Email
Password:
Remember Me  
Forgot Password   New Registration
About us | Register | Plan Details |Font Help| Feedback| Ad Tariff | Faq | Site Map|RSSimageRss  
News Headline
Dotcom Special
    Weekly Horoscope
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான ஒருவார பலன்கள்.
18-10-2017 முதல் 24-10-2017 வரை
 மேஷம்
(அசுவினி, பரணி, கிருத்திகை முதல் பாதம் வரை)

குடும்பம்:
இந்த ராசி அன்பர்கள் வாரத்தின் மத்தியில் சற்று கவனமாக இருந்துவர வேண்டியது அவசியம். விலையுயர்ந்த பொருட்களைக் கையாளும்போது கூடுதல் கவனம் தேவை. பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். செலவுகள் அனைத்தும் கட்டுக்கடங்கியிருக்கும். திருமண வயதில் மகன் அல்லது மகள் இருப்பின் அவர்களுக்கான வரன் தேடும் முயற்சிகளை வாரத்தின் பிற்பகுதியில் மேற்கொள்ளலாம். கணவன்-மனைவியிடையே சண்டைசச்சரவுகள் ஏற்பட்டாலும் அவை உடனுக்குடன் சரியாகிவிடும். நீதிமன்ற வழக்குகள் தங்களுக்குச் சாதகமாக மாறும்.

உத்தியோகம்:
வேலைக்குச் சென்றுவரும் அன்பர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள வேலையில் மட்டும் கவனத்தைச் செலுத்தி வரவும். சக ஊழியர்களின் அந்தரங்க விஜயத்தில் தலையிட வேண்டாம்.

தொழில்:
தொழில் அபிவிருத்திக்கான திட்டங்களில் ஈடுபடும் போது கவனம் தேவை. எதிலும் அலட்சியம் வேண்டாம். சக பாகஸ்தர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பின்பு சரியாகும்.

வியாபாரம்:
வியாபாரம் நல்லபடி இருந்தும் எதிர்பார்த்த லாபம் கைக்குக் கிடைக்காததால் மனநிம்மதியிழந்து காணப்படுவீர்கள். புதிய முயற்சிகளை மேற்கொள்ளும்போது கவனம் அவசியம்.

பெண்மணிகள்:
பணவசதி திருப்தி தருவதால் பெண்மணிகளுக்கு குடும்ப நிர்வாகம் செய்வதில் பிரச்சினை இராது. அலுவலகம் சென்றுவரும் பெண்கள் எதிலும் கவனமாக இருந்துவர வேண்டியது அவசியம்.

அறிவுரை:
பொறுமை, நிதானம் தேவை.

அனுகூல தினங்கள்: அக்: 18, 19, 20
பிரதிகூல தினங்கள்: அக்: 21, 22, 23, 24

அதிர்ஷ்ட எண்கள்: 5, 6
 ரிஷபம்
(கிருத்திகை 2_ம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2_ம் பாதம் வரை)

குடும்பம்:
நிதிநிலை நல்லபடி இருக்கும். வீண் செலவுகள் எதுவும் ஏற்பட வாய்ப்பில்லை. குடும்ப ரீதியான சில முக்கிய முடிவுகளை இவ்வாரம் துணிந்து எடுப்பீர்கள். வெகு நாட்களுக்கு முன்பு சந்தித்த நண்பர் ஒருவரை இப்போது சந்திப்பீர்கள். குழந்தைகள் தங்கள் பேச்சைக் கேட்டு நடந்துகொள்ளாதது மனவருத்தத்தைத் தரும். பண்டிகை நாளையொட்டி பெற்றோர், பெரியோரிடம் ஆசி பெறுவீர்கள். முக்கிய பணியின் காரணமாக வெளியிடங்களுக்குச் செல்லும் போது கோபுர தரிசனம் கிடைக்கக்கூடும்.

உத்தியோகம்:
புதிய வேலைக்கு விண்ணப்பித்து காத்திருப்பவர்களுக்கு நேர்காணலுக்கான அழைப்புவரும். அதில் கலந்துகொள்வதற்காக வெளியூர் பிரயாணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும்.

