Dotcom Special
    Weekly Horoscope
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான ஒருவார பலன்கள்.
27-06-2018 முதல் 03-07-2018 வரை
 மேஷம்
(அசுவினி, பரணி, கிருத்திகை முதல் பாதம் வரை)

குடும்பம்:
வருமானம் நல்லபடி இருந்தும் இவ்வாரம் செலவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். அது தங்களுக்கு கவலையை அளிக்கும். கணவன்&மனைவியிடையே சண்டைசச்சரவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் இருவரும் சற்று விட்டுக்கொடுத்து நடந்துகொள்வது பெரிய அளவில் பிரச்சினைகள் எதுவும் ஏற்படாமலிருக்க உதவும். விவாக வயதிலுள்ள மேஷ ராசி அன்பர்களுக்கான வரன் தேடும் முயற்சிகளை இந்த வாரத்தில் மேற்கொள்ள வேண்டாம். சகோதரருடனான உறவுவலுப்பெறும். எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலாகச்செய்வீர்கள். அதன்மூலம் வெற்றியும் கிடைக்கும். குழந்தைகளின் கல்வி முன்னேற்றம் மகிழ்ச்சியைத் தரும்.

உத்தியோகம்:
வேலைக்குச் சென்றுவரும் அன்பர்களுக்கு இந்த வாரம் நன்மைகள் எதுவும் ஏற்பட வாய்ப்பில்லை. தங்கள் வேலையில் மட்டும் கவனத்தைச் செலுத்தி வருவது அவசியம். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்காது.

தொழில்:
தொழில் ரீதியான முக்கிய முடிவுகளை இந்த வாரம் துணிந்து எடுப்பீர்கள். அதனால் சில நன்மைகள் காத்துள்ளன. முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் தருணத்தில் மட்டும் கூடுதல் கவனம் தேவை.

வியாபாரம்:
வியாபாரிகள் சற்று பொறுமையாக இருந்துவர வேண்டிய தருணமிது. முன்னேற்றம் எதுவும் இந்த வாரம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறு இல்லை.

பெண்மணிகள்:
குடும்ப நிர்வாகத்தைக் கவனித்துவரும் பெண்மணிகளுக்கு நிம்மதியில்லாத வாரமிது. வேலைக்குச்சென்றுவரும் பெண்களுக்கும் அதுபோலவே.

அறிவுரை:
தேவையற்ற செலவுகள் செய்ய வேண்டாம்.

அனுகூல தினங்கள்: ஜூன்: 27, 28; ஜூலை : 1, 2
பிரதிகூல தினங்கள்: ஜூன் : 29, 30; ஜூலை : 3

அதிர்ஷ்ட எண்கள்: 3, 9
 ரிஷபம்
(கிருத்திகை 2_ம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2_ம் பாதம் வரை)

குடும்பம்:
ரிஷப ராசியினருக்கு குடும்பப் பொறுப்புகள் வழக்கத்தைவிட சற்று அதிகரிக்கும். காரணம், உறவினர்கள் வந்து செல்வதால் ஆகும். அதனால் உடலில் அசதியும், சோர்வும் ஏற்படக்கூடும். சகோதரர் அல்லது சகோதரியுடன் சண்டைசச்சரவுகள் ஏற்பட்டாலும் அவை உடனுக்குடன் சரியாகிவிடும். கவலைப்பட வேண்டாம். தாங்களே எதிர்பாராத வகையில் வெளியூர் பிரயாணமொன்றை இந்த வாரத்தில் மேற்கொள்ளவேண்டியிருக்கும். அதனால் நன்மைகள் எதுவும் ஏற்பட வாய்ப்பில்லை. இந்த ராசி அன்பர்கள் வாரத்தின் முதல் மூன்று நாட்கள் அனைத்து விஷயங்களிலும் சற்று கவனமாக இருந்துவர வேண்டியது மிக முக்கியம்.

உத்தியோகம்:
அலுவலகத்தில் 'தானுண்டு:தன் வேலையுண்டு' என்றிருந்து வருவது நல்லது. பிறரது சொந்த விஷயத்தில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டாம். அதனால் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

தொழில்:
தொழிலில் வெற்றி பெற வேண்டுமென்றால் நீங்கள் மிகவும் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். யாரிடமிருந்தும் உதவியை எதிர்பார்க்க முடியாது.

