Dotcom Spl >> cinebits
 

அதை வைத்துக்கொள்ள பயமாக இருக்கின்றது- நயன்தாரா ஓபன் டாக்

ங்கமித்ரா படத்திற்காக 2 ஆண்டுகள் கால்ஷீட் கொடுத்துள்ளார் ஜெயம் ரவி. சுந்தர் சி. இயக்கத்தில் உருவாகும் சரித்திரப் படம் சங்கமித்ரா. இந்த படத்தில் ஜெயம் ரவி, ஆர்யா ஆகியோர் நடிக்கிறார்கள். சங்கமித்ராவாக நடிக்கஒப்பந்தம் செய்யப்பட்ட ஸ்ருதி ஹாஸன் படத்தில் இருந்து விலகினார். இதையடுத்து ஹீரோயின் தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.சங்கமித்ரா படத்திற்காக ஜெயம் ரவி 2 ஆண்டு கால்ஷீட் கொடுத்துள்ளார். இந்த படத்திற்கு அதிக நாள் கால்ஷீட் கொடுக்க வேண்டும் என்பதாலேயே பல ஹீரோக்கள் நடிக்க மறுத்துவிட்டனர்.3 ஆண்டுகள் எடுத்த படங்களில் எல்லாம் நான் நடித்துள்ளேன். எனக்கு நாட்கள் முக்கியம் இல்லை. படத்தின் தரம் தான் மிகவும் முக்கியம். தரமான படம் வேண்டும் என்றால் அதிக நேரம் செலவிடத் தான் வேண்டும் என்கிறார் ரவி.சங்கமித்ரா படத்தில் நடித்ததை எதிர்காலத்தில் நான் நினைத்துப் பார்க்கும்போது பெருமையாக இருக்கும். படத்திற்கு செட் போடும்போது வேலையில்லாமல் சுமார் ஒரு மாதம் வீட்டில் சும்மா தான் இருக்க வேண்டும் என்று ரவி தெரிவித்துள்ளார்.வரலாற்று சிறப்பு மிக்க படங்களில் நடிக்க பொறுமையாக இருக்க வேண்டும். நம் கெட்டப் முக்கியம். சங்கமித்ரா பாகுபலியை விட வித்தியாசமான படம் என்று ரவி கூறியுள்ளார்.பாகுபலி மற்றும் பாகுபலி 2 ஆகிய படங்களில் நடிக்க பிரபாஸ் 5 ஆண்டுகள் கால்ஷீட் கொடுத்தார். அந்த 5 ஆண்டுகளும் அவர் வேறு எந்த படங்களிலும் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 

 
யன்தாரா தற்போது பல படங்களில் சோலோ ஹீரோயினாக கலக்கி வருகின்றார். இவர் கையில் அரை டஜன் படங்கள் உள்ளது.இதில் விரைவில் அறம் என்ற படம் திரைக்கு வரவுள்ளது, இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக ஒரு தொலைக்காட்சியில் நயன்தாரா கலந்துக்கொண்டார்.அப்போது அவரிடம்லேடி சூப்பர் ஸ்டார் என்று உங்களை சொல்கிறார்கள். உங்களுக்கு பிடித்துள்ளதா?’ என கேட்டுள்ளனர்.அதற்கு நயன்தாராஅந்த டைட்டில் வைத்துக்கொள்ளவே பயமாக இருக்கின்றது, அந்த படத்திற்கு ஏற்றார் போல் பொறுப்பாக இருக்கவேண்டும் என்று உணர்ந்துள்ளேன்என கூறியுள்ளார்.
 

 
றுதிச்சுற்று படத்திற்குப் பிறகு மாதவனுக்கு தமிழ், இந்தி மொழிகளில் பல பட வாய்ப்புகள் வந்த வண்னம் உள்ளது. இவரது நடிப்பில் உருவானவிக்ரம் வேதாதிரைப்படம் சமீபத்தில் வெளியானது. இதில் மாதவனுடன் விஜய் சேதுபதி, வரலட்சுமி சரத்குமார், கதிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.இந்தியில் அதுல் மஞ்ரேகர் இயக்கத்தில் உருவாக இருக்கும்பேன்னி கான்படத்தில் ஐஸ்வர்யா ராய்க்கு ஜோடியாக மாதவன் நடிப்பதாக இருந்தது. மாதவனுக்கு கதை பிடித்திருந்தாலும், கால்ஷீட் பிரச்சனை காரணம் அப்படத்தில் நடிக்க முடிய வில்லை. இதுபற்றி கூறியுள்ள அவர், ‘பேனிகான்படத்தின் கதை பிடித்திருக்கிறது. ஆனால் கால்ஷீட் கொடுக்க தேதி இல்லை. படக்குழுவுக்கு வாழ்த்துக்கள்என்று தெரிவித்துள்ளார்.தற்போது மாதவனுக்கு பதிலாக ஐஸ்வர்யாராய் ஜோடியாக ராஜ்குமார்ராவ் என்ற இளம் நடிகர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
 