தொழில்:
சக பாகஸ்தர்களின் பேச்கைக் கேட்டு முக்கிய முடிவுகள் எதையும் கலந்தாலோசிக்காமல் எடுக்கவேண்டாம். அவசர முடிவுகள் பாதிப்பை ஏற்படுத்திவிடக்கூடும் என்பதால்.

வியாபாரம்:
போட்டிகள் இருப்பினும் அவற்றை திறம்பட கையாள்வீர்கள். விற்பனை நல்லபடி இருந்துவரும். வருமானத்திற்குக் குறைவிராது. புதிய முயற்சிகள் வெற்றியைத் தேடித்தரும். கொடுக்கல்-வாங்கல் சுமுகமாக இருக்கும்.

பெண்மணிகள்:
பெண்மணிகளுக்கு அனுகூலமான வாரமிது என்றே சொல்லவேண்டும். வேலைக்குச் சென்றுவரும் பெண்களுக்கு அலுவலகச் சூழ்நிலை திருப்திகரமாக இருக்கும். வேலை மாற்றம் வேண்டி விண்ணப்பித்தவர்களுக்கு வேலை கிடைக்கும். அது சந்தோஷத்தைத் தரும்.

அறிவுரை:
சேமிப்பிற்கு சிறிது முயற்சியுங்கள்.

அனுகூல தினங்கள்: அக்: 18, 19, 20, 21
பிரதிகூல தினங்கள்: அக்: 22, 23, 24

அதிர்ஷ்ட எண்கள்: 1, 9
 மிதுனம்
(மிருகசீரிஷம் 3_ம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3_ம் பாதம் வரை)

குடும்பம்:
வருமானத்திற்குக் குறைவிராது. குடும்ப உறுப்பினர்களிடையே மோதல் போக்கு ஏற்பட்டு சண்டை சச்சரவுகள் ஏற்பட்டிருந்தால் சரியாகிவிடும். தாயாரின் உடல்நிலையில் பாதிப்புகள் ஏற்பட்டு அதனால் மருத்துவச் செலவுகள் உண்டாகும். சிறு உபாதையானாலும் மருத்துவரை அணுகிச் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யுங்கள். புதிய வீடு அல்லது நிலம் வாங்குவதற்குச் சாதகமாக அமைந்துள்ளன இவ்வார கிரகநிலைகள். வங்கிக் கடன் பெற விண்ணப்பித்திருந்தால் இப்போது கிடைப்பதற்கு சிறந்த வாய்ப்புள்ளது. திருமண முயற்சிகள் கைகூடும். பொன், பொருள் சேர்க்கைக்கு வாய்ப்புண்டு. நீதிமன்ற வழக்குகள் தங்களுக்குச் சாதகமாக மாறும்.

உத்தியோகம்:
வேலை பார்த்துவரும் இடத்தில் சக ஊழியர்களினால் பிரச்சினைகள் எழக்கூடும். எனவே கவனம் தேவை. உயர்பதவியிலிருந்து வருபவர்கள் ஜாக்கிரதையாக இருந்துவர வேண்டியது அவசியம்.

தொழில்:
தொழிலதிபர்களுக்கு இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகள் விலகும். அதனால் தாங்கள் செய்துவரும் தொழிலில் கவனத்தைச் செலுத்தமுடியும். வருமானம் மனநிறைவை அளிக்கும்.

வியாபாரம்:
விற்பனையை அதிகரிக்க வேண்டுமென்பதற்காகப் பாடுபட்டு உழைக்க வேண்டியிருக்கும். கடின உழைப்பினால் அவ்வப்போது உடலில் அசதியும், சோர்வும் காணப்படும். நேரம் கிடைக்கும்போது ஓய்வு அவசியம்.

பெண்மணிகள்:
எதிர்பாராத வகையில் செலவுகள் ஏற்படுவதால் பெண்மணிகளுக்கு அதிருப்தியான வாரமிது என்றே சொல்லவேண்டும். வேலை பார்த்துவரும் பெண்களுக்கு முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பில்லை.

