உ.அறவாழி,முன்பனிக்காலம் மற்றும் குளிர்காலங்களில் அனைவரையும் பாதிக்கக்கூடிய வைரஸ் காய்ச்சல்தான் ஹெச்3 என்2 இன்ஃபுளூயன்சா எனும் அடீனோ வைரஸ் காய்ச்சல் ஆகும். இது அதிக அளவில் குழந்தைகளையும், சிறு பிள்ளைகளையும்தான் பாதிக்கிறது. அடீனோ வைரஸில் மொத்தம் 41 வகைகள் உள்ளன. அவற்றில் 3வது வகை வைரஸ் சிறுபிள்ளைகளுக்கு சுவாச மண்டலத்தில் அதிக பாதிப்பை உருவாக்கும். 7வது வகை வைரஸ் பெரியவர்களுக்குக் காய்ச்சலை உருவாக்குகிறது. இதன் பாதிப்பு ஓரிரு வாரங்கள் வரை தீவிரமாக இருந்து பின் படிப்படியாக நோயின் தீவிரம் குறைந்துவிடும். இந்த வைரஸ் தொற்று பெரும்பாலும் காற்றின் மூலம்தான் பரவுகிறது. நோயாளர் தும்மும்போதும் மற்றும் இருமும்போதும் கிருமிகள் வெளிப்படுகின்றன. உமிழ்நீர், சளி போன்றவற்றின் மூலமும் இந்நோய் பரவும். மேலும், உணவு மற்றும் குடிநீர் மூலமும் பரவும். இந்த அடீனோ வைரஸ் பெரும்பாலும் சுவாச மண்டலத்தைத்தான் பாதிக்கிறது. வெளியே வராமல் தொண்டையிலேயே சிக்கும் சளி, தொண்டை வலி, குரல் தொனியில் மாற்றம், காய்ச்சல், குளிர், கண்கள் சிவத்தல், கண்களில் நீர் வடிதல், மூக்கில் நீர் வடிதல், கண் இமைகள் பீளையால் ஒட்டிக்கொள்ளுதல், வாய்க்கசப்பு, பசியின்மை, தொண்டைக் கமறல் போன்ற தொந்தரவுகள் ஏற்படலாம். நுரையீரல் பாதிக்கப்பட்டு நிமோனியா மூச்சுக்குழல் அழற்சி, தொண்டை அழற்சி, விழி வெண்படல அழற்சி, கருவிழி படல அழற்சி போன்ற பிற பாதிப்புகளும் ஏற்படக்கூடும். இந்த வைரஸ் பாதிப்பால் சிலருக்கு வயிற்றுப்போக்கும், கழுத்துப்பகுதி கழலை அழற்சியும் ஏற்படலாம். இந்த வைரஸ் பாதிப்பைக் குணப்படுத்த அலோபதி மருத்துவத்தில் மருந்துகள் இல்லை. இந்த வைரஸ் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க 4வது மற்றும் 7வது வகை என்ற இரண்டு வைரஸ் வகைகளுக்கு மட்டுமே தடுப்பூசிகள் உண்டு. இந்த வைரஸ் காய்ச்சல் இப்போது அதிகம் இந்தியர்களை பாதிப்பதற்குக் காரணமாக கோவிட் தடுப்பூசி போட்டதன் விளைவு என நம்பப்படுகிறது. இந்த வைரஸ் பாதிப்பை அறிய சி.ஆர்.பி. பரிசோதனை உதவுகிறது.இந்நோயைக் குணப்படுத்தும் சில முக்கிய ஹோமியோ மருந்துகள்.