Email
Password:
Remember Me  
Forgot Password   New Registration
About us | Register | Plan Details |Font Help| Feedback| Ad Tariff | Faq | Site Map|RSSimageRss  
News Headline
 
Dotcom Spl >> cinebits
 

கிளாமருக்கு நோ சொன்ன கீர்த்தி சுரேஷ்

 
மனோரமா பெயரில் விருது:
 
காமெடி, குணச்சித்திரம் என அனைத்து விதமான கேரக்டர்களிலும் தனது யதார்த்தமான நடிப்பால் பலரையும் கவர்ந்த மனோரமவின் முதலாம் ஆண்டு நினைவு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சில் நடிகர்கள் சிவகுமார், பிரபு, ராம்குமார், மனோரமாவின் மகன் பூபதி, என பலரும் பங்கேற்று அவருக்கு நினைவு அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியில் பேசிய நடிகர் விவேக் மனோரமாவின் பெயரில் விருது அறிவித்து கௌரவிக்கப்படவேண்டும் என பேசினார். அவரை தொடர்ந்து பேசிய பொன்வண்ணன் முதல்வர் உடல் நலம்பெற்று வந்தது நடிகர் சங்கம் சார்பில் நினைவேந்தல் நடத்தப்படும் என்றும், ஆண்டுதோறும் மனோரமா பெயரில் விருது வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
 

அஜித் ரசிகர்களுக்கு சிம்புவின் விளக்கம்:

ப்போதாவது எதையாவது பேசியோ அல்லது செய்தோ வம்பில் சிக்கிகொள்ளும் சிம்பு சமீபத்தின் தனது பேஸ்புக்கில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்துக் கொண்டிருந்த போது, ஒருவர் தங்களுடைய படங்களில் அஜித் பற்றிய காட்சிகள் இடம்பெறுவது ஏன்து ஏன் என கேள்வியெழுப்ப, அதற்கு அஜித்தை யாருமே கண்டுகொள்ளாத போது தான்தான்  முதலில் அவரை தனது படங்களில் தூக்கி வைத்து கொண்டாடியதாக பதலளித்துள்ளார். அவர் இப்படி கூறியது சிம்புவால்தான் அஜித் உயர்ந்தார் என்ற தோற்றத்தை ஏற்படுத்துவது போல் இருப்பதாக என நினைத்த அஜித் ரசிகர்கள் சிம்புவின் கருத்திற்கு பயங்கரமாக எதிர்ப்பு தெரிவித்தனர். தான் கூறியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டட்டுள்ளதாக உணர்ந்த சிம்பு, தான் தீவிர ரஜினி ரசிகன் என்றும், எல்லோரும் ரஜினி பற்றியே பேசியபோது, எவ்வித பின்புலமும் இல்லாமல் தனி நபராக சினிமாவுக்கு வந்த அஜித் பெயரை தான் தான் முதலின் தன் படங்களில் பேசத்தொடங்கியதாகவும், அதன் பிறகு அஜித்தைபற்றி மற்றவர்கள் பேசத் தொடங்கினர் என்றும் அஜித்தை கொண்டாடியதில் தான் தான் முதல் ஆள் என்றும், நான் தூக்கி வைத்து கொண்டாடியதால் அவர் முன்னுக்கு வரவில்லை, அவரது கடின உழைப்பே அவரை தூக்கி நிறுத்தியது என்றும், என் பதிலை தவறாக புரிந்து கொண்டால் அதற்கு நான் பொறுப்பாக முடியாது என்றும் விளக்கமளித்துள்ளார் சிம்பு.


நம்பிக்கையுடன் இருக்கும் திரிஷா:

