டாக்டர் த.நா.பரிமளச்செல்வி,ஆரோக்கியத்திற்கு மட்டும்தான் அக்குபங்சர் உதவி செய்யுமா என்ன? இல்லை இல்லை அழகுக் கலைக்கும் கை கொடுக்கும் நம் மருந்தில்லா மருத்துவமான அக்குபங்சர் மருத்துவம். அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட மாற்றுமுறை மருத்துவமான அக்குபங்சர் சிகிச்சை அழகுக்கே அழகு சேர்க்கும். இது நிஜம்!‘அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’ என்பது நம் முன்னோர் விட்டுச்சென்ற பழமொழி. இது முற்றிலும் உண்மை. நம் முகம்தான் நம் உள்ளத்தையும், உடலையும் பிரதிபலிக்கும் கண்ணாடி. ஒருவரின் முகத்தை வைத்தே அவரின் உடலில் ஏற்பட்ட பிரச்னைகளைக் கூறிவிட முடியும். இது அறிவியல்பூர்வமான உண்மை என்பது அக்குபங்சர் சிகிச்சை அறிந்தவர்களுக்குத்தான் தெரியும். ஆரோக்கியத்திற்கும் அழகிற்கும் நிச்சயமாக சம்பந்தம் உண்டு.நம் முகத்தில் ஏற்படக்கூடிய நிறமாற்றத்திற்குக் காரணம் நம் உடல் உறுப்புக்கள்தான். எனவேதான், உடல் உறுப்பின் மாற்றங்கள் முகத்தில் பிரதிபலிக்கின்றது. இது ஆச்சர்யமாக இருந்தாலும், இதுதான் அறிவியல் உண்மை.அழகுக் கலையில் உபயோகப்படுத்தும் ஏராளமான மருத்துவக் குணம் கொண்ட க்ரீம்களையெல்லாம் பயன்படுத்தாமலேயே வெறும் ஊசிகளைக் கொண்டு சரி செய்ய முடியும், பக்கவிளைவுகள் இல்லாமல். ஓர் அழகுக்கலை நிபுணர் செய்யக்கூடிய அனைத்து முறைகளையும் ஒரு அக்குபங்சர் சிகிச்சையாளர் செய்துவிட முடியும் என்பது சிறப்பான விஷயம்.கண்களைச் சுற்றி கருவளையம் இருப்பதை நாம் அறிவோம். இப்பிரச்னைக்கு உலக அளவில் தீர்வு இருந்துகொண்டுதான் இருக்கிறது என்றாலும் இதற்கு முதல் காரணமாக அமைவது நம் கிட்னிகள்தான். நம் சிறுநீரகத்தையும், சிறுநீர் பையையும் சிறு ஊசிகள் கொண்டு தூண்டிவிட்டாலே இப்பிரச்னை மறைந்து மேலும் தலைதூக்காது. கண்களுக்கு அடியில் ஏற்படக்கூடிய வீக்கம் கூட நம் உடல் உறுப்பு சம்பந்தப்பட்ட பிரச்னைதான்.முகத்தில் நெற்றியில் ஏற்படக்கூடிய கோடுகள் ஏன் வந்தது, எப்படி வந்தது, எப்போது போகும் என்பதை அக்குபங்சர் சிகிச்சையாளரிடம் கேளுங்கள். இதற்கும் அதாவது இந்தக் கோடுகளுக்கும் காரணம் நம் உடல் உறுப்புக்கள்தான். இதை எப்படிப் போக்குவது என்பதும் அக்குபங்சரின் கையில் உள்ளது..