வியாபாரம்:
வியாபாரம் சம்பந்தமாகப் பயணங்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கும். அதனால் தங்களுக்கு நன்மைகள் ஏற்படுமா என்பது சந்தேகம்தான். எனவே பொறுமையாக இருந்து வருவது நல்லது.

பெண்மணிகள்:
பெண்மணிகளுக்கு பிரச்சினைகளைத் தரக்கூடிய வாரமாக இது இருக்கக்கூடும். வேலை பார்த்துவரும் பெண்களும் அலுவலகத்தில் முன்னேற்றம் எதையும் இந்த வாரம் எதிர்பார்க்க முடியாது.

அறிவுரை:
அலைச்சலைக் குறைத்துக்கொள்ளுங்கள்.

அனுகூல தினங்கள்: ஜூன் : 30; ஜூலை: 1, 2
பிரதிகூல தினங்கள்: ஜூன் : 27, 28, 29; ஜூலை : 3

அதிர்ஷ்ட எண்கள்: 1, 2
 மிதுனம்
(மிருகசீரிஷம் 3_ம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3_ம் பாதம் வரை)

குடும்பம்:
பணவரவிற்குக் குறைவிராது. என்றோ தங்களிடம் வாங்கியிருந்த கடனை இந்த வாரத்தில் அடைத்து விடுவார்கள். அது மனநிம்மதியை அளிக்கும். தாங்களே எதிர்பாராத வகையில் பணம் வந்து சேரும். வீட்டிற்குத் தேவையான விலையுயர்ந்த பொருளொன்றை இந்த வாரத்தில் வாங்குவீர்கள். அவற்றை பத்திரமாகப் பாதுகாக்க வேண்டியது அவசியம். யாரிடமாவது கடன் வாங்கியிருந்தால் அதை உடனடியாக அடைத்துவிட முயற்சியுங்கள். அதனால் பிரச்சினைகள் ஏற்படவாய்ப்புள்ளது. திருமண வயதில் பெண் அல்லது பிள்ளை இருப்பின் அவர்களுக்கான வரன் தேடும் முயற்சிகளில் வாரத்தின் மத்தியில் ஈடுபட வேண்டாம். காரணம், தவறான வரன்களை நிச்சயித்துவிடக்கூடும் என்பதால்.

உத்தியோகம்:
வேலைக்குச் சென்றுவரும் அன்பர்களுக்கு அலுவலகத்தில் கடின உழைப்பு ஏற்படும். என்றாலும் அதற்கேற்ற சலுகைகள் கிடைக்கப் பெறுவதால் நிம்மதியாக இருக்கலாம். சக ஊழியர்களின் உதவி கிடைக்கும்.

தொழில்:
தொழில் முன்னேற்றம் ஏற்படும். அதில் சிறிதும் சந்தேகமில்லை. நீங்கள் ஒரு விஷயத்தில் மட்டும் கவனமாக இருக்க வேண்டும். தொழில் விஸ்தரிப்புகளுக்காகக் கடன் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும்.

வியாபாரம்:
போட்டிகள் இருக்கும். என்றாலும் அதைச் சமாளிக்க வேண்டிய விதத்தில் சமாளித்துவிடுவீர்கள். சக வியாபாரிகளினால் பிரச்சினைகள் ஏற்படலாம்.

பெண்மணிகள்:
பணவரவு நல்லபடி இருந்தும் மனதில் ஏதோ ஒருவித கவலை உங்களுக்குள் இருந்துவரும். பணிக்குச் சென்று வரும் பெண்கள் சற்று பொறுமையாக இருக்க வேண்டியது அவசியம்.

அறிவுரை:
பொறுமை தேவை.

