Dotcom Spl >> cinebits
 

நாடு வல்லரசாவதைவிட விவசாயிகள் வாழக்கூடிய நல்ல அரசாக மாறவேண்டும்: விஜய்

பிரபல இயக்குனர் அகத்தியனின் மகளான விஜயலட்சுமி ‘சென்னை 600028’ மற்றும் ‘அஞ்சாதே’ படங்களில் நடிகையாக முத்திரை பதித்தவர். தற்பொழுது அவர் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்தது மட்டும் இன்றி
பாடலாசிரியராகவும் ஆகி உள்ளார். கிருஷ்ணா மற்றும் ஆனந்தி நடிக்கும் ‘பண்டிகை’ படத்தின் தயாரிப்பாளரான இவர் இப்படத்தின் பாடல் ஒன்று எழுதியுள்ளார். இப்படத்தை பெரோஸ் இயக்கியுள்ளார்.
விஜயலட்சுமியின் ‘டீ டைம் டாக்’ தயாரித்து ‘ஆரா சினிமாஸ் ‘ விநியோகம் செய்யவுள்ளது. பண்டிகைக்காக ஆர்.எச்.விக்ரம் இசையமைத்துள்ளார். விஜயலட்சுமியை பாடல் எழுத வைத்தது குறித்து இயக்குனர்
கூறும்போது, கவிதைகள் எழுதும் வழக்கம் கொண்டவர் விஜயலட்சுமி. அவரது பல கவிதைகள் எங்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ‘பண்டிகை’ படத்தின் ஒரு பாடலுக்காக நாங்கள் சில பாடலாசிரியர்களை
அணுகினோம். அவர்கள் தந்த வரிகளில் எனக்கு திருப்தி அளிக்காத நிலையில், விஜயலட்சுமி தான் எழுதலாமா என கேட்டார். நானும் தடுக்கவில்லை. ஒரு சில நாட்கள் கழித்து அவர் எழுதியிருந்த வரிகளை படித்து
மலைத்து போனேன். இசைக்கும் கதை நிலவரத்திற்கும் மிக சரியாக பொருந்தும் வரிகள்! ‘அடியே’ என தொடங்கும் இப்பாடல் வரிகளை நானும் இசையமைப்பாளர் ஆர்.எச்.விக்ரமும் மிகவும் ரசித்தோம். இப்பாடலின்
மூலம் இப்படம் மேலும் புத்துணர்ச்சி பெற்றுள்ளது. பெருகி வரும் இப்படத்தின் எதிர்பார்ப்பு எனக்கு மேலும் பொறுப்புணர்வு தந்துள்ளது.
 

 
மிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவர் ஆர்யா. ஆனால் அவருக்கு சமீப காலமாக படங்கள் எதுவும் கை கொடுக்கவில்லை. தற்போது வெளியான ‘கடம்பன்’ படமும் தோல்வியை தழுவியது.தற்போது
சுந்தர்.சி இயக்கத்தில் ‘சங்கமித்ரா’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார்.ஆர்யாவுக்கு நடிகைகள் பலர் தோழியாக உள்ளனர். தமிழ் சினிமாவின் ரோமியோவாகவும் வலம் வருகிறார். ஆனால் அவர் இது வரை எந்த
நடிகைகளுடனும் சேர்த்து கிசுகிசுக்கப்படவில்லை. பிரியாணி செய்து கொடுத்தே ஆர்யா நடிகைகளை வளைத்து விடுவார் என்று அவரை சக நடிகர்கள் கிண்டல் அடிப்பதுண்டு. இந்த நிலையில் நடிகர் ஆர்யா பெண்
தோழியை தேடத் தொடங்கியுள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டரில் ‘உடனடியாக தனக்கு ஒரு கேள் பிரண்ட் வேண்டும்’ என்று பதிவிட்டு இருக்கிறார்.ஆர்யாவின் வீடியோ அறிவிப்பை நடிகை வரலட்சுமி
பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் ஆர்யா கூறி இருப்பதாவது: “நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். நான் ஆர்யா. நான் இப்போது முக்கியமான பிரச்சினையில் இருக்கிறேன். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, எனக்கு
உதவுங்கள். உடனடியாக எனக்கு கேர்ள் பிரண்ட் தேவை. பிளீஸ்…” இவ்வாறு ஆர்யா கூறியுள்ளார். வரலட்சுமி தயாரிப்பில் உருவாக இருக்கும் நடன நிகழ்ச்சியின் புரமோஷனுக்காக ஆர்யா  இந்த வீடியோவை பதிவு
செய்திருக்கிறார். ஆர்யாவை தொடர்ந்து பிரசன்னாவும் இதுபோன்ற ஒரு வீடியோவை பகிர்ந்திருக்கிறார். இந்த வீடியோ பதிவை பார்த்த ரசிகர்கள் விமர்சனம் செய்துள்ளனர். ‘காபியில் போடாத சுகரும், ஆர்யாவுக்கு
மசியாத பிகரும் நல்லா இருந்ததா சரித்திரமே இல்லை’ என்று கூறியுள்ளனர்.
 