 
சையமைப்பாளராக இருந்து தற்போது நடிகராக வலம் வருபவர் விஜய் ஆண்டனி. இசையால் ரசிகர்களை எந்தளவிற்கு கவர்ந்தாரோ தற்போது அதைவிட அதிகமாகவே நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இவர் நடிப்பில் வெளியானபிச்சைக்காரன்படம் சூப்பர் ஹிட்டானது. தமிழ் மட்டுமல்லாமல் இப்படம் மூலம் தெலுங்கு ரசிகர்களிடமும் சிறந்த நடிகர் என்ற அங்கீகாரத்தை பெற்றார்.மேலும் இவர் நடிப்பில் வெளியானசைத்தான், ‘எமன்படங்களும் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. தமிழைப் போலவே தெலுங்கில் இவரது படங்களுக்கு வரவேற்பு பெற்று வருகிறது. விஜய் ஆண்டனி நடிப்பில் தற்போதுஅண்ணாதுரைபடம் உருவாகி வருகிறது.இப்படம் தெலுங்கில்இந்திரசேனாஎன்ற பெயரில் எடுத்து வருகிறார்கள்
 

 
டிகை நயன்தாரா 2005-ம் ஆண்டுஐயாபடம் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமாகி 12 வருடங்களாகநம்பர் ஒன்கதாநாயகியாக வலம் வருகிறார். அவர் நடித்த அனைத்து படங்களும் வசூல் குவித்து உள்ளன. காதல் சர்ச்சைகளில் சிக்கியும் அவரது மார்க்கெட் சரியவில்லை. காது கேளாத பெண்ணாக நடித்த நானும் ரவுடிதான், பேயாக வந்த மாயா படங்களும் திருப்புமுனையாக அமைந்தன.தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்து நடிக்கிறார். இமைக்கா நொடிகள், கொலையுதிர் காலம், அறம், ஆகிய படங்கள் கைவசம் உள்ளன. இவற்றின் படப்பிடிப்புகள் முடிவடைந்து அடுத்தடுத்து திரைக்கு வர உள்ளன. ரூ.2 கோடி சம்பளம் வாங்கி வந்த அவர் படங்கள் வசூல் குவித்ததாலும் பட வாய்ப்புகள் குவிந்ததாலும் சம்பள தொகையை ரூ.4 கோடியாக உயர்த்தினார்.ஆனால் புதிதாக தெலுங்கில் தயாராகும்உய்யலவாடா நரசிம்ம ரெட்டிஎன்ற படத்தில் சிரஞ்சீவி ஜோடியாக நடிக்க ரூ.6 கோடி சம்பளம் கேட்டு பட உலகை அதிர வைத்து உள்ளார். ஆந்திர மாநிலம் கர்னூலை சேர்ந்த சுதந்திர போராட்ட வீரரின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த படம் தயாராகிறது.இதில் சிரஞ்சீவி சுதந்திர போராட்ட வீரர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தை சிரஞ்சீவி மகன் ராம்சரண் ரூ.150 கோடி செலவில் தயாரிக்கிறார். சுரேந்திர ரெட்டி இயக்குகிறார். இந்த படம் தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய 3 மொழிகளில் தயாராவதாலும் அதிக நாட்கள் கால்ஷீட் கொடுத்து நடிக்க வேண்டியிருப்பதாலும் நயன்தாரா ரூ.6 கோடி கேட்பதாக கூறப்படுகிறது.அவர் கேட்கும் சம்பளத்தை கொடுத்து ஒப்பந்தம் செய்ய ராம்சரண் முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் அமிதாப்பச்சனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
 