நாயகி படம் எதிர்பார்த்த வெற்றிபெறாததால் அதிர்ச்சியில் இருக்கும் திரிஷாவிற்கு தனது மார்க்கெட் சரிந்து விடுமோ என்ற அச்சம் உள்ளுக்குள் இருந்தாலும் தொடர்ந்து தற்போது மாதேஷ் இயக்கத்தில் மோகினி படத்தில் நடித்து வருகிறார். அதன்பிறகு சாமி-2, சதுரங்க வேட்டை-2 ஆகிய படங்களில் வித்தியாசமான வேடங்களில் நடிக்கவுள்ளார். இந்நிலையில் தனுசுடை அவர் நடித்துள்ள கொடி படத்திலும் இதுவரை பார்க்காத அதிரடியான வேடத்தில் நடித்துள்ளாராம் த்ரிஷா. இனிமேல் தொடர்ந்து டூயட் பாடும்  ஹீரோயினாக  இல்லாமல் கதைக்கு முக்கியத்துவம் உள்ள வேடங்களில் நடிக்க வுள்ளாராம். அதற்கு கொடி படம் நல்லதொரு தொடக்கமாக அமையும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறாராம் த்ரிஷா. மேலும் தந்து நட்பு வட்டாரத்திலுள்ள ஜெயம்ரவி, ஆர்யா போன்ற சில ஹீரோக்களிடம் மாறுபட்ட வேடங்களில் தான் நடிக்க ஆர்வமாக இருப்பதாகவும் தெரிவித்துவருகிறார்.


நவம்பரில் 2.O பர்ஸ்ட்லுக்:

ஜினி-ஷங்கர் கூட்டணியில் உருவான எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமான 2.O படத்தின் படப்பிடிப்பு தற்போது பூந்தமல்லியில் லுஉள தனியார் ஸ்டுடியோவில் படமாக்கப்பட்டு வருகிறது. சென்னை நகரின் சில முக்கிய வீதிகள்,. கட்டிடங்களை உள்ளடக்கிய பிரம்மாண்ட செட்டில் படப்பிடிப்பு மிகுந்த பாதுகாப்புடன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கப்பட்டு வரும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை நவம்பர் 20ஆம் தேதி வெளியிட படக்குழுவினர் முடிவுசெய்துள்ளனர். மேலும் படத்தின் டீஸரை ஜனவரி மாதத்திலும் படத்தை அடுத்தாண்டு தீபாவளுக்கு வெளியிடவும் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.


கிளாமருக்கு நோ சொன்ன கீர்த்தி சுரேஷ்:

கோலிவுட்டின் முன்னனி நடிகைக்கான போட்டியில் வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கும் கீர்த்து சுரேஷ் தற்போது விஜய்க்கு ஜோடியாக பைரவா படத்தில் நடித்து வருகிறார். கோலிவுட்டில் எப்படி கவனம் செலுத்துகிறாரோ அதுபோலவே டோலிவுட்டிலும் கவனம் செலுத்திவரும் கீர்த்திசுரேஷ் தெலுங்கில் ஏற்கனவே நேனு சைலஜா எனும் படத்தின் மூலம் தெலுங்கு ரசிகர்களை பெரிதும் கவர்ந்தவர். தற்போது தெலிங்கில் நானிக்கு ஜோடியாக நேனு லோக்கல் என்ற படத்திலும் நடித்து வருகின்றார். அதுமட்டுமின்றி மேலும் பல தெலுங்குப்பட வாய்ப்புகள் அவரை தேடிச் சென்றாலும், அவர் கிளமாராக நடிக்க மாட்டேன் என்ற தனது கண்டிஷனில் மிகவும் பிடிவாதமாகா இருப்பதால் அப்படவாய்ப்புகள் கை நழுவி சென்றுவிட்டதாம். இந்நிலையில்  தமிழில் அவருக்கு அதிக வாய்ப்புகள் வருவதாலேயே தெலுங்குப்பட வாய்ப்புகளை அவர் நிராகரிப்பதாக டோலிவுட் வட்டாரத்தில் பேசிக்கொள்கின்றனர்.


விஜய்யுடன் மோதும் ராகவலாரன்ஸ்:

ந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகமாக கன்னடத்தில் சிவராஜ் குமாரை வைத்து சிவலிங்கா படத்தை இயக்கிய இயக்குனர் வாசு, தமிழிலும் அதே பெயரில் அப்படத்தை ராகவாலாரன்ஸை ஹீரோவாக வைத்து  ரீமேக் செய்து வருகிறார். ரித்திகா சிங், வடிவேலு, ஊரிவசி உள்பட படல் நடிக்கவுள்ள இப்படத்தை பொங்கல் தினத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளனர் படக்குழுவினர். அதே நாளில்தான் விஜய் நடித்த பைரவா படமும் ரிலீஸாகயிருக்கிறது. அதனால் படக் குழுவினரை அணுகிய சிலர் விஜய் படம் ரிலிஸாகுமன்றே இப்படத்தையும் ரிலீஸ் செய்வது சரியாக வருமா என கேட்க, அதற்கு படக் குழுவினர் பைரவா படத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட கதை அம்சத்துடன் சிவலிங்க உருவாகியிருப்பதால் வசூல் ரீதியாக எந்த பாதிப்பு வராது என்ற நம்பிக்கையில்தான் படத்தை தைரியமாக பொங்கலன்று வெளியிட திட்டமிட்டுள்ளோம் என படக்குழுவினர் சொல்லியிருக்கிறார்களாம்.


தமன்னாவின் தடாலடி:

மீபத்தில் மும்பையில் நடந்த தேவி படவிழாவில் கலந்துகொண்டு பேசிய தமன்னா நடிகர்களுக்கு இணையான சம்பளை நடிகைகளுக்கும் வழங்கப்பட வேண்டும் என்பதை தான் வரவேற்பதாக கூறியுள்ள அவர் தான் அதிகம் பணம் பெற்றுக்கொண்டு புதுமுக ஹீரோக்களுடன் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடுவதை சிலர் விமர்சிப்பது தேவையில்லாதது என்றதுடன், ஒரு பாடலுக்கு நடனம் ஆடுவது சாதரண விஷாம் அல்ல என்றும் அதிக சம்பளம் கொடுத்ததால் தான் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியதாகவும், இதில் என்ன தவறு இருக்கிறது. எல்லோருமே சம்பளத்திற்காகதானே வேலை செய்கின்றோம். என்று தடாலடியாக கூறியிருக்கிறார்.


விவசாயி என்ற அடையாளத்தையே விரும்பும் நடிகர்:

கூத்துப்பட்டறையில் நடிப்பை பயின்று அதன்வழியாக ஆரண்ய காண்டம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு நுழைந்தவர் குருசோமசுந்தரம். அதன் பிறகு தொடர்ந்து கடல், பாண்டியநாடு, ஜிகர்தண்டா, 49 ஓ, தூங்காவனம், குற்றமே தண்டனை என பல படங்களில் நடித்திருந்தாலும் அவரை எல்லோருக்கும் அடையாளம் தெரிய ஆரம்பித்தது ஜோக்கர் படத்தில் கதையின் நாயகனாக நடித்தப்பிறகுதான். சினிமாவில் நடித்துவந்தாலும் மேடை நாடகம், தெருநாடாகங்களிலும் நடித்து வரும் அவர், படப்பிடிப்பு மற்றும் நாடகம் இல்லாத நாட்களில், அவரது சொந்த ஊரான கனத்தம் பூண்டி கிராமத்திற்கு செல்லும் அவர் அங்கு விவசாய கூலியாக வேலைக்கு செல்கிறார். ஒருநடிகராக இருந்து கொண்டு இப்படி விவசாய கூலியாக வேலைபார்க்கிறீர்களே என சிலர் அவர் கேட்ட போது, தான் வயலையும் வயல் சார்ந்த வாழ்க்கையையுமே நேசிப்பதாகவும், விவசாய கூலியாக செல்வது வெறும் கூலிக்காக மட்டுமல்ல ஆத்ம திருப்திக்காகவே என்று கூறிய அவர், தொடர்ந்து சினிமாவில் பெரிய ஆளாக தான் மாறினாலும் தான் ஒரு விவசாயி என்ற அடையாளத்துடன் வாழ விரும்புவதாகவும், அதற்காக சினிமாவில் நடித்து கொஞ்சம் பணம் சேர்ந்து அதைவைத்து நிலம் வாங்கி விவசாயம் செய்ய தான் முடிவு செய்திருப்பதாகவும் கூறிவருகிறார் குருசோமசுந்தரம்.RSS Movies Shop

This website can secure your private information using a SSL Certificate. Information exchanged with any address beginning with https is encrypted using SSL before transmission.


About us | Register | Font Help | Feedback | Ad Tariff | Faq | Site Map
Copyright © 2010 Noble Broadcasting Corporation Private Limited . Allrights reserved.
Best view under 1024x764 Resoultion.