அனுகூல தினங்கள்: ஜூன் : 27, 28; ஜூலை : 3
பிரதிகூல தினங்கள்: ஜூன் : 29, 30; ஜூலை : 1, 2

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3
 கடகம்
(புனர்பூசம் 4_ம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் வரை)

குடும்பம்:
கடக ராசியினருக்கு பெருமை சேர்க்கக்கூடிய வாரமாக இது இருக்கும். நற்செயல்களில் மனம் ஈடுபடும். குடும்ப ரீதியாகவோ அல்லது தாங்கள் செய்துவரும் தொழில் சம்பந்தமாகவோ முக்கிய முடிவுகள் எதையும் வாரத்தின் பிற்பகுதியில் எடுக்க வேண்டாம். காரணம், அச்சமயத்தில் எடுக்கும் முடிவுகள் சில பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்பதால் ஆகும். அவ்வப்போது உடலில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டு பின்பு சரியாகும். பழைமையான திருக்கோயில் களுக்குச் சென்றுவரும் வாய்ப்பு சிலருக்குக் கிடைக்கும். அதைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். குழந்தைகளின் கல்வி முன்னேற்றம் தங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும்.

உத்தியோகம்:
வேலை பார்க்குமிடத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டியது அவசியம். தங்களின் சொந்த கருத்தை யாரிடமும் கூற வேண்டாம். அதனால் சில பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.

தொழில்:
தொழில் விஸ்தரிப்புக்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளோர் அதில் வெற்றி பெற பகல்&இரவு பாராமல் உழைக்கவேண்டியிருக்கும். அதனால் கடின உழைப்பு இருக்கும்.

வியாபாரம்:
தாங்கள் செய்துவரும் வியாபாரத்தை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கான முயற்சிகளில் சிலர் ஈடுபட்டிருப்பீர்கள். அதில் கடின முயற்சிக்குப் பின்பே வெற்றி கிட்டும்.

பெண்மணிகள்:
பெண்மணிகளுக்கு நன்மை தரக்கூடிய வாரமாக இது இருக்கும். அலுவலகம் சென்றுவரும் பெண்களுக்குச் சாதகமில்லாத வாரமிது.

அறிவுரை:
நேரம் கிடைக்கும்போது சிறிது ஓய்வெடுத்துக்கொள்ளுங்கள்.

அனுகூல தினங்கள்: ஜூன்: 27, 28, 29; ஜூலை : 1
பிரதிகூல தினங்கள்: ஜூன் : 30; ஜூலை : 2, 3

அதிர்ஷ்ட எண்கள்: 2, 6
 சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் முதல் பாதம் வரை)

குடும்பம்:
நிதிநிலைமை நல்லபடி இருக்கும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டு பின்பு சரியாகும். இந்த ராசி அன்பர்கள் சிலர் தங்களிடமுள்ள பழைய வாகனத்தைக் கொடுத்து விட்டு புதிய வாகனமொன்றை இந்த வாரத்தில் வாங்குவீர்கள். வங்கியின் உதவியை நாடியுள்ளவர்களுக்கு இந்த வாரம் அது கிடைக்கக்கூடும். விவாக வயதிலுள்ள இந்த ராசி அன்பர்களுக்கான வரன் தேடும் முயற்சிகளில் ஈடுபடலாம். அதில் வெற்றி கிடைக்கும். கணவன்&மனைவியிடையே ஏற்பட்டிருந்த பிரச்சினைகள் சரியாகி பரஸ்பர அன்னியோன்யம் மேலிடும். நீதிமன்றத்தில் தங்கள் மீது வழக்குகள் ஏதாவது இருப்பின் அதில் சாதகமான போக்கு தென்படும். பெரியோர் ஆசி கிடைக்கும்.

உத்தியோகம்:
அலுவலகத்தில் தங்களுக்குக் கொடுக்கப் பட்டுள்ள ப்ராஜெக்ட்களைக் குறித்த நேரத்தில் முடித்தாக வேண்டுமென்பதற்காக இரவு&பகல் பார்க்காமல் உழைக்க வேண்டியிருக்கும். இருப்பினும் அதற்கேற்ற சலுகைகள் கிடைக்கப் பெறுவீர்கள். அதனால் நிம்மதியாக இருக்கலாம்.