அறிவுரை:
விட்டுக்கொடுத்து நடந்துகொள்ளுங்கள்.

அனுகூல தினங்கள்: அக்: 22, 23, 24
பிரதிகூல தினங்கள்: அக்: 18, 19, 20, 21

அதிர்ஷ்ட எண்கள்: 2, 4
 கடகம்
(புனர்பூசம் 4_ம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் வரை)

குடும்பம்:
கடக ராசி அன்பர்களுக்கு குடும்பச் சூழ்நிலை மனநிம்மதியைத் தரும். பண வசதிக்குக் குறைவிராது. வீண் செலவுகள் எதுவும் இந்த வாரம் இராது. சகோதரர் அல்லது சகோதரியின் குடும்பத்துடன் சுற்றுலா சென்று வருவீர்கள். அது மகிழ்ச்சியை அளிக்கும். திருமண வயதிலுள்ள கடக ராசி அன்பர்களுக்கு மனதிற்குப் பிடித்த வரன் அமையும். தெய்வபக்தி அதிகரித்து காணப்படும். பழைய கடன்கள் இருந்தால் அவற்றை அடைத்து மனநிம்மதியடைவீர்கள். நீதிமன்ற வழக்குகள் தங்களுக்குச் சாதகமாக மாறும்.

உத்தியோகம்:
வேலைக்குச் சென்றுவரும் அன்பர்களுக்கு இதுநாள்வரை மறுக்கப்பட்டு வந்த பதவி உயர்வு, ஊதிய உயர்வு, இதர சலுகைகள் போன்றவை கிடைப்பதற்கு சிறந்த வாய்ப்புள்ளது. மேலதிகாரியின் அன்பையும், ஆதரவையும் பெறுவீர்கள்.

தொழில்:
தொழில் அபிவிருத்திக்கான திட்டங்களில் அவசரப்பட வேண்டாம். ஏனெனில் சில சமயங்களில் தவறான முடிவுகளை நீங்கள் எடுத்துவிடக்கூடும் என்பதால்.

வியாபாரம்:
விற்பனை அதிகரிக்கவில்லையே என வருத்தப்பட வேண்டாம். எதிர்பார்த்த லாபம் கைக்குக் கிடைக்கும். தேவைப்பட்டால் புதிய முயற்சிகளை நீங்கள் மேற்கொள்ளலாம். அதற்கான உதவி கிடைக்கும்.

பெண்மணிகள்:
குடும்ப நிர்வாகத்தைக் கவனித்துவரும் பெண்மணிகளுக்குச் சாதகமான வாரமிது. வேலை பார்த்துவரும் பெண்களுக்கும் திருப்திகரமான வாரம்.

அறிவுரை:
பொறுமையையும், நிதானத்தையும் கடைப்பிடிப்பது அவசியம்.

அனுகூல தினங்கள்: அக்: 21, 22, 23
பிரதிகூல தினங்கள்: அக்: 18, 19, 20, 24

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5
 சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் முதல் பாதம் வரை)

குடும்பம்:
பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். செலவுகள் ஏற்பட்டாலும் தங்களால் அதைச் சமாளித்துவிட முடியும். வீட்டிற்குத் தேவையான விலையுயர்ந்த பொருட்கள் மற்றும் ஆபரணங்கள் வாங்குவதற்குச் சாதகமான வாரமிது. வெளியூரிலுள்ள தங்கள் மகன் அல்லது மகள் வீட்டிற்குச் சென்றுவர வாய்ப்புள்ளது. அதனால் பிரயாணங்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கும். பண்டிகை நாளையொட்டி சிலர் தங்களின் சொந்த -ஊருக்குச் சென்று வருவீர்கள்.

உத்தியோகம்:
வேலைக்குச் சென்றுவரும் இந்த ராசி அன்பர்களுக்கு பிரச்சினையில்லாத வாரமிது. எதிர்பார்த்த பதவி உயர்வு ஒன்று தங்கு தடையின்றிக் கிடைக்கும். விற்பனைப் பிரிவில் பணியாற்றி வருபவர்கள் வெளியூர் சென்றுவர வேண்டியிருக்கும்.

