Dotcom Spl >> cinebits
 

சத்தமில்லாமல் நயன்தாராவை பின்பற்றும் அனுபமா

மூக ஆர்வலர் டிராபிக் ராமசாமியின் வாழ்க்கையைக் கருவாக வைத்து சில மாற்றங்களோடு உருவாகிக் கொண்டிருக்கும் படம் `டிராபிக் ராமசாமி'. இதில் கதையின் நாயகனாக அதாவது டிராபிக் ராமசாமியாக
இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரனும், அவர் மனைவியாக ரோகிணியும் நடிக்கிறார்கள். கதாநாயகனாக ஆர்.கே.சுரேஷும், கதாநாயகியாக உபாஷனாவும் நடிக்க, நீண்ட இடைவெளிக்குப் பிறகு நகைச்சுவை கலந்த நீதிபதியாக அம்பிகா நடிக்கிறார். இவர்களுடன் லிவிங்ஸ்டன், இமான் அண்ணாச்சி, அம்மு ரவிச்சந்திரன், சார்லஸ் வினோத், சின்னத் திரை புகழ் சேத்தன், பேபி ஷெரின், மோகன்ராம், மதன்பாப் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். இந்த படத்தை எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த விஜய் விக்ரம் இயக்குகிறார். ஈரோடு மோகன் என்பவர் தயாரிக்கும் இந்த படத்திற்கு பாலமுரளி பாலு இசையமைக்கிறார். குகன் எஸ்.பழனி ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். இந்தப் படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் விஜய் ஆண்டனி கெளரவ வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். அநியாயங்களை தட்டிக் கேட்கும் சமூக அக்கறை உள்ள இளைஞனாக ஒரு திரைப்பட நடிகராகவே அவர் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் ஆண்டனி எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் உருவான சுக்ரன் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

 
ந்திர அரசு, தெலுங்கு திரையுலகில் சிறந்த நடிகர், நடிகைகள், படங்கள், தொழில்நுட்ப கலைஞர்களுக்கு ஆண்டுதோறும் நந்தி விருது வழங்கி வருகிறது. கடந்த 3 ஆண்டுகளாக விருது வழங்கப்படாமல் இருந்தது.
இந்த நிலையில் 2014, 2015, 2016 ஆகிய 3 ஆண்டுகளுக்கான நந்தி விருதுகளை ஆந்திர அரசு நேற்று அறிவித்தது. இதில் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா நடித்த பாகுபலி படம் 2015-ம் ஆண்டுக்கான 13 நந்தி விருதுகளை வென்று இருக்கிறது. சிறந்த படம், சிறந்த இயக்குனர், துணை நடிகர் - நடிகைகள், சிறந்த வில்லன், இசை, பின்னணி பாடகர், சண்டை இயக்குனர், ஒளிப்பதிவாளர், டப்பிங் ஆகிய 13 நந்தி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளது.
 

 
விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியான படம் மெர்சல். அட்லீ இயக்கிய இந்த படத்திற்கு கிடைத்த அரசியல் சர்ச்சை காரணமாக எதிர்பார்த்ததை விடவும் மெகா ஹிட்டானது. இதுவரை விஜய் நடித்த
படங்களிலேயே அதிகமாக வசூலித்த படம் என்கிற இடத்தையும் மெர்சல் பிடித்துள்ளது. இந்த நிலையில், தற்போது விஜய், அட்லீ துபாய் பறந்துள்ளனர். இந்த செய்தி வெளியானதை அடுத்து, மெர்சல்-2 கதை விவாதத்திற்காகத்தான் விஜய்யும், அட்லீயும் துபாய் சென்றிருப்பதாக சமூக வலைதளங்களில் பரபரப்பு செய்திகள் வெளியாகின. ஆனால், துபாய்க்கு அவர்கள் சென்றிருப்பது, மெர்சல்-2 சம்பந்தமாக அல்ல, மெர்சல் படத்தின் வெற்றியை கொண்டாட சென்றிருக்கிறார்கள் என்ற தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
 