தொழில்:
உற்பத்தி நல்லபடி இருக்கும். லாபம் திருப்திதரும். ஒப்பந்தங்களில் கையெழுத்திடும்போது அதை நன்கு படித்துப் பார்த்து பின்பு கையெழுத்திடவும்.

வியாபாரம்:
வியாபார ரீதியான வெளிநாட்டுப் பயணமொன்று சித்திக்கும். அதன்மூலம் ஆதாயம் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

பெண்மணிகள்:
குடும்ப நிர்வாகத்தை ஏற்றுள்ள பெண்மணிகளுக்கு அனுகூலமான வாரமிது. வேலைக்குச் சென்றுவரும் பெண்களுக்கு அலுவலகத்தில் கடின உழைப்பு மேலோங்கும்.

அறிவுரை:
அனைவரையும் அனுசரித்து நடந்துகொள்ளுங்கள்.

அனுகூல தினங்கள்: ஜூன்: 27, 28, 29; ஜூலை: 2, 3
பிரதிகூல தினங்கள்: ஜூன் : 30; ஜூலை : 1

அதிர்ஷ்ட எண்கள்: 1, 9
 கன்னி
(உத்திரம் 2_ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2_ம் பாதம் வரை)

குடும்பம்:
பொருளாதார நிலைமை திருப்தி தரும். வீண்செலவுகள் ஏற்பட வாய்ப்பில்லை. சகோதரர், சகோதரிகளுடன் விவாதம் செய்வதால் பிரச்சினைகள் ஏற்பட்டு நல்லுறவு பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புள்ளது. எனவே கவனம் தேவை. முக்கிய முடிவுகள் எதையும் இந்த வாரத்தில் எடுக்க வேண்டாம். காரணம், சில சமயங்களில் மனதைரியமில்லாமல் காணப்படுவீர்கள் என்பதால். நெருங்கிய நண்பர் ஒருவரால் மறைமுகமான தொல்லைகள் ஏற்படலாம். திருமண வயதிலுள்ள கன்னி ராசி அன்பர்களுக்கான வரன் தேடும் படலத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு அதில் வெற்றி கிடைக்கும். பிரிந்திருந்த கணவன்&மனைவியர் இவ்வாரம் ஒன்றுசேர்வதற்கான வாய்ப்புள்ளது.

உத்தியோகம்:
அலுவலகத்தில் தங்களுக்குக் கோபம் வரும்படியாக சக ஊழியர்கள் சிலர் நடந்துகொள்வார்கள். அதனால் தங்கள் வேலையில் கவனத்தைச் செலுத்த முடியாது.

தொழில்:
தொழில் சம்பந்தமான முக்கிய முடிவுகள் எதையும் இந்த வாரம் எடுக்க வேண்டாம். தாங்கள் மேற்கொண்டுவரும் முயற்சிகள் அனைத்திலும் தோவியே மிஞ்சும்.

வியாபாரம்:
சக வியாபாரிகளுடன் பிரச்சினைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. எனவே வீண் விவாதங்கள் செய்ய வேண்டாம். மனதில் தேவையற்ற குழப்பங்கள் ஏற்பட்டு வருவதால் வியாபாரத்தில் கவனத்தைச் செலுத்த முடியாது.

பெண்மணிகள்:
குடும்ப நிர்வாகத்தைக் கவனித்துவரும் பெண்மணிகளுக்கு நன்மையளிக்கக்கூடிய வாரமிது. வேலை பார்க்குமிடத்தில் சக ஊழியர்களிடம் கோபப்பட்டுப் பேசி வீண்பகையை வளர்த்துக் கொள்ளாதீர்கள்.

அறிவுரை:
கோபப்பட்டுப் பேசுவதைத் தவிர்த்திடுங்கள்.