முகப் பொலிவிற்காக செய்யக் கூடிய ப்ளீச், ஃபேஷியல் போன்றவற்றைக்கூட ஒரு சில ஊசிகளை உபயோகித்தே செய்துவிட முடியும். மேலும், முகத்தில் ஏற்படக்கூடிய சுருக்கங்கள், முகச்சோர்வு, முக வறட்சி, போன்ற அனைத்திற்கும் அக்குபங்சர் உதவி புரியும். டீன்ஏஜ் என்று சொல்லக்கூடிய விடலைப் பருவத்து இளம் பெண்கள் மற்றும் இளம் ஆண்களை அதிகமாக வாட்டி வதைக்கும் ஒரு பிரச்னை என்னவென்றால் அது முகப்பரு. இப் பிரச்னை பாதித்த அனைவரும் மனதளவில் பாதிக்கப்பட்டு வெளியில் முகத்தை காட்டக்கூட விரும்பாமல் சிக்கித்தவிப்பதைக் கண்கூட பார்க்கலாம். இவர்கள் அனைவருக்கும் மனதளவிலும் உடலளவிலும் அக்குபங்சர் சிகிச்சையால் ஒரு தீர்வு தரமுடியும்.45 வயது கடந்த பெண்களின் முகத்தில் கன்னத்தில் ஏற்படக்கூடிய சிறுசிறு கரும்புள்ளிகளைக் கண்டிருக்கின்றோம். இதை வட்டார மொழியில் ‘மங்கு’ என்று சொல்லக் கேள்விபட்டிருக்கின்றோம். இரண்டு கன்னங்களிலும் இதைக் கண்டதுண்டு. இந்தப் பிரச்னை பெண்களுக்கு மட்டும் அல்ல சில ஆண்களுக்கும் வந்ததுண்டு. இவை ஏற்படக்கூடிய இடங்களைப் பொறுத்து உடல் உறுப்புக்கள் காரணமாக அமையும். எனவே, இந்தப் பிரச்னைக்கும் தீர்வு அக்குபங்சர் சிகிச்சையில் உள்ளது.நம் உடலில் ஏற்படக்கூடிய ஹார்மோன் மாற்றங்களும் அதன் தடங்களை முகத்தில் பதித்துவிட்டுத்தான் போகிறது. எனவே, பல அழகுக்கலை பிரச்னைகளுக்கு ஹார்மோன்களை சரி செய்தாலே போதுமென்பது அக்குபங்சர் அறிந்த அனைவரின் ஒட்டுமொத்த கருத்தாகும்.தலையில் ஏற்படக்கூடிய பொடுகிற்கு காரணமும் நம் உடல் உறுப்புக்கள்தான். எத்தனை விதமான வெளிப்பூச்சும் பொடுகை முழுவதுமாக சரி செய்துவிட முடியாது. உடல் உள் உறுப்புக்களை சரி செய்வதன் மூலமாக மட்டுமே நிரந்தரமாக நீக்கமுடியும். முடி உதிர்தல், புழுவெட்டு, இளம் வயது நரை போன்ற முடி சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்கும் இந்த அக்குபங்சர் உதவி புரியும், மருந்து மாத்திரைகளின்றி.உடல் பருமன் என்று எடுத்துக்கொண்டால் சொற்களே இல்லை சொல்வதற்கு. அந்த அளவிற்கு உலகை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கின்றது. அனைத்து உடல் பருமனுக்கும் பட்டினியாய் கிடப்பதால் மட்டும் தீர்வு வராது. ஒவ்வொரு உடல் பருமனுக்கும் ஒவ்வொரு காரணம் உண்டு. எனவே, யார் யாருக்கு எது எது காரணமோ, அதற்கு ஏற்றாற்போல் சிகிச்சை அளித்தால் மட்டுமே உடல் எடையை ஆரோக்கியமாகக் குறைக்க முடியும். எனவே உடல் எடை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பவர்கள் அக்குபங்சர் சிகிச்சையையும் முயற்சித்தால் கைமேல் பலன் உண்டு..தோல் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் அக்குபங்சரில் தீர்வு உண்டு. எனவே, அழகுக்கலை மட்டுமல்லாமல் தோல் சார்ந்த அனைத்து பிரச்னைகளுக்கும் அக்குபங்சர் சிகிச்சை உதவிபுரியும். எப்பிரச்னைகளுக்கும் பக்கவிளைவுகள் இல்லாமல் மருந்து மாந்திரைகள் இல்லாமல் வெறும் ஊசிகளைக் கொண்டே சரி செய்துவிட முடியும் என்பதுதான் அக்குபங்சரின் சிறப்பு.