிலும் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக பொது வாழ்வில் இருப்பவர்கள் தோற்றத்தில் பொலிவைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டும்.இரண்டு கரண்டி தேனில் ஒரிஜினல் சந்தன மரத்தின் தூளைக் கலந்து அதனுடன் பன்னீரையும் சேர்த்து முகத்தில்... கழுத்துப் பகுதியில் தேய்க்க வேண்டும். அரை அணி நேரம் கழிந்து எலுமிச்சைச் சாறு கலந்த நீரில் முகம் கழுத்தைக் கழுவ வேண்டும். அதேபோல், வாழைப்பழத்துடன் தேனைச் சேர்த்து நன்றாகக் குழைத்து முகத்திலும் உடலிலும் பூசிவர... தோல் மிருதுவாகவும் ‘பளபள’ என பளிச்சென்று தோற்றமளிக்கும். தேனுடன் ஆவகாடோ சதையைக் குழைத்து முகத்தில் பூசி வந்தால், முகம் இன்னும் பளிச்சென்று இருக்கும். இவையெல்லாம் அனுபவத்தில் நான் செய்து பார்த்தது.... தொடர்ந்து கடைப்பிடித்து வருவது’’ என்று ஃபிட்னெஸ் தகவல்களைப் பகிர்ந்தார் நடிகை மிருணாள் தாகூர்.