 
துருவங்கள் பதினாறு படத்தின் வெற்றியை தொடர்ந்து கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் `நரகாசூரன்'. கவுதம் மேனனின் ஒண்ராகா என்டர்டெயின்மெண்ட் மற்றும் கார்த்திக் நரேனின்
நோஸ்டால்ஜியா பிலிமோடெயின்மெண்ட் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பில் சந்தீப் கிஷன், ஆத்மிகாவின் காட்சிகள் படமாக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இரண்டாவது கட்ட படப்பிடிப்பில் அரவிந்த்சாமி, இந்திரஜித் சுகுமாரன், ஸ்ரியோ சரணின் காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இதுகுறித்து டுவிட்டரில் கவுதம் மேனன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது,`திட்டமிட்டபடி நரகாசூரன் படத்தின் 41 நாட்கள் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. கார்த்திக் நரேனுக்கு பாராட்டுக்கள். தயாரிப்பாளராக இருப்பதால் படத்தை முதலில் பார்க்க முடியும். படத்தை பார்க்க ஆவலுடன் இருக்கிறேன்' இவ்வாறு கவுதம் மேனன் கூறியிருக்கிறார்.
 

 
பிரியங்கா சோப்ரா பற்றி அவருடைய தாயார் மது சோப்ரா தெரிவித்துள்ள முக்கிய தகவல் இதோ...
பிரியங்கா நடிக்க வந்த புதிதில் பிரபல டைரக்டர் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதில் அரை குறை ஆடை அணிந்து நடிக்க வேண்டும் என்றார். மறுத்த போது, ‘உலக அழகி பட்டம் வென்றவரை அழகாக காட்ட வேண்டாமா’ என்று இயக்குனர் கேட்டார். ஆனால் அதில் நடிக்காமல் பிரியங்கா விலகினார். இதனால் அந்த இயக்குனர் கோபம் அடைந்தார். அந்த படத்தில் இருந்து விலகியதால் பிரியங்காவுக்கு 10 படங்களில் நடிக்கும் வாய்ப்பு பறிபோனது.என் மகள் சினிமா துறைக்கு வந்த போது அவருக்கு வயது 17 தான். கடந்த 3 வருடங்களுக்கு முன்புவரை என் மகள் எங்கு சென்றாலும் என்னையும் அழைத்துச் செல்வாள். ஒரு முறை மகளிடம் கதை சொல்ல வந்தவர் ‘உங்கள் அம்மா அறையை விட்டு வெளியே சென்றால் நல்லது என்றார்’ ஆனால் என்மகள் அம்மா கேட்க முடியாத கதையில் நான் நடிக்க மாட்டேன் என்று சொல்லி விட்டாள்.
 

 
பாலா இயக்கத்தில் வெளியாகும் ஒவ்வொரு படமும் ரசிகர்களிடையே ஒருவித தாக்கத்தை ஏற்படுத்தும். அந்தவகையில் மக்கள் விரும்பும்படி வித்தியாசமான படங்களை கொடுத்து வரும் பாலா இயக்கத்தில் அடுத்ததாக உருவாகி இருக்கும் படம் நாச்சியார். இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ், ஜோதிகா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். ஜோதிகா இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். ராக்லைன் வெங்கடேஷ், காவ்யா இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இசைஞானி இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், படத்தின் டீசரை நடிகர் சூர்யா நாளை மாலை 6 மணிக்கு அவரது டுவிட்டர் பக்கத்தில் வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாலாவின் பி ஸ்டுடியோஸ் மற்றும் இயோன் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்து வரும் இப்படம் டிசம்பரில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