அகோனைட்: கடுமையான மரணபயம். தான் சாகப்போகும் நாள் மற்றும் நேரத்தைக்கூடக் குறிப்பிட்டுச் சொல்லுவார். மிகவும் அமைதியற்ற நிலை. மாலை நேரங்களில் காய்ச்சல் அதிகரிக்கும். இசையைக் கேட்கப் பிடிக்காது. இதனால் கவலை உண்டாகும். உடலின் சில பகுதிகள் மிகவும் பெருத்துவிட்டது போலவும் மற்றும் உருக்குலைந்து போய்விட்டதாகவும் பிரமை. இமைகள் வீக்கமடைந்து, கண்கள் சிவந்திருத்தல். கண்கள் கூசுதல், கண்களில் நீர் வடிதல், ஒருபக்கக் கன்னம் சிவந்து உஷ்ணமாகவும், மறுபுறம் வெளுத்து குளிர்ந்தும் இருத்தல். தொண்டை கரகரப்பு. தொண்டைவலி, தொண்டைக் கம்மல், வறண்ட இருமல், இருமும்போதும், விழுங்கும்போதும் தொண்டையில் உறுத்தல், பசியின்மை, மலம் கழிக்கும் முன்னும் மற்றும் பின்னும் வியர்த்தல், தணியாத தாகம். மலம் சிறு சிறு துண்டுகளாக பசும்புல்போல் வெளியேறுதல். சிறுநீர் குறைந்த அளவில், உஷ்ணமாக, சிவந்து வலியுடன் வெளியாதல். குழந்தைகள் சிறுநீர் கழிக்கும்போது, உறுப்பைக் கைகளால் பிடித்துக்கொண்டு வீரிட்டுக் கதறுதல். ஒவ்வொரு முறை இருமும்போதும், தொண்டையைக் கைகளால் பிடித்துக் கொள்ளுதல். மார்பைச் சுற்றிலும் ஒரு பட்டை கட்டியுள்ளது போன்ற உணர்வு. கை, கால்கள் மரத்துப் போதல், இடப்புற நெஞ்சுவலி.இடப்புறம் திரும்பிப் படுக்க இயலாது. உஷ்ணமான கைகளும், குளிர்ந்த பாதங்களும், உள்ளங்கைகளில் சுண்டு விரலுக்குக் கீழ் உள்ள மேடு சிவந்திருத்தல். தொடையில் குளிர்ந்த நீர் சொட்டுவது போன்ற உணர்வு. மல்லாந்துப் படுத்து, கைகளைத் தலைக்கடியில் வைத்துக்கொண்டு தூங்குதல், ஆடை மூடியுள்ள பகுதிகளில் ஏராளமாக வியர்த்தல். கடும் குளிர். பாதத்திலிருந்து மார்புக்குப் பரவுதல்.ஆர்சனிகம் ஆல்பம்: நள்ளிரவுக்கு மேல் எல்லாத் துயரங்களும் அதிகரித்தல். உஷ்ணத்தினால் துயரங்கள் தணிதல். உடல் முழுவதும் தகதகவென எரிதல். கழிவுகள் யாவும் துர்வாடை வீசுதல். அளவுக்கு மீறிய பலவீனம் மற்றும் களைப்பு. கொஞ்சம் கொஞ்சமாக அடிக்கடி நீரை அருந்துதல். சிறிதும் அமைதியின்றி நோயாளர் படுக்கையில் இப்படியும், அப்படியுமாக புரளுதல். மிகச்சிறிய அசைவும் அதிக களைப்பை உண்டாக்குதல். எல்லாம் முறைப்படி ஒழுங்காக இருக்கவேண்டும் என்று விரும்புதல். நகங்களைக் கடித்தல், தலைமுடியைப் பிடித்து இழுத்தல், சந்தேகப்படுதல், தேவைக்கு அதிகமாக விரும்புதல், அற்ப விஷயங்களிலும் அக்கறை செலுத்துதல். இளநரை. கண்கள் உஷ்ணமாக, எரிச்சலுடன் இருத்தல். கண் இமைகள் பீளையால் காலையில் ஒட்டிக் கொள்ளுதல், காதுகளில் இரைச்சல். மூக்கிலிருந்து நீர் வடிந்து, மேல் உதட்டைப் புண்ணாக்குதல். முகம் வெளுத்து, வீங்கி, குளிர்ந்த வியர்வையால் நனைந்திருத்தல், ஈறுகளிலிருந்து எளிதில் இரத்தம் வடிதல், வாயில் உலோகச்சுவை. விழுங்கும் அனைத்தும் தொண்டையில் களகளவென