 
யன்தாராவும், பிரபுதேவாவும் காதலர்களாக கோலிவுட்டில் வலம்வந்து, இவர்கள் இருவரும் திருமணம் வரை சென்று பின்னர் பிரிந்துபோன விஷயங்கள் எல்லாம் அனைவரும் அறிந்ததே. தற்போது இருவரும் தங்களது
வேலைகளில் பிசியாக பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், பிரபுதேவாவும், நயன்தாராவும் மீண்டும் கைகோர்த்துள்ளதாக வந்துள்ள விஷயம் என்னவென்றால், பிரபுதேவா நடிப்பில் உருவாகியுள்ள ‘குலேபகாவலி’
மற்றும் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘அறம்’ ஆகிய இரண்டு படங்களின் சாட்டிலைட் உரிமையையும் பிரபல தொலைக்காட்சி நிறுவனம் வாங்கியுள்ளது. ‘குலேபகாவலி’ படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக
ஹன்சிகா நடித்துள்ளார். கல்யாண் இயக்கியுள்ளார். ‘அறம்’ படத்தில் நயன்தாரா கலெக்டராக நடித்துள்ளார். கோபி நயினார் என்பவர் இப்படத்தை தயாரித்துள்ளார்.இவ்விரண்டு படங்களையும் கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ்
நிறுவனம் சார்பில் கோட்டப்படி ஜே.ராஜேஷ் என்பவர் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

 
ஜினியின் ‘கபாலி’ படத்தில் நடித்து பிரபலம் ஆனவர் சாய் தன்ஷிகா. தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேடி நடிப்பதில் ஆர்வம் காட்டுகிறார்.  சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளிவந்த ‘உரு’ படம் ரசிகர்கள்
மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தொடர்ந்து நல்ல கதைகளாக தேர்வு செய்துவரும் தன்ஷிகா கூறும்போது, ‘உரு’ கதையை கேட்டவுடன் நடிக்க ஒப்புக்கொண்டேன். படப்பிடிப்பு நடந்த இடம் கொடைக்கானல்.
டிசம்பர் மாதம் படப்பிடிப்பு அதனால் அங்கு குளிர் எங்களை பாடாய் படுத்தியது. மன உறுதியுடன் ஒட்டுமொத்த  குழுவினரும் பணியாற்றினோம். சண்டைக்காட்சிகளில் இயக்குனர் விருப்பப்படி நானே நடித்தேன்.
இதற்கு பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது. இந்த படத்திற்காக பட்ட கஷ்டங்கள் அனைத்தும் மறந்து போனது. அடுத்து.. ‘காலக்கூத்து’ என்ற படத்தில் மதுரை பெண்ணாக நடிக்கிறேன். நாகராஜ் என்ற புதுமுக
இயக்குனர் இயக்கியிருக்கிறார். இயக்குனர் மீரா கதிரவனின் இயக்கும் ‘விழித்திரு’ படத்தில் வடசென்னை குடிசைப்பகுதியில் வாழும் பெண்ணாக காமெடி கலந்து நடித்திருக்கிறேன்.ஆக்‌ஷன் ஹீரோயினியாக
திட்டமிட்டு நடிக்கவில்லை. ஒவ்வொரு படத்திற்கும் வித்தியாசமான கேரக்டரைத்தான் தேர்ந்தெடுக்கிறேன். ‘டேவிட்’ படத்தை இயக்கிய பிஜோய் நம்பியார் இயக்கும் ‘சோலோ’ படத்தில் ஒரு கண்பார்வையற்ற நடன
கலைஞராக நடித்திருக்கிறேன். இதில் எனக்கு ஜோடி துல்கர் சல்மான். முழுமையாக ஆக்‌ஷன் படம் வந்தால் அதிலும் நடிக்க தயாராகவேயிருக்கிறேன்.எனக்கு சினிமாவிலும், வெளியிலும் காதல் இல்லை. உண்மையைச்
சொல்லப்போனால் அதற்கெல்லாம் நேரமில்லை. தமிழ் தவிர, தெலுங்கு, கன்னட படங்களிலும் நடிக்கிறேன்” என்றார். தமிழைத் தவிர.. தெலுங்கில் ‘வாலுஜடா..’ என்ற படத்திலும், கன்னடத்தில் சுனில் குமார் தேசாய்
என்பவரின் இயக்கத்தில் உருவாகும் ‘உத்கர்ஷா’ என்ற படத்திலும் நடிக்க இருக்கிறேன். எந்த மொழியில் நடித்தாலும் கதை தான் முக்கியம். கதை நன்றாக இருந்தால் மொழி கடந்தும் நடிப்பேன்” என்றார்.
 