 
திக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், கயல் ஆனந்தி, மனீஷா யாதவ் நடிப்பில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் `த்ரிஷா இல்லனா நயன்தாரா'. அந்த படத்தைத் தொடர்ந்து ஆதிக், சிம்புவை வைத்து ஏஏஏ படத்தை இயக்கினார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த படம் விமர்சனங்களுக்கிடையே ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை. இந்நிலையில், ஆதிக் அடுத்ததாக ஜி.வி.பிரகாஷை மீண்டும் இயக்க இருக்கிறார். காதலை மையமாக வைத்து உருவாகவிருக்கும் இந்த படத்தை 3டி கேமராவில் படமாக்க படக்குழு முடிவு செய்துள்ளது. விஷன் ஐ மீடியா சார்பில் அரண்மனை படத்தை தயாரித்த தினேஷ் கார்த்திக் இந்த படத்தை தயாரிக்கிறார். மேலும் சோனியா அகர்வால் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 
த்மாவதி படத்துக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டம் குறித்து ராணி பத்மாவதியாக நடித்துள்ள நடிகை தீபிகா படுகோனே கூறியதாவது:- இதுபோன்ற போரட்டங்கள் மூலம் நாம் நாட்டை பின்னுக்கு தள்ளிவிடக் கூடாது. இது பயமுறுத்தல் ஆகும். திட்டவட்டமான பயமுறுத்தல். இதன்மூலம் நாம் என்ன அடைந்துவிடப் போகிறோம். இந்த நாட்டை எங்கு கொண்டு செல்கிறோம் பின்னுக்கு தள்ளுகிறோம். பத்மாவதி படத்துக்கு எதிராக போராட்டங்கள் நடப்பதை தடுக்க முடியாது, அதே சமயம் இதில் சட்டத்துக்கு புறம்பாக யாரும் செயல்பட அனுமதிக்க கூடாது. பத்மாவதி படத்துக்கு தணிக்கை குழு அனுமதி அளித்துள்ளது. அவர்களுக்கு மட்டுமே நாங்கள் பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளோம். எனவே எத்தனை போராட்டங்கள் நடத்தினாலும் பத்மாவதி படம் வெளியாவதை தடுத்து நிறுத்த முடியாது.இவ்வாறு அவர் கூறினார்.
 

 
பிரேமம் மலையாள படத்தில் பிரபலம் ஆனவர் அனுபமா பரமேஸ்வரன். தமிழில் ‘கொடி’ படத்தில் நடித்தார். தற்போது தெலுங்கில் நடித்து வருகிறார். மீண்டும் தமிழில் நடிப்பது குறித்து கேட்டபோது பதில் அளித்த அவர்....‘‘பிரேமம்’ படம் எனக்கு நல்ல அறிமுகத்தை தந்தது. ‘கொடி’ படத்துக்கு பிறகு தமிழில் சில கதைகள் வந்தன. அதில் நல்ல கதையை தேர்ந்தெடுத்து நடிப்பேன். சவாலான வேடங்கள் கிடைத்தால் நடிக்க தயாராக இருக்கிறேன். செய்தித்துறை தொடர்பாக படிக்க வேண்டும் என்பது எனது ஆசை. அதற்காக கல்லூரியில் சேர்ந்து படித்தேன். ஆனால் நடிக்க வந்துவிட்டதால் அதை தொடர முடியவில்லை. தற்போது தெலுங்கில் நானியுடன் ஒருபடம் உள்பட 2 படங்களில் நடிக்கிறேன்.நயன்தாரா கதை தேர்வு செய்து நடிப்பது வித்தியாசமாக இருக்கும். அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவரைப்போல கதையை தேர்வு செய்து நடிக்க வேண்டும். விஜய், அஜித், சூர்யா ஆகியோருடன் நடிக்கும் ஆசை இருக்கிறது. தமிழ் சினிமாவில் நிறைய நல்ல படங்களில் நடிக்க வேண்டும். இதற்காக சென்னை வந்து கதை விவாதத்தில் பங்கேற்று வருகிறேன். விரைவில் அடுத்த தமிழ் படத்தில் நடிப்பேன்’’ என்றார்.