இறங்குதல். மலச்சிக்கலும், வயிற்றுப்போக்கும் மாறி மாறி ஏற்படுதல். சிறுநீர் வெளியேறும்போது, புறவழியில் எரிச்சல். நடக்கும்போதும் மற்றும் மாடிப்படி ஏறும்போதும் மூச்சுத்திணறல். கைகளை அகட்டி வைத்து உட்கார்ந்து முன்புறம் குனிந்து மூச்சுவிடுதல். சருமம் வறண்டு சொரசொரப்பாக இருத்தல். கைகளை தலைக்குமேல் வைத்துக்கொண்டு உறங்குதல். தலையணையை உயர்த்தி வைத்துக் கொள்ளுதல். விடியற்காலை 3 மணிக்கு அதிக அளவு காய்ச்சல். குளிரும்போது, வெந்நீர் குடிக்க விரும்புதல். காய்ச்சலின் இறுதியில் வியர்த்தல், நடுநிசிக்குப் பின் வறட்டு இருமல்..பெல்லடோனா: அதிக இரத்தம் தலைக்குப் பாய்வதால், முகம் சிவந்திருத்தல். காய்ச்சல் தினமும் பிற்பகல் 3 மணிக்கு கடுமையடைதல். நோயற்றிருக்கும்போது, இனிமையாக பழகியவர், இப்போது நோயுற்ற பிறகு மிகக் கடுமையாக நடந்துகொள்ளுதல், கழிவுகள் யாவும் உஷ்ணமாகவும் குறைந்த அளவிலும் இருத்தல். நுரையீரலை மூடியுள்ள சவ்வு அழற்சி, காற்று வீசுவதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் தலையை எதையாவது கொண்டு மூடிக்கொள்ளுதல். கண்களை மூடியவுடன், பல விகாரமான உருவங்கள் தெரிவதால், தூங்க இயலாமை. கண்கள் சிவந்து போதல். அதிகம் கூசுதல், கண்களில் மணல் இருப்பது போன்ற உறுத்தல், படிக்கும்போது, எழுத்துகள் நடுங்குதல், கண்களிலிருந்து நீர் வடித்து உப்பு கரித்தல், மூக்கு நுனியில் உறுத்தல், முகம் பளபளவென சிவந்து வீங்கி உஷ்ணமாக இருத்தல். மேல் உதட்டில் வீக்கம். பற்களை நறநறவெனக் கடித்தல், நாக்கு வீங்கி ஓரங்கள் சிவந்திருத்தல். பேச்சு குளறுதல். நாக்கில் நடுக்கம். தொண்டையில் இறுக்கம். நீராகாரங்களை விழுங்கினால் தொண்டையில் வலி, தொண்டைக் கம்மல், குடிக்கும் நீர் மூக்கின் வழியே வெளியேறுதல், குளிர்ந்த நீர் அருந்த தாகம். பாலின்மீது வெறுப்பு. மலம் கழிக்கும்போது உடலில் நடுக்கம். சிறுநீர் சிவந்த நிறத்தில், குழம்பாக, அதிக அளவு வெளியேறுதல், நாய் குரைப்பது போன்ற வறண்ட இருமல். இருமல், தும்மலில் முடிதல். அடிக்கடி தும்முதல். தொண்டை கரகரப்பு. இருமும்போது மார்பில் வலி. கால் மேல் கால் போட்டுக்கொண்டபின், மீண்டும் காலை விலக்க இயலாமை. தலை உஷ்ணமாயும், கை கால்கள் குளிர்ந்தும் இருத்தல். காய்ச்சலின்போது, உள்ளூர குளிரும், வெளியே கொதிக்கும் உஷ்ணமும். காய்ச்சலின்போது தாகமிருக்காது. ஆடை மூடியுள்ள பகுதிகளில் மட்டும் வியர்த்தல்.