Email
Password:
Remember Me  
Forgot Password   New Registration
About us | Register | Plan Details |Font Help| Feedback| Ad Tariff | Faq | Site Map|RSSimageRss  
News Headline
 
Dotcom Spl >> tourism
 

வரலாற்றுச் சின்னங்களின் புகழிடம் சம்பானேர்

 
ம்பானேர் நகரை உருவாக்கிய சாவ்தா வம்சத்தை சேர்ந்த மன்னர் வன்ராஜ் சவ்தா தனது முதலமைச்சரான சம்பராஜ் என்பவரின் பெயரையே இந்நகருக்கு அளித்துள்ளார். இப்பகுதியிலுள்ள பாறைகள் சம்பக் மலரின் நிறைத்த ஒத்து காணப்படுவதாலும் இந்நகர் சம்பானேர் என்று பெயர் வந்ததாகவும் கூறப்படுகிறது. அற்புதமான நகர வடிவமைப்புடன் கலையம்சம் கொண்ட கட்டிடச்சின்னங்களை கொண்டுள்ள இந்நகரின் அருகில்  கிச்சி சௌஹான் ராஜபுத்திர வம்சத்தினரால் கட்டப்பட்ட பவகாத் கோட்டை ஒன்றிருந்தது. இக்கோட்டையை கைப்பற்றிய மஹ்மூத் பெக்டா என்ற மன்னன் அக்கோட்டையுடன் சம்பானேர் நகரையும் இணைத்து மஹ்மூதாபாத் என பெயர் மாற்றி  தனது தலைநகராக 23 ஆண்டுகள் இந்நகரை ஆட்சிசெய்துள்ளார். பின்னாளில் அவனது ராஜ்ஜியத்தை முகலாயர் கைப்பற்றியதோடு தலைநகரையும் அஹமதாபாத்திற்கு மாற்றப்பட்டதால் சம்பானேர் நகரின் முக்கியத்துவமும், புகழும்
மறைந்து போனது.
 
ஹெலிகல் ஸ்டெப்வெல்:
 
காண்பவர்களை திகைக்க வைக்கும் இந்த ஹெலிகல் ஸ்டெப்வெல் எனும் சுருள் படிக்கிணறானது 16-ஆம் நூற்றாண்டில் செங்கற்கள் மூலம்  கட்டப்பட்டதாகும். இக்கிணற்றின் அமைப்பின் சுவரை ஒட்டியவாறு சுருள் சுருளாகஅமைக்கப்பட்டு இருக்கும்  படிக்கட்டுகளானது மிகத்துல்லியமாகவும், நுணுக்கத்துடனும் அமைக்கப்பட்டு இருப்பது ஆச்சர்யத்தை தரும்.
 
செங்கல் கல்லறை:
 
மையப்பகுதியில் ஓர் குமில் மாடக் கூரையுடனும், நான்கு மூலைகளிலும் நான்கு குமில் மாடக் கூரைகளுடனும் அமைக்கப்பட்டுள்ள இக்கல்லறை குஜராத்தில் செங்கற்களால் உருவாக்கப்பட்டுள்ள ஒரே கல்லறையாகும். இந்த கல்லறை வளாகத்தின் இரு புறமும் உள்ள நுழைவாயில் பகுதிகளில் கற்களாலேயே விதான வளைவு அமைப்பு
உருவாக்கப்பட்டிருக்கிறது.
 
ஜம்புகோடா சரணாலயம்:
 
ம்பானேரிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது ஜம்புகோடா சரணாலயம். மலையேற்றம் போன்ற சாகச பொழுது போக்குகளில் ஈடுபாடு கொண்டுள்ளவர்களை பெரிதும் கவர்ந்துவிடும் இச்சரணாலயத்தில் தேக்கு, மஹுதா, மூங்கில் போன்ற மரவகைகள் நிறைந்துள்ளன, மேலும் இங்கு குரைக்கும் மான், நில்கை மான், கரடி, சௌசிங்கா போன்ற வனவிலங்குகளும் வசிக்கின்றன. ஒருகாலத்தில் ஆதிவாசிகள் வசித்த அழகிய பள்ளத்தாக்கு சமவெளிபகுதிகளும் இங்கு காணப்படுகின்றன.
 
சிக்கந்தர் ஷா கல்லறை:
 
சாதாரண கருங்கல் அமைப்பாக உருவாக்கப்பட்டிருந்தாலும் அற்புதமான கலை அம்சத்துடன் கூடிய இக்கல்லறையானது சம்பனேர் பகுதியை கடைசியாக ஆண்ட மன்னர் சிக்கந்தர் ஷாவின் கல்லறையாகும், இமாம் உல் முல்க் என்பவரால் கொல்லப்பட்ட சிக்கந்தர் ஷாவும் , அவரது இரு சகோதரர்களும் இங்கு புதைக்கப்பட்டுள்ளனர்
என்பது வரலாறு.
 
ஜமா மஸ்ஜித்:
 
ற்புதமான கட்டிடக்கலை அம்சங்களுடன் கூடிய ஜமா மஸ்ஜித்தானது 30 மீட்டர் உயரம் கொண்ட இரண்டு மினாரெட் கோபுரங்களின் அமைப்புடன் நுணுக்கமான கற்குடைவு அலங்காரங்களைக் கொண்டுள்ள தூண்களுடன் காண்பவர்களை கவர்ந்திழுக்கும் பிரமிப்பூட்டும் எழிலுடன் அமைந்துள்ளதாகும்.
 
மகாய் கொத்தார்:
 
ம்பேனாரிலுள்ள மகாய் கொத்தார் ஆனது அந்த காலத்தில் போர் வீரர்களுக்கு தானியங்களை சேகரித்து வைக்கும் களஞ்சியமாக இருந்துள்ளது. இங்குள்ள குமிழ் போன்ற கட்டுமானங்களில் தானியங்களை சேகரித்து வைத்துள்ளனர்,
 
கெவடா மஸ்ஜித்:
 
ம்பானேரிலுள்ள இந்த கெவடா மஸ்ஜித் ஆனது ஓர் முக்கியமான ஆன்மிக சடங்கு செய்யும் இடமாக விளங்குகிறது. இவ்விடத்தில் பல மெஹ்ராம் என்ற அமைப்புகள் பல உள்ளன. மேலும் இதன் அருகிலுள்ள ஓர் நினைவு மாடப் பகுதியானது சடங்களுக்கு முன்பான உடல் சுத்திக்கு பயன்படுத்தப்படுகிறது.
 
சாஹர் கி மஸ்ஜித்:
 
ம்பானேரை ஆண்ட சுல்தான்களின் தனிப்பட்ட மசூதியாக விளங்கிய சாஹர் கி மஸ்ஜித் ஆனது மூன்று
நுழைவாயில்களுடன் மிகப்பெரிய கூரை அமைப்புகளுடன்  அமைக்கப்பட்டிருக்கின்றன.

RSS Movies Shop

This website can secure your private information using a SSL Certificate. Information exchanged with any address beginning with https is encrypted using SSL before transmission.


About us | Register | Font Help | Feedback | Ad Tariff | Faq | Site Map
Copyright © 2010 Noble Broadcasting Corporation Private Limited . Allrights reserved.
Best view under 1024x764 Resoultion.