தொழில்:
உற்பத்தி நல்லபடி இருக்கும். வருமானம் திருப்தி தரும். நிதிநிறுவனங்களிடமிருந்து எதிர்பார்த்திருந்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். சக பாகஸ்தர்களுடன் நல்லிணக்கம் ஏற்படும்.

வியாபாரம்:
வியாபாரத்தில் அவ்வப்போது சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டு பின்பு சரியாகும். அதை நினைத்து மனம் வருந்தவேண்டாம். சக வியாபாரிகள் தங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.

பெண்மணிகள்:
குடும்ப நிர்வாகத்தை ஏற்றுள்ள பெண்மணிகளுக்கு குதூகலமான வாரமிது என்றே சொல்லவேண்டும். வேலை பார்த்துவரும் பெண்கள் அலுவலகத்தில் சலுகைகளை இந்த வாரம் எதிர்பார்க்கலாம்.

அறிவுரை:
ஆடம்பரச் செலவுகள் செய்யவேண்டாம்.

அனுகூல தினங்கள்: அக்: 21, 22, 23, 24
பிரதிகூல தினங்கள்: அக்: 18, 19, 20

அதிர்ஷ்ட எண்கள்: 7, 9
 கன்னி
(உத்திரம் 2_ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2_ம் பாதம் வரை)

குடும்பம்:
கன்னி ராசி அன்பர்கள் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருந்துவர வேண்டிய தருணமிது. உடல் உஷ்ணம், அசதி மற்றும் சோர்வு ஆகியவை உண்டாகும். சிறுசிறு உபாதைகள் ஏற்பட்டு மருத்துவச் செலவுகளினால் பணம் விரயமாகும். வருமானத்தில் பாதிப்பு இராது. குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடத்துவதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும். தங்கம் மற்றும் வெள்ளியிலான ஆபரணங்கள் வாங்குவதற்குச் சாதகமான வாரமிது.

உத்தியோகம்:
வேலை பார்த்துவரும் அன்பர்களுக்கு அலுவலகத்தில் கடின உழைப்பு ஏற்படக்கூடும். என்றாலும் அதற்கேற்ற சலுகைகள் கிடைப்பதால் பிரச்சினையில்லாத வாரமிது உங்களுக்கு.

தொழில்:
தொழிலில் ஓரளவு முன்னேற்றத்தை நீங்கள் எதிர்பார்க்கலாம். என்றாலும் கடின உழைப்பு இருக்கத்தான் செய்யும். முக்கிய முடிவுகள் எடுக்கும்போது தீர ஆராய்ந்து பார்ப்பது மிகவும் அவசியம்.

வியாபாரம்:
வியாபாரிகளுக்கு நன்மையளிக்கக்கூடிய வாரமாக இது இருக்கும். புதிய முயற்சிகள் கைகொடுக்கும். சிலர் தற்போதிருந்துவரும் இடத்திலிருந்து வேறொரு இடத்திற்கு தங்கள் வியாபாரத்தை மாற்றுவீர்கள்.

பெண்மணிகள்:
பணவரவு நல்லபடி இருப்பதால் பெண்மணிகளுக்கு குடும்ப நிர்வாகம் செய்வதில் பிரச்சினைகள் இராது. வேலை பார்த்துவரும் பெண்களுக்கு நன்மையளிக்கக்கூடிய வாரமாக இது இருக்கும்.

அறிவுரை:
உடல்நலனில் கவனம் தேவை.