 
விஜய் நடிப்பில் உருவாகிவரும் புதிய படத்தை அட்லி இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் நிலையில், சமீபத்தில் ஒரு விருது வழங்கும் விழாவில் விஜய் கலந்துகொண்டு
சிறப்புரையாற்றியிருக்கிறார். அப்போது அவர் பேசும்போது, “நான் நல்லா இருக்கணும்னு நீங்க நினைக்கிறீங்க. நீங்க நல்லா இருக்கணும்னு நான் நினைக்கிறேன். ஆனா, நாம எல்லோரும் நல்லா இருக்கணும்னு
நினைக்கிற விவசாயிகள் நல்லா இல்லைங்க. இன்றைக்கு விருது வாங்கிய கலைஞர்கள் அனைவருக்கும் அது அவங்க உழைப்புக்கு கிடைச்ச பலன். ஆனா எந்த பலனும் கிடைக்காம இன்றைக்கு போராடிக்
கொண்டிருக்கிற விவசாயிகளை நினைத்தால் கொஞ்சம் வலிக்கிறது. உணவு, உடை, இருப்பிடம் இதில் உணவுக்குத்தான் முதலிடத்தை கொடுக்கிறோம். ஆனால் அதைக் கொடுக்கிற விவசாயிக்கு  எதையும் கொடுக்கிறது
கிடையாது. பசி ஈசியாக தீர்ந்துவிடுவதால்தான் நாமெல்லாம் அவர்களைப் பற்றி நினைக்கிறது கிடையாதோ என்று ஒரு எண்ணத் தோன்றுகிறது. காசு கொடுத்தால்கூட சாப்பிடுவதற்கு எதுவும் கிடைக்காது என்கிற ஒரு
நிலைமை வந்தால்தான் நாமெல்லாம் அவர்களைப் பற்றி புரிந்துகொள்வோம். இது அவசியம் என்பதைவிட அவரசமும் கூட. நமக்கு ஏற்கெனவே ஆரோக்கியமில்லாத உணவுகள்தான் கிடைத்துக் கொண்டு இருக்கிறது.
இப்போதுகூட நாம் முழித்துக் கொள்ளாவிட்டால் அடுத்த சந்ததிக்கு இதுகூட கிடைக்காது. ஒரு நகைக்கடை அதிபர் வேறொரு நகைக் கடையில் போய் நகை வாங்க மாட்டார். ஒரு ஜவுளிக்கடை அதிபர் மற்றொரு
ஜவுளிக்கடையில் போய் துணி எடுக்கமாட்டார். ஆனால், ஒரு விவசாயிதான் ரேஷன்கடையில் வரிசையில் நிற்கிறான் இலவச அரிசிக்காக.இந்தியா வல்லரசாகவேண்டும் என்பதெல்லாம் அடுத்ததுதான். முதலில்
விவசாயிகள் நன்றாக வாழக்கூடிய அரசாக மாறவேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
 