அனுகூல தினங்கள்: ஜூன்: 27, 28, 29; ஜூலை : 1, 2
பிரதிகூல தினங்கள்: ஜூன் : 30; ஜூலை : 3

அதிர்ஷ்ட எண்கள்: 3, 7
 துலாம்
(சித்திரை 3_ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3_ம் பாதம் வரை)

குடும்பம்:
துலா ராசி அன்பர்களுக்கு கண் மற்றும் வயிறு சம்பந்தமான உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே கவனம் தேவை. பணவரவு நல்லபடி இருக்கும். அதனால் மருத்துவச்செலவுகள் ஏற்பட்டாலும் தங்களால் அதைச் சமாளித்து விட முடியும். ஏற்கெனவே அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்கள் மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்துகொள்வது நல்லது. இந்த ராசியினர் சிலர் தற்போதுள்ள வீட்டிலிருந்து வேறொரு வசதியான வீட்டிற்குக் குடிபெயர வாய்ப்புள்ளது. புதிய வீடு அல்லது நிலம் வாங்குவதற்கும் சாதகமான வாரமிது. திருமண வயதில் மகன் அல்லது மகள் இருந்தால் அவர்களுக்கான வரன் தேடும் முயற்சிகளை இந்த வாரம் மேற்கொள்ளலாம்.

உத்தியோகம்:
விற்பனைப் பிரிவில் பணியாற்றும் அன்பர்களுக்கு வழக்கத்தைவிட உழைப்பு சற்று கூடுதலாக இருக்கும். இருப்பினும் அதற்கேற்ற சலுகைகள் கிடைப்பது மனநிறைவை அளிக்கும்.

தொழில்:
தொழில் ரீதியான வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கும். அதனால் ஆதாயமே உங்களுக்கு. சக பாகஸ்தர்களினால் மறைமுகமான தொல்லைகள் இருக்கலாம். எனவே கவனம் தேவை.

வியாபாரம்:
விற்பனையும், வருமானமும் நல்லபடி இருக்கும். வாடிக்கையாளர்களின் வருகை அதிகரிக்கும். நிலுவையிலுள்ள பாக்கிப் பணம் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது.

பெண்மணிகள்:
பணவரவு நல்லபடி இருப்பதால் பெண்மணிகளுக்கு ஆதாயமான வாரமிது. வேலைக்குச் சென்றுவரும் பெண்கள் சில சலுகைகளை இந்த வாரம் எதிர்பார்க்கலாம்.

அறிவுரை:
எதிலும் அலட்சியம் வேண்டாம்.

அனுகூல தினங்கள்: ஜூன் : 27, 28; ஜூலை : 1
பிரதிகூல தினங்கள்: ஜூன் : 29, 30; ஜூலை: 2, 3

அதிர்ஷ்ட எண்கள்: 2, 8
 விருச்சிகம்
(விசாகம் 4_ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை வரை)

குடும்பம்:
விருச்சிக ராசி அன்பர்களுக்கு மனக் குழப்பமும், சஞ்சலமும் ஏற்படக்கூடும். அதனால் தாங்கள் பார்த்துவரும் அன்றாட வேலைகளில் தொய்வுநிலை காணப்படும். அவ்வப்போது ஏற்படும் உடல் பாதிப்பினால் கவலை கொள்வீர்கள். கண்ட நேரங்களில், கண்ட இடங்களில் உண்பதைத்தவிர்ப்பது நல்லது. புதிய ஆடை, ஆபரணச் சேர்க்கைக்கான வாய்ப்புண்டு. சகோதரர்களால் ஆதாயம் கிடைக்கப் பெறுவீர்கள். தாங்கள் மேற்கொண்டுவரும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். கணவன்&மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து நடந்துகொள்வது பிரச்சினைகள் ஏற்படாமலிருக்க உதவும். திருமண முயற்சிகள் கைகூடும்.

உத்தியோகம்:
வேலைக்குச் சென்றுவரும் அன்பர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். அதிலும் முக்கியமாகப் பண விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை. சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைப்பது கடினம்.

தொழில்:
தொழிலதிபர்களுக்கு கடின உழைப்பு ஏற்படக்கூடும். தங்கள் இலக்கை எட்ட இரவு&பகல் பாராமல் கஷ்டப்பட வேண்டியிருக்கும். தாங்கள் மேற்கொண்டுவரும் அத்தகைய கடின முயற்சிக்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும்.