அனுகூல தினங்கள்: அக்: 22, 23, 24
பிரதிகூல தினங்கள்: அக்: 18, 19, 20, 21

அதிர்ஷ்ட எண்கள்: 4, 6
 துலாம்
(சித்திரை 3_ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3_ம் பாதம் வரை)

குடும்பம்:
துலா ராசி அன்பர்கள் யாரேனும் நிரந்தர நோயினால் அவதிப்பட்டு வந்தால் அவர்களுக்கு படிப்படியாக குணமேற்படும். மருந்து, மாத்திரைகளைத் தவறாது எடுத்துக்கொள்வது நல்லது. வருமானம் நல்லபடி இருந்தும் எதிர்பாராத வகையில் செலவினங்களை நீங்கள் சந்திக்க வேண்டியிருக்கும். புதிய ஆடை, ஆபரணச் சேர்க்கைக்கு வாய்ப்புண்டு. குடும்பத்தில் சுபிட்சம் நிலவும். திருமண வயதிலுள்ள துலா ராசி அன்பர்களுக்கான வரன் தேடும் முயற்சிகளை மேற்கொள்ளலாம். அதில் வெற்றி கிடைக்கும். நீதிமன்ற வழக்குகளில் முன்னேற்றம் ஏற்படக்கூடும்.

உத்தியோகம்:
மேலதிகாரியிடம் நற்பெயர் கிடைக்கும். அதன் காரணமாக பதவி உயர்வு, ஊதிய உயர்வு, இதர சலுகைகள் போன்றவற்றை எதிர்பார்க்கலாம். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

தொழில்:
ஏற்றுமதி-இறக்குமதித் துறையினருக்கு நன்மையளிக்கக்கூடிய வாரமிது. எதிர்பார்த்த வருமானம் குறையின்றிக் கிடைக்கும். புதிய விஸ்தரிப்புத் திட்டத்திற்கான முயற்சிகளை மேற்கொள்ளலாம்.

வியாபாரம்:
புதிய முயற்சிகளில் ஈடுபட்டுள்ள வியாபாரிகள் உடனடியாக பெரிய அளவில் முன்னேற்றம் எதையும் எதிர்பார்க்க முடியாது. பொறுமையாக இருந்து வரவும்.

பெண்மணிகள்:
செலவுகள் அதிகரிப்பதால் பெண்மணிகளுக்கு நிம்மதியில்லாத வாரமாக இது இருக்கும். வேலைக்குச் சென்றுவரும் பெண்களுக்கு அலுவலகச் சூழ்நிலை திருப்திதரும்.

அறிவுரை:
நேரம் கிடைக்கும்போது ஓய்வெடுத்துக்கொள்ளுங்கள்.

அனுகூல தினங்கள்: அக்: 18, 19, 20
பிரதிகூல தினங்கள்: அக்: 21, 22, 23, 24

அதிர்ஷ்ட எண்கள்: 1, 4
 விருச்சிகம்
(விசாகம் 4_ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை வரை)

குடும்பம்:
பொருளாதார நிலை திருப்தி தரும். என்றாலும் எதிர்பாராத செலவினங்கள் ஏற்பட்டு மனதினைப் பாதிக்கக்கூடும். குழந்தைகள், பெண்களாலும் இவ்வாரம் செலவுகள் ஏற்படக்கூடும். சகோதரர்கள் தங்களுக்கு ஆதரவாக இருந்து வருவது சந்தோஜத்தை அளிக்கும். நண்பர்களின் வருகை உற்சாகத்தை ஏற்படுத்தும். அவர்களுடன் விருந்து, கேளிக்கைகளுக்குச் சென்று வருவீர்கள். திருமண வயதில் மகனோ அல்லது மகளோ இருப்பின் அவர்களுக்கான வரன்தேடும் படலத்தில் இந்த வாரம் இறங்கலாம். கணவன்- மனைவியிடையே பிரச்சினைகள் ஏற்படாது.

உத்தியோகம்:
வேலைக்குச் சென்றுவரும் அன்பர்களுக்கு நன்மையளிக்கக்கூடிய வாரமாக இது இருக்கும். இதுநாள்வரை தடைபட்டிருந்த ஊதிய உயர்வு, இதர சலுகைகள் போன்றவை கிடைக்கக்கூடும். வேலை தேடிக்கொண்டிருப் பவர்களுக்கு மனதிற்குப் பிடித்த வேலை கிடைக்கும்.