 
டிகர் தம்பிராமையாவின் மகன் உமாபதி கதாநாயகனாக அறிமுகமாகி உள்ள படம் ‘அதாகப்பட்டது மகாஜனங்களே’. இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. விழாவில் நடிகர்கள் எஸ்.வி.சேகர்,
சிவகார்த்திகேயன், பொன்வண்ணன், டைரக்டர்கள் கே.எஸ்.ரவிக்குமார், பேரரசு, பிரபு சாலமன், விஜய், சுராஜ், அறிவழகன், துரை செந்தில்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு பேசினார்கள்.தயாரிப்பாளர்
பி.டி.செல்வகுமார் பேசும்போது, “சிவகார்த்திகேயன் படங்களுக்கு குழந்தைகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினர் மத்தியிலும்  வரவேற்பு உள்ளது. அவர் தமிழ் பட உலகின் இளைய சூப்பர் ஸ்டார்” என்றார்.நடிகர்
எஸ்.வி.சேகர் பேசும்போது “சிவகார்த்திகேயனை இளைய சூப்பர் ஸ்டார் என்று கூறுவதால் ரஜினிகாந்த் கோபித்துக்கொள்ள மாட்டார்.  சினிமாவில் எந்த பின்புலமும் இல்லாமல் சிவகார்த்திகேயன் வளர்ந்து இருக்கிறார்”
என்றார். தொடர்ந்து பேசிய பலரும் சிவகார்த்திகேயனை இளைய சூப்பர் ஸ்டார் என்றே அழைத்தனர். இதற்கு பதில் அளித்து  சிவகார்த்திகேயன் பேசியதாவது:- “எனக்கு எந்த பட்டமும் வேண்டாம். பட்டங்களில் எனக்கு
விருப்பம் இல்லை. பட்டங்கள் பெயரை வாயால் சொல்வதற்கு கூட நான் தயாராக இல்லை. தயவு செய்து எனக்கு பட்டப் பெயர் சூட்டி அழைக்க வேண்டாம்.  கடைசிவரை மக்களுக்கு பிடித்த மாதிரி நல்ல படங்களில்
நடிக்க வேண்டும் என்பதே எனது ஆசையாக இருக்கிறது.எனது நடிப்பு பற்றி விமர்சனங்கள் வரும்போது திருத்திக்கொள்வேன். எனது வாழ்க்கை எப்படி இருந்தது.  இந்த இடத்துக்கு எப்படி வந்தேன் என்பதையெல்லாம்
மனதில் வைத்து இருக்கிறேன். எனக்கு என்று ஒரு பாதை வைத்துக்கொண்டு அதில் எனக்கு கொடுத்த வேலையை செய்கிறேன். அது போதும். சினிமாவில் பொதுவாக 30, 40 வயதுவரைதான் வலுவாக காலூன்றி நிற்க
முடியும். ஆனால் தம்பிராமையா அந்த வயதையும் தாண்டி நிறைய படங்களில் நடித்து வருவதற்கு அவரது விடா முயற்சியும், உழைப்பும்தான்  காரணம். சினிமா துறையில் சுய ஒழுக்கத்தோடு இருந்தால் முன்னேறலாம்.
‘மனம் கொத்தி பறவை’ படத்தில் எனக்கு நடனம் வரவில்லை. ‘பாடல் நன்றாகத்தானே இருக்கிறது நீ ஏன் நடனம் என்ற பெயரில் உடற்பயிற்சி  செய்கிறாய்’ என்று கேலி செய்தனர். இப்போது ஓரளவு நடனம் ஆட கற்று
இருக்கிறேன்”.இவ்வாறு சிவகார்த்தி கேயன் பேசினார்.

 
ஜி.வி.பிரகாஷ் காட்டில் தற்போது மழை என்றுதான் சொல்லவேண்டும். அந்தளவுக்கு இடைவெளியே இல்லாமல் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். அந்த வரிசையில் இவர் நடிப்பில் உருவாகியுள்ள படம்தான் ‘செம’.
இப்படத்தை வள்ளிகாந்த் என்பவர் இயக்கியுள்ளார். பசங்க புரொடக்ஷன்ஸ் சார்பில் பாண்டிராஜ் மற்றும் லிங்க பைரவி கிரியேஷன்ஸ் சார்பில் ரவிச்சந்திரன் இணைந்து தயாரிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ்
இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் சென்னையில் வெளியிடப்பட்டது. இதில், இயக்குனர் பாண்டிராஜ், தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, நடிகர்கள் ஆர்யா, ஜி.வி.பிரகாஷ், சதீஷ், சூரி உள்ளிட்டோர் 
கலந்துகொண்டனர்.இதில் சூரி பேசும்போது, வருமான வரித்துறை அதிகாரி ஒருவர் என் வீட்டுக்கு வருமான வரி சோதனைக்கு வருவதாக சொன்னார். ஏன் என கேட்டதற்கு, நிறைய படம் நடிக்கிறீங்க என சொன்னார். 
என்னை விட ஜி.வி.பிரகாஷ் தான் அதிக படத்தில் நடிக்கிறார், அவரை விட்டுட்டீங்களே என்றேன் என்று கலகலப்பாக பேசினார். நிறைய படங்கள் நடித்தாலும் ஜி.வி.பிரகாஷ் நல்ல படங்களாக தேர்ந்தெடுத்து நடிக்கிறார்
என்று முடித்தார்.
 