வியாபாரம்:
குழப்பமான சூழ்நிலை காணப்படுவதால் வியாபார ரீதியான முக்கிய முடிவுகள் எதையும் இந்த வாரம் எடுக்க வேண்டாம். காரணம், சில தருணங்களில் தாங்கள் எடுக்கும் முடிவுகள் பிறருக்குச் சாதகமாக அமைந்துவிடக்கூடும் என்பதால். எனவே கவனம் தேவை.

பெண்மணிகள்:
குடும்ப நிர்வாகத்தை ஏற்றுள்ள பெண்மணிகளுக்கு குழப்பமான வாரமிது. உத்தியோகம் பார்த்துவரும் பெண்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்.

அறிவுரை:
மனக் கவலைகளை அகற்றிடுங்கள்.

அனுகூல தினங்கள்: ஜூன் : 30; ஜூலை : 3
பிரதிகூல தினங்கள்: ஜூன்: 27, 28, 29; ஜூலை: 1, 2

அதிர்ஷ்ட எண்கள்: 3, 9
 தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1_ம் பாதம் வரை)

குடும்பம்:
வருமானம் நல்லபடி இருந்தும் எதிர்பாராத செலவுகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறு உள்ளதை இவ்வார கிரகநிலைகள் எடுத்துக்காட்டுகின்றன. குழந்தைகளாலும் செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அவர்கள் விரும்பி கேட்கும் பொருட்களை வாங்கிக் கொடுப்பீர்கள். திருமண வயதில் மகன் அல்லது மகள் இருப்பின் அவர்களுக்கான வரன் தேடும் முயற்சிகளில் இந்த வாரம் ஈடுபடலாம். அதில் வெற்றி கிடைக்கும். கணவன்&மனைவியிடையே சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டு அதனால் அன்னியோன்யம் குறைவதற்கான சாத்தியக்கூறு உள்ளது. எனவே கவனம் தேவை. நீதிமன்றத்தில் தங்கள் மீதுள்ள வழக்கின் தன்மை தங்களுக்குச் சாதகமாக மாறும்.

உத்தியோகம்:
மேலதிகாரியிடம் நற்பெயர் கிடைக்கும். அதன் காரணமாக பதவி உயர்வையோ அல்லது ஊதிய உயர்வையோ இந்த வாரத்தில் எதிர்பார்க்கலாம். சக ஊழியர்கள் தங்களுக்கு உதவ முன்வருவார்கள்.

தொழில்:
உற்பத்தியும், வருமானமும் திருப்திகரமாக இருக்கும். சிலருக்கு வெளிநாட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாவதற்கு வாய்ப்புள்ளது. அதன்மூலம் ஏற்றம் காண்பீர்கள்.

வியாபாரம்:
வியாபாரிகளுக்கு கடின உழைப்பு ஏற்படக்கூடிய வாரமாக இது இருக்கும். அது மனக் கவலையை ஏற்படுத்தும். சக வியாபாரிகளுடன் நல்லிணக்கம் ஏற்படும்.

பெண்மணிகள்:
குடும்ப நிர்வாகத்தைக் கவனித்துவரும் பெண்மணிகளுக்கு பிரச்சினைகள் ஏற்படக்கூடும். பணிக்குச்சென்றுவரும் பெண்கள் பதவி உயர்வொன்றை இந்த வாரம் எதிர்பார்க்கலாம்.

அறிவுரை:
அனாவசிய செலவுகள் செய்ய வேண்டாம்.

அனுகூல தினங்கள்: ஜூன் : 30; ஜூலை : 2, 3
பிரதிகூல தினங்கள்: ஜூன் : 27, 28, 29; ஜூலை : 1

அதிர்ஷ்ட எண்கள்: 1, 4
 மகரம்
(உத்திராடம் 2_ம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2_ம் பாதம் வரை)

குடும்பம்:
குடும்ப வருமானம் நல்லபடி இருக்கும். செலவுகள் ஏற்பட்டாலும் அவை சுபச்செலவுகளாக இருக்கக்கூடும் என்பதால் அதைப் பற்றி கவலைப்பட வேண்டாம். பொன், பொருள் சேர்வதற்கான வாய்ப்புள்ளதை சம்பந்தப்பட்ட கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன. தாங்கள் மேற்கொண்டுவரும் முயற்சிகளில் சற்று இழுபறிநிலை நீடித்து அதன் பின்பே அதில் வெற்றி கிடைக்கும். அதனால் பொறுமையிழந்துவிடாதீர்கள். சகோதரர்களுடன் சண்டைசச்சரவுகள் உண்டாகும். அது தங்கள் மனநிம்மதியைப் பாதிக்கும். பிரிந்திருந்த கணவன்& மனைவியர் இவ்வாரம் ஒன்றுசேர்வார்கள்.