தொழில்:
உற்பத்தி நல்லபடி இருக்கும். லாபம் திருப்திதரும். ஏற்றுமதி-இறக்குமதித் துறையினரும் அமோக வளர்ச்சியைக் காண்பீர்கள். மொத்தத்தில் மகிழ்ச்சிக்குக் குறைவிராது.

வியாபாரம்:
வியாபாரிகளுக்கு பிரச்சினையில்லாத வாரமிது என்றே சொல்லவேண்டும். கொடுக்கல்-வாங்கலில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் சரியாகும். அது மனநிம்மதியைத்தரும்.

பெண்மணிகள்:
குடும்ப நிர்வாகத்தை ஏற்றுள்ள பெண்மணிகளுக்கு சுமாரான வாரமிது. வேலைக்குச் சென்றுவரும் பெண்கள் சிறு ஊதிய உயர்வு ஒன்றை எதிர்பார்க்கலாம்.

அறிவுரை:
தேவையற்ற செலவுகளைக் குறைத்துக்கொள்ளுங்கள்.

அனுகூல தினங்கள்: அக்: 22, 23, 24
பிரதிகூல தினங்கள்: அக்: 18, 19, 20, 21

அதிர்ஷ்ட எண்கள்: 2, 3
 தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1_ம் பாதம் வரை)

குடும்பம்:
வருமானம் நல்லபடி இருந்துவரும். அதற்கேற்றார்போல் செலவுகள் இருக்கக்கூடும். பணவரவு நல்லபடி இருப்பதால் அதைச் சமாளித்துவிடுவீர்கள். குடும்பச்சூழ்நிலை திருப்தி தரும். திருமண வயதில் பெண் அல்லது பிள்ளை இருப்பின் அவர்களுக்கு நல்ல வரன் அமையக்கூடும். அறிமுகமான நபர்களேயானாலும் அவர்களிடம் அளவோடு பழகுவது நல்லது. நிரந்தர நோயினால் அவதிப்பட்டு வருபவர்கள் மருந்து, மாத்திரைகளைத் தவறாது எடுத்துக்கொள்ளுங்கள். நீதிமன்ற வழக்குகளில் முன்னேற்றம் ஏற்படும்.

உத்தியோகம்:
வேலைக்கு வாகனத்தில் சென்று வருபவர்கள் தலைக்கவசம் அணிந்து செல்வது அவசியம். எதிலும் அலட்சிய போக்கு வேண்டாம். மற்றபடி அலுவலகத்தில் பிரச்சினை இராது.

தொழில்:
தொழிலதிபர்களுக்கு சிரமங்கள் ஏற்படக்கூடும். கவனம் தேவை. தங்களுக்கு நெருக்கமாக இருந்தவர்களே தங்களுக்கு எதிராகச் செயல்படுவதற்கு வாய்ப்புள்ளது.

வியாபாரம்:
விற்பனை அதிகரிக்கும். லாபத்திற்குக் குறைவிராது. புதிய முயற்சிகள் கைகொடுக்கும். சக வியாபாரிகளினால் ஏற்பட்டு வந்த பிரச்சினைகள் சரியாகும்.

பெண்மணிகள்:
பெண்மணிகளுக்கு திருப்திகரமான வாரமிது என்றே கூறவேண்டும். வேலை பார்த்துவரும் பெண்கள் பதவி உயர்வையோ அல்லது ஊதிய உயர்வையோ எதிர்பார்க்கலாம்.

அறிவுரை:
அலட்சிய போக்கை விட்டுவிடுங்கள்.

அனுகூல தினங்கள்: அக்: 22, 23, 24
பிரதிகூல தினங்கள்: அக்: 18, 19, 20, 21

அதிர்ஷ்ட எண்கள்: 1, 6
 மகரம்
(உத்திராடம் 2_ம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2_ம் பாதம் வரை)