 
பெங்களூருவில் நடந்த கன்னட படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால் “உடல் மண்ணுக்கு, உயிர் தமிழுக்கு. கன்னட படத்தின்
இசை வெளியீட்டு விழாவாக இருந்தாலும், தாய்மொழியான தமிழில் பேசுவதில் தமிழனாக பெருமையடைகிறேன். தமிழில் தான் பேசுவேன். தவறாக எண்ண வேண்டாம். தண்ணீர் கேட்பது  தமிழர்களுடைய உரிமை.
தண்ணீர் கேட்கக்கூடாது என்று சொல்ல யாருக்கும் உரிமையில்லை என்று காரசாரமாக பேசினார். இந்நிலையில், விஷாலின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னட அமைப்புகள் போராட்டம் நடத்தி வருவதாகவும்
கூறப்படுகிறது. போராட்டம் நடத்தப்படும் பகுதிகளில் கடும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக கர்நாடகாவில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒருசில இடங்களில் 144 தடை உத்தரவும்
போடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கன்னட அமைப்புகளின் போராட்டத்தால் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் `தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
`தானா சேர்ந்த கூட்டம்’ படப்பிடிப்பு தற்போது  கர்நாடகத்தில் நடந்து வருகிறது. விக்னேஷ் சிவன் இயக்கி வரும் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்து வருகிறார். பிரச்சனைகள் சீரான உடன் மீண்டும் படப்பிடிப்பு
தொடங்கப்படும் என்று  எதிர்பார்க்கப்படுகிறது.

 
மாதவன்-ரித்திகா சிங் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த ‘இறுதிச்சுற்று’ படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. குத்துச்சண்டையை மையமாக வைத்து வெளிவந்த இப்படத்தை சுதா கே.பிரசாத் இயக்கியிருந்தார்.
இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து எந்த படத்திலும் கமிட்டாகாமல் இருந்து சுதா தற்போது சூர்யாவை வைத்து அடுத்த படத்தை இயக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. சூர்யா தற்போது ‘தானா சேர்ந்த
கூட்டம்’ படத்தில் பிசியாக நடித்து வருகிறார். விக்னேஷ் சிவன் இயக்கும் இப்படத்தை தொடர்ந்து ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் செல்வராகவன் இயக்கும் புதிய படத்திலும் நடிக்க  ஒப்பந்தமாகியிருக்கிறார்.
இந்நிலையில், சுதாவிடம் சமீபத்தில் சூர்யா கதை ஒன்றை கேட்டதாகவும், அந்த கதை சூர்யாவுக்கு பிடித்துப் போய்விட்டதாகவும் கூறப்படுகிறது.இதற்கிடையில், சிவகார்த்திகேயனிடமும் சுதா  ஒரு கதையை சொல்லி
ஓகே வாங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. எனவே, அடுத்ததாக சுதா யாரை வைத்து இயக்கப் போகிறார் என்பது அவர் வாய் திறந்து சொன்னால்தான் இதுகுறித்த உண்மையான  தகவல்கள் வெளிவரும் என
தெரிகிறது.
 

 
விஜய்யின் 61-வது படமாக உருவாகிவரும் ‘மெர்சல்’ படத்தை அட்லி இயக்கி வருகிறார். இப்படத்தை தொடர்ந்து விஜய்யின் 62-வது படத்தை யார் இயக்குவார்? என்பது கோலிவுட் வட்டாரத்தில் பெரிய கேள்வியாக எழுந்து
வருகிறது. விஜய்யின் அடுத்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ்தான் இயக்குவார் என்றும் ஒருசிலர் கூறி வருகின்றனர். இந்நிலையில், விஜய்யின் அடுத்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கப்போவதாகவும், அந்த
படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கப்போவதாகவும் கோலிவுட் வட்டாரத்திலும், சமூக வலைத்தளங்களிலும் ஒரு செய்தி வைரலாக பரவி வருகிறது. படப்பிடிப்பு அக்டோபர் மாதத்தில் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.
இதுகுறித்து, அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளிவரும் எனவும் கூறப்படுகிறது.விஜய்-ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் ஏற்கெனவே ‘துப்பாக்கி’, ‘கத்தி’ என இரு மாபெரும் வெற்றிப்படங்கள் அமைந்துள்ளன. சன்
பிக்சர்ஸ் நிறுவனம் ஏற்கெனவே விஜய் நடித்த ‘வேட்டைக்காரன்’, ‘சுறா’ ஆகிய படங்களை தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.