 
விஜய் சந்தர் இயக்கத்தில் `ஸ்கெட்ச்படத்தை முடித்த விக்ரம், அடுத்ததாக கவுதம் மேனன் இயக்கத்தில் `துருவ நட்சத்திரம்படத்தில் நடித்து வருகிறார். அதனைத் தொடர்ந்து ஹரி இயக்கத்தில் `சாமி-2′ படத்தில் நடிக்கவிருக்கிறார். அந்த படத்தை முடித்த பிறகு விக்ரம் அடுத்ததாக, கே.வி.ஆனந்த் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் விக்ரமை சந்தித்து கே.வி.ஆனந்த் கதை கூறியதாகவும், விக்ரமுக்கு அந்த கதை பிடித்துப் போக அந்த படத்தில் நடிக்க அவர் சம்மதம் தெரிவித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.இந்த படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் பல வெற்றிப்படங்களை தயாரித்த விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னதாக அஜித்தின் `வீரம், விஜய்யின் `பைரவாஉள்ளிட்ட படங்களை விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
 

 
பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசன் இன்னும் சில நாட்களில் முடிவடைய உள்ளது. 100 நாட்களை எட்டவிருக்கும் நிலையில் அடுத்த சீசனுக்கான செலக்ஷன் நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.துருவங்கள் பதினாறு படத்தில் நடித்த யாஷிகா ஆனந்த் தமிழ் பிக் பாஸ் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய அவர் "எனக்கு பிக் பாஸ் ஷோவில் கலந்துகொள்ள அழைப்பு வந்தது, ஆனால் நான் ஏற்றுக்கொள்ளவில்லை. நான் நிச்சயம் இரண்டாவது சீசனில் கலந்துகொள்வேன்" என யாஷிகா அவர் கூறியுள்ளார்.மேலும் இதில் மாப்பிள்ளை சீரியல் புகழ் ஸ்ரீஜா, தெய்வமகள் புகழ் கிருஷ்ணா, பிரபல தொகுப்பாளினி DD, கலக்க போவது யாரு பாலா, நடிகை ரம்பா, சரவணன் மீனாட்சி புகழ் ரியோ மற்றும் ரச்சிதா, காமெடி நடிகர் வடிவேல் பாலாஜி, நடிகை சினேகா, கலக்க போவது யாரு கதிர், நடிகை ரியமிக்கா, மைனா நந்தினி, மற்றும் பிரபல வில்லன் ரியாஸ் ஆகியோர் கலந்துகொள்ள போவதாக தகவல் வெளியாகியுள்ளது.விரைவில் உறுதியான தகவல்களை எதிர்பார்க்கலாம்.
 

 
மிழ் சினிமா ஹாலிவுட் தரத்திற்கு உயர்ந்தாலும் சில விஷயங்களால் அடிபட்டுக் கொண்டு தான் இருக்கிறது. முக்கியமாக சொல்லப்போனால் திருட்டு DVD, பைரசி போன்ற விஷயங்கள் தமிழ் சினிமாவை அடிதளத்திற்கு கொண்டு செல்கிறது.தயாரிப்பாளர் சங்க தலைவர் ஆனதும் விஷால் இதுபோன்ற விஷயங்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் விஷாலின் துப்பறிவாளன் படம் முதல் நாளிலேயே HDல் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியாக்கியிருந்தது. தற்போது சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வைரலாக பரவி வருகிறது.அதில் இனி விஷாலின் படங்கள் முதல் நாளே லீக் ஆகும் என்றும் விஜய்யின் மெர்சல் படமும் கண்டிப்பாக சமூக வலைதளத்தில் லீக் ஆகும் என்று ஒருவர் பேசியுள்ளார்.
 

 
மிழ் ராக்கர்ஸ் மற்றும் தமிழ் கன் ஆகிய இரு இணைய தளங்களின் நிர்வாகிகள் என்று கூறி இரு நபர்களின் படங்களை தயாரிப்பாளர் சங்கம் இன்று வெளியிட்டுள்ளது. இவர்களைப் பற்றி தகவல் தருமாறும் அச் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.தமிழில் வெளியாகும் புதிய படங்களை உடனுக்குடன் இணையத்தில் பதிவேற்றி, திரைத் தொழிலை சிதைப்பதாக இந்த இணைய தளங்களின் மீது குற்றச்சாட்டு வைத்துள்ள தயாரிப்பாளர் சங்கம், அண்மையில் வேலூர் அருகே திருப்பத்தூரைச் சேர்ந்த கௌரி சங்கர் என்ற இளைஞரைக் கைது செய்தனர். இந்த நிலையில் இப்போது இங்கிலாந்தில் வசிக்கும் டிக்சன் ராஜ் ஆறுமுக சாமி (தமிழ்கன், தமிழ்தபாக்ஸ் நிர்வாகி), தமிழ் ராக்கர்ஸ் மாடரேட்டர் அரவிந்த் லோகேஷ்வரன் ஆகியோரின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம்.