குடும்பம்:
திருமண வயதிலுள்ள மகர ராசி அன்பர்களுக்கான வரன் தேடும் முயற்சிகளில் இறங்குவதன் மூலம் நற்செய்தி கிடைக்க வாய்ப்புள்ளது. அதனால் தீவிரமாக முயற்சிக்கவும். கணவன்-மனைவியிடையே இருந்துவந்தகருத்து வேறுபாடுகள் அனைத்தும் மறைந்து பரஸ்பர அன்னியோன்யம் நிலவும். நிதிநிலை நல்லபடி இருக்கும். விடுமுறை நாட்களையொட்டி குடும்பத்தினருடன் சுற்றுலா சென்று வருவீர்கள். தந்தைக்கு ஏற்படும் பிரச்சினையை தாங்கள் முன்நின்று தீர்த்து வைப்பீர்கள். வெளியிடங்களுக்குச் செல்லும்போது கோபுர தரிசனம் கிடைக்க வாய்ப்புள்ளது.

உத்தியோகம்:
வேலைக்குச் சென்றுவரும் அன்பர்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்தியொன்று வந்து சேரும். இதுநாள்வரை தடைபட்டிருந்த பதவி உயர்வு ஒன்று இப்போது கிடைக்க வாய்ப்புள்ளது. சக ஊழியர்களுக்கும் தங்களால் இயன்ற உதவியை செய்வீர்கள்.

தொழில்:
தொழில்துறையினருக்கு கடின உழைப்பு ஏற்பட்டாலும் அதற்கேற்ற முன்னேற்றம் இருப்பதால் நீங்கள் கவலைப்பட வேண்டாம். ஏற்றுமதித் தொழில் சிறப்பாக நடைபெற்று வரும்.

வியாபாரம்:
விற்பனை அதிகரிக்கும். லாபம் உயரும். தாங்கள் செய்துவரும் வியாபாரத்தை விரிவுபடுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவீர்கள். அதில் வெற்றிகிடைக்கும்.

பெண்மணிகள்:
பெண்மணிகளுக்கு மனநிறைவான வாரமிது. வேலைக்குச் சென்றுவரும் பெண்களுக்கு அலுவலகச் சூழ்நிலை திருப்தியளிப்பதுடன், சந்தோஜத்தையும் தரும்.

அறிவுரை:
பகையுணர்ச்சி வேண்டாம்.

அனுகூல தினங்கள்: அக்: 18, 19, 20, 21
பிரதிகூல தினங்கள்: அக்: 22, 23, 24

அதிர்ஷ்ட எண்கள்: 4, 9
 கும்பம்
(அவிட்டம் 3_ம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3_ம் பாதம் வரை)

குடும்பம்:
கும்ப ராசி அன்பர்கள் வாரத்தின் முதல் இரண்டு நாட்கள் மிகவும் கவனமாக இருந்துவர வேண்டியது அவசியம். தாங்கள் அமைதியாக இருந்தாலும் வம்பு, வழக்குகள் தங்களைத் தேடி வரக்கூடும். அத்தருணத்தில் பொறுமையாக இருந்துவருவது நல்லது. வருமானம் பாதிக்காது. என்றாலும் எதிர்பாராத வகையில் செலவுகள் ஏற்படக்கூடும். அவ்வப்போது உடல்நலன் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதால் நீங்கள் சற்று கவனமாக இருந்துவர வேண்டிய தருணமிது.

உத்தியோகம்:
வேலை பார்த்துவரும் இடத்தில் 'தானுண்டு; தன் வேலையுண்டு' என்றிருந்து வருவது நல்லது. சக ஊழியர்களின் சொந்த விஜயத்தில் தலையிடுவதோ அல்லது அறிவுரை கூறுவதோ வேண்டாம். தங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள வேலையில் மட்டும் கவனத்தைச் செலுத்தி வரவும்.

தொழில்:
தொழில்துறையினர் பண விஜயத்தில் ஜாக்கிரதையாக இருந்துவரவும். ஏனெனில், பிறரிடம் பேசிக்கொண்டு அதிக பணத்தைக் கொடுத்துவிட வாய்ப்புள்ளது. புதிய முயற்சிகளில் நிதானம் தேவை.