உத்தியோகம்:
தற்போது பார்த்துவரும் வேலை நிரந்தரம் இல்லையே என மனம் வருந்தி வந்தவர்களுக்கு அந்நிலை மாறும். கவலைப்படாதீர்கள். மேலதிகாரி ஒருவர் தங்களுக்கு ஆதரவாக இருந்து வருவது ஓரளவு ஆறுதலை அளிக்கும்.

தொழில்:
தொழில் ரீதியான வெளிநாட்டுப் பயணமொன்றை மேற்கொள்ள வேண்டியிருக்கும். அதன்மூலம் புதிய ஆர்டர்கள் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது.

வியாபாரம்:
விற்பனை நல்லபடி நடந்துவரும். லாபம் திருப்தி தரும். வாடிக்கையாளர்களின் வருகை உற்சாகத்தைத்தரும். புதிய முயற்சிகள் கைகொடுக்கும். கொடுக்கல்&வாங்கல் சுமுகமாக நடைபெறும்.

பெண்மணிகள்:
பெண்மணிகளுக்கு மகிழ்ச்சிகரமான வாரமிது என்றே சொல்ல வேண்டும். உத்தியோகம் பார்த்து வரும் பெண்களுக்கு சாதாரண வாரமிது.

அறிவுரை:
நிதானம் தேவை.

அனுகூல தினங்கள்: ஜூன்: 27, 28; ஜூலை : 1, 2
பிரதிகூல தினங்கள்: ஜூன் : 29, 30; ஜூலை : 3

அதிர்ஷ்ட எண்கள்: 2, 8
 கும்பம்
(அவிட்டம் 3_ம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3_ம் பாதம் வரை)

குடும்பம்:
பொருளாதார நிலை நல்லபடி இருக்கும். செலவுகள் அனைத்தும் கட்டுக்கடங்கியிருக்கும். குடும்பச்சூழ்நிலை மனநிம்மதியைத் தரும். கும்ப ராசியினருக்கு வசதி வாய்ப்புகள் அதிகரிக்கக்கூடிய வாரமாக இது இருக்கக்கூடும். வீட்டிலுள்ள அனைவரும் தங்கள் ஆலோசனையைக் கேட்டு அதன்படி நடப்பார்கள். சகோதரர், சகோதரியுடனான உறவு வலுப்பெறும். விவாக வயதிலுள்ள இந்த ராசி ஆண்கள் மற்றும் பெண்களுக்கு நல்ல வரன் அமைந்து திருமணத்திற்கான தேதி முடிவு செய்யப்படும். அது மகிழ்ச்சியை அளிக்கும். கணவன்&மனைவியிடையே அன்னியோன்யம் மேலிடும்.

உத்தியோகம்:
வேலைக்குச் சென்றுவரும் அன்பர்கள் சிலருக்கு அலுவலகத்தில் முக்கிய பொறுப்புகள் வழங்கப்படலாம். அதனால் வழக்கத்தைவிட உழைப்பு சற்று கூடுதலாக இருக்கும். அதற்கேற்ற ஊதிய உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. கவலைப்பட வேண்டாம்.

தொழில்:
நிதிநிறுவனங்களிடமிருந்து எதிர்பார்த்திருந்த உதவி எளிதில் கிடைக்கும். அதனால் தாங்கள் மேற்கொண்டு வரும் முயற்சிகளில் வெற்றி உண்டாகும். சக பாகஸ்தர்களுடன் பிரச்சினைகள் ஏற்பட்டிருந்தால் அது சரியாகும்.