வியாபாரம்:
வியாபாரத்தில் பிரச்சினை எதுவும் ஏற்பட வாய்ப்பில்லை என்றாலும் கொடுக்கல்-வாங்கலில் ஈடுபடுவதைத் தவிர்த்துவிடுவது நல்லது. சக வியாபாரிகளுடன் மோதல் போக்கு உண்டாகும்.

பெண்மணிகள்:
குடும்ப நிர்வாகத்தைக் கவனித்துவரும் பெண்மணிகளுக்கு மனக் குழப்பம் அதிகரித்து காணப்படும். வேலை பார்த்துவரும் பெண்கள் அலுவலகத்தில் முன்னேற்றத்தை எதிர்பார்க்க முடியாது.

அறிவுரை:
மனதிலிருந்துவரும் குழப்பத்தை அகற்றிடுங்கள்.

அனுகூல தினங்கள்: அக்: 20, 21, 22, 23
பிரதிகூல தினங்கள்: அக்: 18, 19, 24

அதிர்ஷ்ட எண்கள்: 5, 6
 மீனம்
(பூரட்டாதி 4_ம் பாதம் முதல், உத்திரட்டாதி, ரேவதி வரை)

குடும்பம்:
மீன ராசி அன்பர்கள் இவ்வாரம் பயண மொன்றை மேற்கொள்ள வேண்டியிருக்கும். அதனால் உடல் அசதி, சோர்வு போன்றவை உண்டாகும். மனைவியின் உடல்நலனில் அக்கறை செலுத்தி வருவது நல்லது. முக்கிய பணிகள் எதுவும் இருந்தால் அவற்றை வாரத்தின் பிற்பகுதியில் மேற்கொள்ளலாம். எக்காரணத்தைக் கொண்டும் பிறருக்குக் கடன் கொடுக்கவோ அல்லது கடன் வாங்கவோ வேண்டாம். நீதிமன்றத்தில் தங்கள் மீது வழக்குகள் ஏதாவது இருப்பின் அதில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.

உத்தியோகம்:
வேலைக்குச் சென்றுவரும் அன்பர்கள் சிலருக்கு ஊர் மாற்றமோ அல்லது நிறுவன மாற்றமோ ஏற்படக்கூடும். அவ்வாறு ஏற்பட்டால் மறுக்காமல் ஏற்றுக்கொள்ளுங்கள்.

தொழில்:
தொழில் அபிவிருத்திக்கான திட்டங்களை மேற்கொண்டு வருபவர்கள் எதிலும் அவசரப்பட வேண்டாம். பொறுமை, நிதானம் மிகவும் அவசியம். மறைமுக எதிர்ப்புகளினால் மன உளைச்சல் இருக்கக்கூடும். ஏற்றுமதி- இறக்குமதித் துறையினர் முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம்.

வியாபாரம்:
வியாபார ரீதியான வெளிநாட்டுப் பயண மொன்றை மேற்கொள்ள வேண்டியிருக்கும். அதில் வெற்றிகிடைக்கும். கொடுக்கல்-வாங்கலை மட்டும் தவிர்த்துவிடுவது நல்லது. மற்றபடி பிரச்சினை எதுவும் இல்லை.

பெண்மணிகள்:
பொருளாதார நிலை நல்லபடி இருப்பதால் பெண்மணிகளுக்கு மகிழ்ச்சிகரமான வாரமிது. வேலைக்குச் சென்றுவரும் பெண்களுக்கும் வெற்றிகரமான வாரம்.

அறிவுரை:
நேரம் கிடைக்கும்போது ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்.

அனுகூல தினங்கள்: அக்: 18, 22, 23, 24
பிரதிகூல தினங்கள்: அக்: 19, 20, 21

அதிர்ஷ்ட எண்கள்: 3, 7

RSS Movies Shop

This website can secure your private information using a SSL Certificate. Information exchanged with any address beginning with https is encrypted using SSL before transmission.


About us | Register | Font Help | Feedback | Ad Tariff | Faq | Site Map
Copyright © 2010 Noble Broadcasting Corporation Private Limited . Allrights reserved.
Best view under 1024x764 Resoultion.

Error. Page cannot be displayed. Please contact your service provider for more details. (10)