வியாபாரம்:
வியாபாரிகளுக்கு நன்மையளிக்கக்கூடிய வாரமாக இது இருக்கும். சென்றவாரம் ஏற்பட்டிருந்த அசாதாரண சூழ்நிலையிலிருந்து முற்றிலுமாக விடுபட்டுவிடுவீர்கள்.

பெண்மணிகள்:
குடும்பப் பொறுப்புகள் அதிகரிப்பதால் சற்று கடின உழைப்பு இருக்கக்கூடும். வேலை பார்த்துவரும் பெண்களுக்கு அனுகூலமான வாரம்.

அறிவுரை:
ஓய்வு மிகவும் அவசியம்.

அனுகூல தினங்கள்: ஜூன்: 29, 30; ஜூலை : 2, 3
பிரதிகூல தினங்கள்: ஜூன் : 27, 28; ஜூலை : 1

அதிர்ஷ்ட எண்கள்: 6, 9
 மீனம்
(பூரட்டாதி 4_ம் பாதம் முதல், உத்திரட்டாதி, ரேவதி வரை)

குடும்பம்:
மீன ராசியினருக்கு நன்மையளிக்கக்கூடிய வாரமிது என்றே சொல்ல வேண்டும். தர்ம காரியங்களில் மனம் ஈடுபடும். திருக்கோயில் திருப்பணிக்காகத் தங்களால் இயன்ற உதவியைப் பணமாகவோ அல்லது பொருட்களாகவோ கொடுத்து மகிழ்வீர்கள். ஆரோக்கியத்தில் மட்டும் சற்று கவனமாக இருந்துவர வேண்டிய தருணமிது. சிறுசிறு உடல் உபாதைகள் ஏற்பட்டு அதனால் மருத்துவச் செலவுகள் உண்டாகும். பணவரவு நல்லபடி இருப்பதால் அதைச் சமாளித்து விடுவீர்கள். விவாக முயற்சிகள் கைகூடும். வீட்டில் சுபநிகழ்ச்சி கள் நடைபெறுவதற்கான சாத்தியக்கூறு உள்ளது.

உத்தியோகம்:
புதிய வேலைக்கு முயற்சித்து காத்திருக்கும் அன்பர்களுக்கு இவ்வாரம் நற்செய்தி காத்துள்ளது. ஏற்கெனவே பணியிலிருந்து வருபவர்களுக்கும் அலுவலகத்திலிருந்து வரக்கூடிய செய்தியொன்று மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.

தொழில்:
தொழிலதிபர்களுக்கு சிறப்பான வாரமிது. எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றியைத் தேடித்தரும். சக பாகஸ்தர்களுடனான பிரச்சினைகள் தீர்ந்து சுமுக உறவு மேலிடும். அதனால் நிம்மதியாக இருக்கலாம்.

வியாபாரம்:
வியாபார ரீதியான வெளிநாட்டுப் பயணமொன்று சித்திக்கும். அதன்மூலம் ஆதயமடைவீர்கள். புதிய முயற்சிகள் கைகொடுக்கும். கொடுக்கல்&வாங்கல் சுமுகமாக நடைபெற்றுவரும்.

பெண்மணிகள்:
பெண்மணிகளுக்கு குடும்ப நிர்வாகம் செய்வதில் எவ்வித பிரச்சினையும் ஏற்படாது. உத்தியோகம் பார்த்துவரும் பெண்களுக்கு சந்தோஷமான வாரமிது.

அறிவுரை:
சேமிப்பிற்கு சிறிது முயற்சியுங்கள்.

அனுகூல தினங்கள்: ஜூன் : 27, 28; ஜூலை : 1
பிரதிகூல தினங்கள்: ஜூன் : 29, 30; ஜூலை : 2, 3

அதிர்ஷ்ட எண்கள்: 3, 6

RSS Movies Shop

This website can secure your private information using a SSL Certificate. Information exchanged with any address beginning with https is encrypted using SSL before transmission.


About us | Register | Font Help | Feedback | Ad Tariff | Faq | Site Map
Copyright © 2010 Noble Broadcasting Corporation Private Limited . Allrights reserved.
Best view under 1024x764 Resoultion.